Sex Research : செக்ஸில் திருப்தி வேண்டுமா? அதிக ஆர்கஸம் கிடைக்கணுமா? எதனால் நடக்கும்? - ஆய்வு சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sex Research : செக்ஸில் திருப்தி வேண்டுமா? அதிக ஆர்கஸம் கிடைக்கணுமா? எதனால் நடக்கும்? - ஆய்வு சொல்வது என்ன?

Sex Research : செக்ஸில் திருப்தி வேண்டுமா? அதிக ஆர்கஸம் கிடைக்கணுமா? எதனால் நடக்கும்? - ஆய்வு சொல்வது என்ன?

Priyadarshini R HT Tamil
Jan 26, 2025 02:59 PM IST

Sex Research : செக்ஸில் திருப்தியை அதிகரிக்கும் காரணியான ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்று பாருங்கள்.

Sex Research : செக்ஸில் திருப்தி வேண்டுமா? அதிக ஆர்கஸம் கிடைக்கணுமா? எதனால் நடக்கும்? - ஆய்வு சொல்வது என்ன?
Sex Research : செக்ஸில் திருப்தி வேண்டுமா? அதிக ஆர்கஸம் கிடைக்கணுமா? எதனால் நடக்கும்? - ஆய்வு சொல்வது என்ன? (Pexels)

செக்ஸ், ஆர்கஸம் மற்றும் வீக்கம் 

செக்ஸ் ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக உறவுகளையும் வளர்க்க உதவுகிறது. மக்கள் செக்ஸ் கொள்வதன் மூலம் ஒருவருக்கு மனஅழுத்தம் குறைகிறது. மகிழ்ச்சி கிடைக்கிறது. மேலும் பல நன்மைகள் கிடைக்கிறது. உடல் நிலையைப் பொறுத்து, அவர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும் அல்லது குறையும் (உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் காயம், தொற்று மற்றும் மனஅழுத்தம்) வீக்கமும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ஒரு புதிய ஆய்வு மூளையின் நடவடிக்கை மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறித்து வெளியானது. அதில் டாட்டம் ஏ. ஜோலிக் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், வீக்கம் உங்கள் பாலியல் நலத்துடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ளார். உங்களின் பாலியல் இன்பம் அதிகரிக்கவும், காதல் உறவு மேம்படவும் உதவுகிறது. ஆராய்ச்சியாளர்கள் 18 முதல் 55 வயதுக்கு உட்பட்ட 158 பேர்களிடம் நடத்திய ஆய்வில், 84 சதவீதம் பேர் பெண்கள், அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் நெருக்கமான பாலியல் மற்றும் காதல் உறவில் இருந்துள்ளனர் என்பது அறியப்பட்டது.  

People's ability to have and enjoy sex gets impacted by physical conditions, like inflammation.
People's ability to have and enjoy sex gets impacted by physical conditions, like inflammation. (Freepik)

அவர் மூன்று முறை ஆராய்ச்சி கூடத்துக்கு வந்து ஆய்வுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். மாதத்தில் ஒவ்வொரு இரண்டு வாரத்துக்கு ஒருமுறையும் வருவார்கள். அவர்கள் ரத்த மாதிரிகளைக் கொடுப்பார்கள். அதை ஆராய்ச்சியாளர்கள் அளப்பார்கள். C-reactive protein (CRP) levelsஐ அளவிடுவார்கள். (இந்தப் புரதத்தை கல்லீரல் வெளியிடும். இது வீக்கத்துக்கு காரணமான திரவமாகும்) அவர்களின் பாலியல் இன்ப திருப்தி குறித்தும் ஆய்வு செய்தார்கள். அவர்களின பார்ட்னருடன் அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் அல்லது அவர்களை எவ்வளவு தவிர்த்தார்கள் என்பதெல்லாம் அளவிடப்பட்டது.

முடிவு

இந்த ஆய்வு முடிவில் வீக்கதுமும், பாலியல் திருப்தி மற்றும் ஆர்கஸம் ஆகியவற்றுடன் தொடர்புகொள்ளவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் எத்தனை முறை செக்ஸ் வைத்துக்கொண்டார்கள் என்பதும் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், அவர்களின் பார்னருடன், இணக்கத்தை அதிகரித்துக்கொள்ள விரும்பபுவது குறித்தும் ஆய்வில் கண்காணிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள், அதிக வீக்கம் தொடர்பான பிரச்னைகள் உள்ள நபர்கள் அதிக செக்ஸ்வல் திருப்தி கிடைத்ததாக தெரிவித்தனர். அவர்களுக்கு கடந்த மாதங்களில் அதிக ஆர்கஸம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

"வீக்கம் மட்டும் மக்களை திருப்திகரமான, புணர்ச்சி நிறைந்த உடலுறவை நோக்கி அல்லது விலகிச் செல்லச் தூண்டாது. அதற்கு பதிலாக, ஒரு காதல் துணையைப் பெறுவதன் பலன்களைப் பெற அதிக உந்துதல் பெற்ற நபர்கள், அதிக அளவு வீக்கத்தை அனுபவிக்கும்போது, ​​அந்த துணையுடன் அதிக பலனளிக்கும் பாலியல் அனுபவங்களைப் பெறலாம்," என்று ஆய்வு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.