செக்ஸ் : செக்ஸ் வாழ்க்கை சிறக்க நீங்கள் படித்து வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகங்கள்!
செக்ஸ் : பாலியல் கல்வி என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு பாலியல் கட்டுக்கதைகள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கு உதவுக்கூடிய பாலியல் புத்தகங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.bச

பொதுவாகவே நமது கலாச்சாரத்தில் செக்ஸ் குறித்து எங்கும் வெளிப்படையாக விவாதிக்கப்படாது. காலம் எவ்வளவோ மாறிவிட்ட நிலையிலும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு நமக்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும் போல இருக்கிறது. குறிப்பாக பெற்றோர் - குழந்தைகளிடையே ஆரோக்கியமாக செக்ஸ் குறித்து பேசுவதற்கு இன்னும் கால மாற்றம் தேவைப்படுகிறது. இன்று அனைவருக்கும் இணையதளம் அறிவை பெருக்கிக்கொள்ளும் வசதியை கொடுத்திருக்கிறது. ஆனால் நாம் அதில் பார்க்கும் அத்தனையும் உண்மையா என்றால் கிடையாதல்லவா, எனவே உண்மையை தெரிந்துகொள்வதற்காக நாம் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் நாம் எந்த பொய்யையும், கட்டுக்கதையையும் நம்பக்கூடாது.
பாலியல் கல்வி
பாலியல் கல்வி என்பது வாலிப வயதினருக்கு மட்டுமானதல்ல, அனைத்து வயதினருக்கும் தேவையான ஒன்றுதான். பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறது. பாலியல் குறித்த அறிவு பாதுகாப்பான பாலுறவுக்கு வழிவகுக்கிறது. பாலியல் தொற்று நோய்கள் உருவாவது, தேவையற்ற கர்ப்பம் ஆகியவற்றை தவிர்க்க உதவுகிறது. பாலியல் கல்வி எப்படி உடலுறவு கொள்ள வேண்டும் என்பது குறித்து மட்டும் கூறுவதல்ல. ஒருவருக்கொருவர் புரிதல், சம்மதம், எல்லை ஆகியவற்றை தெரிந்துகொள்ளவும், ஆரோக்கிய உறவை மேற்கொண்டு பாலியல் அத்துமீறல்களை தவிர்க்கவும் உதவுகிறது. மேலும் ஒருவரின் பாலியல் உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்த உதவுகிறது. பாலியல் குறித்து தயக்கமின்றி பேசவும், பாலியல் ஆரோக்கியத்துக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.
காம சூத்திரா
வாத்ஸ்யாயானாவின் காமசூத்திரம், இதன் முலம் சமஸ்கிருத புத்தகம் ஆகும். ஆங்கில புத்தகமும் உள்ளது. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பெரும்பாலானவர்கள் உடலுறவுகொள்ளும் நுட்பங்களை விளக்கும் புத்தகமாக கருதுகிறார்கள். ஆனால் இந்த புத்தகம் அதையும் தாண்டி விளக்கம் அளிக்கிறது. காதல், உறவுகள், இன்பம் ஆகியவை குறித்து புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.