Sex Tips : ‘இறுக்க அணச்சு ஒரு..’ கட்டிப்பிடித்தால் கிடைக்கும் 5 நன்மைகள் தெரியுமா?
நீங்கள் உங்கள் துணையை கட்டியணைப்பதால், உங்கள் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா? மருத்துவர் கூறும் இந்த விசயங்களை அறிந்து கொள்ளுங்கள்.

‘இறுக்க அணச்சு ஒரு உம்ம தரும்’ என, முத்து படத்தில் ரஜினி ஒரு டயலாக் பேசுவார். அணைப்பு இல்லாத காதலும் இல்லை, காமமும் இல்லை என்பார்கள். உண்மையில் கட்டியணைப்பது இயல்பாகவே நம் உடலுக்கு நன்மை தரும் என்கிறார் மனநல டாக்டர் பாரிக்குமார். இது தொடர்பாக நமக்கு பேட்டியளித்த அவர், கட்டியணைப்பது நம் உடலுக்குத் தரும் பயன்கள் குறித்தும் பட்டியலிட்டார். இதோ மருத்துவர் கூறும் , ‘கட்டிப்புடி’ பயன்களை பார்க்கலாம்.
1.மனஅழுத்தத்தை குறைக்கிறது: கட்டி அணைப்பது உணர்ச்சி ஆதரவாக இருக்கும், இது மனஅழுத்தத்தை குறைக்கும் என்பது சோதனைகளால் நிரூபிக்கப்பட்டது.
2.ஆரோக்கியமான ஹார்மோன்கள் சுரக்கும்: கட்டி அணைத்தால், "ஆக்ஸிட்டோசின்" என்ற ஹார்மோன் சுரக்கும், இது பாசத்தையும் நலத்தையும் ஊக்குவிக்கும்.
3.இம்யூன் அமைப்பை வலுப்படுத்துகிறது: கட்டி அணைப்பது மனநலத்தை மேம்படுத்துவதன் மூலம் உடல்நலனையும் நேரடியாக வலுப்படுத்துகிறது.
4.இயற்கை ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது: கட்டி அணைப்பது இருதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும்.
5.உறவுகளை வலுப்படுத்தும்: உறவுகளில் நெருக்கத்தை அதிகரிக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் கட்டி அணைப்பு ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
என்று டாக்டர் அந்த பேட்டியை நிறைவு செய்கிறார்.
மேலே கூறியுள்ள தகவல்களுடன், உங்களின் அன்பை, காதலை வெளிப்படுத்த அணைப்பை தவிர வேறு பெரிய சமிக்ஞை தேவையில்லை. எத்தனை கோபங்கள், தாபங்கள் இருந்தாலும் ஒரு முறை கட்டியணைத்து ஸாரி என்று கேட்டால், உங்கள் துணை, உடனே அதை ஏற்க வாய்ப்பிருக்கிறது.
வாசகர்களுக்கான குறிப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது மற்றும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக இல்லை.
