எள்ளு சட்னி : பத்து தோசை கூட பத்தாது; இந்த நேபாளி எள்ளு சட்னி மட்டும் இருந்தா போதும்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எள்ளு சட்னி : பத்து தோசை கூட பத்தாது; இந்த நேபாளி எள்ளு சட்னி மட்டும் இருந்தா போதும்! இதோ ரெசிபி!

எள்ளு சட்னி : பத்து தோசை கூட பத்தாது; இந்த நேபாளி எள்ளு சட்னி மட்டும் இருந்தா போதும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Jun 08, 2025 08:48 AM IST

எள்ளு சட்னி : பத்து தோசை கூட பத்தாது, இந்த நேபாளி எள்ளு சட்னி மட்டும் இருந்தா போதும். இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

எள்ளு சட்னி : பத்து தோசை கூட பத்தாது; இந்த நேபாளி எள்ளு சட்னி மட்டும் இருந்தா போதும்! இதோ ரெசிபி!
எள்ளு சட்னி : பத்து தோசை கூட பத்தாது; இந்த நேபாளி எள்ளு சட்னி மட்டும் இருந்தா போதும்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• வெள்ளை எள் அல்லது கருப்பு எள் – கால் கப்

• வர மிளகாய் –

• பூண்டு – 15 பல்

• இஞ்சி – ஒரு இன்ச்

• புதினா – ஒரு கைப்பிடியளவு

• மல்லித்தழை – சிறிதளவு

• புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (சூடான தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

• தக்காளி – 1

• உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

• கடலை எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• பச்சை மிளகாய் – 1

செய்முறை

1. ஒரு கடாயில் எள் மற்றும் வர மிளகாயை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். குறைவான தீயில் அதை வறுக்கவேண்டும். எள் மணம் வரும்போது இறக்கிவிடவேண்டும். அதிக தீ இருக்கக்கூடாது. தீ அதிகம் இருந்தால் கருகிவிடும். எனவே எள்ளை வறுக்கும்போது கவனம் தேவை. கவனமாக வறுத்து எடுத்து ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய பூண்டு பற்கள், இஞ்சி, புதினா, மல்லித்தழை, தக்காளி, புளிக்கரைசல், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள எள், வரமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

3. அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சட்னியில் சேர்க்கவேண்டும். அனைத்தையும் சேர்த்து கலந்தால் சூப்பர் சுவையான நேபாளி எள் சட்னி தயார்.

இதை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், 10 இட்லி அல்லத 10 தோசை கூட படபடவென சாப்பிடுவீர்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.