Sex Education : செக்ஸ் வாழ்க்கையில் இன்பம் இல்லையா? நீங்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sex Education : செக்ஸ் வாழ்க்கையில் இன்பம் இல்லையா? நீங்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!

Sex Education : செக்ஸ் வாழ்க்கையில் இன்பம் இல்லையா? நீங்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!

Priyadarshini R HT Tamil
Jun 04, 2024 10:08 AM IST

Sex Education : செக்ஸ் வாழ்க்கையில் இன்பம் இல்லை எனில் நீங்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான். புத்தக வடிவில் உங்கள் பாலியல் அறிவை அதிகரிக்கும்.

Sex Education : செக்ஸ் வாழ்க்கையில் இன்பம் இல்லையா? நீங்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!
Sex Education : செக்ஸ் வாழ்க்கையில் இன்பம் இல்லையா? நீங்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!

பொதுவாகவே நமது கலாச்சாரத்தில் செக்ஸ் குறித்து எங்கும் வெளிப்படையாக விவாதிக்கப்படாது. காலம் எவ்வளவோ மாறிவிட்ட நிலையிலும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு நமக்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும் போல இருக்கிறது. குறிப்பாக பெற்றோர் - குழந்தைகளிடையே ஆரோக்கியமாக செக்ஸ் குறித்து பேசுவதற்கு இன்னும் கால மாற்றம் தேவைப்படுகிறது. 

இன்று அனைவருக்கும் இணையதளம் அறிவை பெருக்கிக்கொள்ளும் வசதியை கொடுத்திருக்கிறது. ஆனால் நாம் அதில் பார்க்கும் அத்தனையும் உண்மையா என்றால் கிடையாதல்லவா, எனவே உண்மையை தெரிந்துகொள்வதற்காக நாம் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் நாம் எந்த பொய்யையும், கட்டுக்கதையையும் நம்பக்கூடாது.

பாலியல் கல்வி

பாலியல் கல்வி என்பது வாலிப வயதினருக்கு மட்டுமானதல்ல, அனைத்து வயதினருக்கும் தேவையான ஒன்றுதான். பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறது. பாலியல் குறித்த அறிவு பாதுகாப்பான பாலுறவுக்கு வழிவகுக்கிறது. பாலியல் தொற்று நோய்கள் உருவாவது, தேவையற்ற கர்ப்பம் ஆகியவற்றை தவிர்க்க உதவுகிறது. 

பாலியல் கல்வி எப்படி உடலுறவு கொள்ள வேண்டும் என்பது குறித்து மட்டும் கூறுவதல்ல. ஒருவருக்கொருவர் புரிதல், சம்மதம், எல்லை ஆகியவற்றை தெரிந்துகொள்ளவும், ஆரோக்கிய உறவை மேற்கொண்டு பாலியல் அத்துமீறல்களை தவிர்க்கவும் உதவுகிறது. மேலும் ஒருவரின் பாலியல் உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்த உதவுகிறது. பாலியல் குறித்து தயக்கமின்றி பேசவும், பாலியல் ஆரோக்கியத்துக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.

காம சூத்திரா

வாத்ஸ்யாயானாவின் காமசூத்திரம், இதன் முலம் சமஸ்கிருத புத்தகம் ஆகும். ஆங்கில புத்தகமும் உள்ளது. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பெரும்பாலானவர்கள் உடலுறவுகொள்ளும் நுட்பங்களை விளக்கும் புத்தகமாக கருதுகிறார்கள். ஆனால் இந்த புத்தகம் அதையும் தாண்டி விளக்கம் அளிக்கிறது. காதல், உறவுகள், இன்பம் ஆகியவை குறித்து புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.

முக்கிய புத்தகங்கள்

தார்ஷியின் தி ப்ளூ புக், உங்களைப்பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்ற புத்தகம், சுய வழிகாட்டி, உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள உதவும் புத்தகம். இது பருவ வயதினருக்கு பாலியல் கல்வி, பெரியவர்களின் உலகில் எப்படி நுழைவது என்று விளக்குகிறது.

இதை புகழ்பெற்ற உளவியலாளர்கள் எழுதியுள்ளார்கள். உங்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பாலியல் குறித்து தெரிந்துகொள்ளும் ஆரம்ப நிலையில் இருந்தால் உங்களுக்கு இந்தப்புத்தகம் நல்ல வழிகாட்டி.

டாக்டர் அங்கீத் சந்திராவின் முழு பாலியல் கல்வி வழிகாட்டி புத்தகம், மனித பாலியல் பழக்கங்களில் உள்ள பல்வேறு கூறுகளையும் இந்த புத்தகம் விளக்குகிறது. 

ஆரோக்கியமான உறவுகள், சம்மதம், இன்பம், தொடர்புகொள்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து புரிந்துகொள்ள இந்தப்புத்தகம் உதவுகிறது. ஒவ்வொருவருக்கும் தேவையானவற்றை வழங்கக்கூடிய நம்பகமான, துல்லியமான விவரங்களை வழங்கக்கூடிய புத்தகமாக உள்ளது.

லிசா மங்கள்தாஸின் தி செக்ஸ் புக், எ ஜாய்புஃல் ஆஃப் செல்ஃப் டிஸ்கவரி, இந்த புத்தகத்தை எழுதியவர் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். பாலியலில் பல அத்தியாயங்களை விளக்குகிறது. உடற்கூறு, சுத்தம், சம்மதம், ஆர்கசம், கருத்தடை உள்ளிட்டவை அதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஆசைகள், எல்லைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை புரிந்துகொள்ள உதவுகிறது. உங்கள் உடல், மனம், உறவுகள் ஆகியவற்றை புரிந்துகொள்ள உதவுகிறது. சுயஆய்வு செய்வதற்கு உகந்த புத்தகமாக இந்தப்புத்தகம் உள்ளது. பாலியலை மகிழ்ச்சியுட்ன் புரிந்துகொள்ள இந்த புத்தகம் நல்ல சாய்ஸ்.

டாக்டர் க்யூட்ரஸ், உங்கள் உடல் குறித்து அனைத்தையும் ஒருவர் உங்களுக்கு கூறமாட்டார் என்ற புத்தகம் தனாயா நரேந்திரா எழுதியுள்ளார். இந்த புத்தகம் மனித உட்ல் குறித்த அனைத்தையும் விளக்குகிறது. இவர் டாக்டர் க்யூட்ரஸ் என இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். இந்த புத்தகம் பாலியல் உறவு குறித்து பேசாத விஷயங்களை பேசுகிறது.

இனப்பெருக்க உறுப்புகள், பாலியல் இன்பம், கர்ப்பம், மெனோபாஸ் ஆகியவை குறித்து பேசுகிறது. பாலியல் உறவு குறித்து சமூகத்தில் நிலவும் கட்டுக்கதைகளை உடைக்கிறது. பாலியல் ஆரோக்கிய குறிப்புகளையும் வழங்குகிறது. எனவே இந்த புத்தகங்களை அனைத்தையும் வாங்கிப்படித்து ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையில் இன்புற்றிருங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.