Sharp Your Brain : 70 வயதிலும் உங்கள் மூளை 20 வயதைப்போல் சுறுசுறுப்பாக இருக்கணுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sharp Your Brain : 70 வயதிலும் உங்கள் மூளை 20 வயதைப்போல் சுறுசுறுப்பாக இருக்கணுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!

Sharp Your Brain : 70 வயதிலும் உங்கள் மூளை 20 வயதைப்போல் சுறுசுறுப்பாக இருக்கணுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2024 03:56 PM IST

Sharp Your Brain : 70 வயதிலும் உங்கள் மூளை 20 வயதைப்போல் சுறுசுறுப்பாக இருக்கவேண்டுமா? இந்த விஷயத்தை மட்டும் செய்தால் போதும். உங்கள் மூளை எப்போதும் கூர்மையாக இருக்கும்.

Sharp Your Brain : 70 வயதிலும் உங்கள் மூளை 20 வயதைப்போல் சுறுசுறுப்பாக இருக்கணுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!
Sharp Your Brain : 70 வயதிலும் உங்கள் மூளை 20 வயதைப்போல் சுறுசுறுப்பாக இருக்கணுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!

மூளை, உடலின் எந்த பாகத்தையும்விட ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளாலே நன்மைகளை பெறும் சிறப்பு குணம் பெற்றது. உங்கள் மூளையை கூர்மையாக வைக்கவும், இளமையுடன் இருக்கவும் நீங்கள் செய்யவேண்டியது என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

உடலுக்கு மட்டும் பலனளிப்பதில்லை உடற்பயிற்சி, மூளைக்கும் நன்மையைக் கொடுக்கிறது. வழக்கமான உடற்பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை உடலில் அதிகரிக்கிறது. குறிப்பாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. புதிய நியூரான்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. 

நினைவாற்றலை மேம்படுத்துகிறது. வழக்கமான உடற்பயிற்சிகள் செய்பவர்களுக்கு நினைவாற்றல் இழப்பு ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே வாரத்தில் பெரும்பாலான நாட்கள், நீங்கள் 30 நாட்கள் உடற்பயிற்சிகள் மற்றும் நடை அல்லது சைக்கிள் ஓட்டுவது என பயிற்சிகள் செய்யவேண்டும்.

மூளைக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள்

நாம் உண்ணும் உணவு நேரடியாக மூளையை பாதிக்கும் தன்மை கொண்டது. எனவே பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், புரதங்கள் நிறைந்த உணவுகள் உங்கள் மூளையின் இயக்கத்தை அதிகரிக்க உதவுபவை. மீன், ஆலிவ் எண்ணெய், நட்ஸ்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை உடல் மற்றும் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கக் கூடியவை. 

இதை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது உங்களுக்கு நினைவாற்றல் இழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. காய்கறிகள், பழங்கள், நட்ஸ்கள், முழுதானியங்கள், பீன்ஸ்கள் நிறைந்த உணவு மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

மூளைக்கு இடைவேளை தேவை

மூளை நன்றாக இயங்க உறக்கம் மிகவும் அவசியம். நினைவாற்றல், பிரச்னைகளை தீர்க்கும் குணம், முடிவெடுக்கும் திறன் ஆகியவை மூளையின் முக்கிய செயல்பாடுகள் ஆகும். உறங்கும்போது, மூளை நினைவுகளை தொகுத்து, நச்சுக்களை நீக்குகிறது. பெரியவர்களுக்கு 7 முதல் 9 மணி நேர உறக்கம் தேவை. இது நினைவிழப்பு ஏற்படும் பிரச்னைகளை குறைக்கும். எனவே இரவில் போதிய உறக்கத்தை உறுதிப்படுத்துங்கள். மேலும், உறங்கும் இடம் அமைதியாக இருக்கவேண்டும்.

மூளையை எப்போது சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

உங்கள் மூளையை எப்போதும், சுறுசுறுப்புடனும், சவால்களை சந்திக்கும் மனநிலையுடனும் வைத்திருப்பது உங்கள் மூளையின் கூர்மையை பராமரிக்க உதவும். உங்கள் மூளையை தூண்ட, பசில்கள், வாசித்தல், புதிய மொழியை கற்பது அல்லது ஒரு இசைக்கருவியை இசைப்பது என உங்கள் மூளைக்கு வேலையை கொடுங்கள். இதுவும் உங்களுக்கு நினைவாற்றலை குறைக்கும். எனவே இதை உங்கள் மூளைக்கு தினமும் புதிய டாஸ்க் கொடுங்கள்.

சமூக தொடர்புகளை ஏற்படுத்துங்கள்

மனஆரோக்கியத்துக்கு சமூக தொடர்புகள் முக்கியம். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்வது, உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்க உதவுவார்கள். மனஅழுத்தத்தை எதிர்த்து போராட உதவுவார்கள். இது மூளை திறனை அதிகரிக்க உதவும். 

நீங்கள் சமூகத்துடன் சிறந்த தொடர்பு கொண்டிருந்தால், உங்களுக்கு நினைவாற்றல் இழப்பு ஏற்படுவது குறையும். எனவே தினமும் மற்றவர்களுடன் சேர்ந்திருப்பதை உறுதிப்படுத்தங்கள். ஃபோனில் பேசுங்கள் அல்லது அவர்களுடன் நேரில் பேசி தொடர்பில் இருங்கள்.

தியானம் மற்றும் மன ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியத்துக்கு தியானம் நல்லது. இந்த பழக்கங்கள், மனஅழுத்தத்தை குறைக்க உதவும், கவனத்தை அதிகரிக்கும், உணர்வு ரீதியிலான நன்மைகளை மேம்படுத்தும். மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் தியானம் செய்வது நல்லது. அது மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும், நினைவாற்றலை அதிகரிக்கும். எனவே தினம் தியானம் செய்து மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

கற்றலை நிறுத்தாதீர்கள்

வாழ்நாள் முழுவதும் கற்றல் உங்கள் மூளையை கூராக்க உதவும், புதிய பழக்கத்தை கடைபிடிப்பதாகட்டும் அல்லது புதிதாக ஒன்றை படிப்பதாகட்டும், புதிய ஆர்வங்களை வளர்ப்பதாகட்டும், தொடர் கற்றல், உங்கள் மூளையை தூண்டி உங்களுக்கு நெகிழ்தன்மையை ஏற்படுத்துகிறது. 

புதிதாக ஒன்றை கற்கும்போது உங்களுக்கு திறன்கள் அதிகரிக்கும். எனவே மூளைக்கு குறைந்த சவால்களைத் தரும் செயல்களை செய்பவர்களின் மூளையைவிட புதிய விஷயங்களை கற்பவர்களின் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். எனவே உங்கள் மூளையை கூராக்க தினமும் கற்றல் அவசியம்.

மூளையின் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

கொழுப்பு நிறைந்த மீன்கள், ப்ளுபெரி, மஞ்சள், ப்ராக்கோலி, பரங்கி விதைகள், டார்க் சாக்லேட், ஆரஞ்சுகள், நட்ஸ்கள், முட்டைகள், கிரீன் டீ, காபி, அவேகேடோ, பீட்ரூட்கள், முழு தானியங்கள், கீரைகள் உங்கள் மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் உங்கள் மூளையை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கும். 

இது வீக்கத்தையும் சரிசெய்கிறது. எனவே இந்த உணவுகள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மிகவும் அவசியம். இது உங்கள் மூளையின் இயக்கத்தை அதிகரிக்கம். ஒட்டுமொத்த மனஆரோக்கியத்துக்கும் நல்லது. எனவே உங்கள் அன்றாட உணவில் இந்த ஆரோக்கிய உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.