Sepankizhangu Varuval : சேப்பங்கிழங்கு வறுவல்; வெளியே கிரிஸ்பி, உள்ளே சாஃப்ட் என சுவையில் அசத்த 2 முறையில் செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sepankizhangu Varuval : சேப்பங்கிழங்கு வறுவல்; வெளியே கிரிஸ்பி, உள்ளே சாஃப்ட் என சுவையில் அசத்த 2 முறையில் செய்யலாம்!

Sepankizhangu Varuval : சேப்பங்கிழங்கு வறுவல்; வெளியே கிரிஸ்பி, உள்ளே சாஃப்ட் என சுவையில் அசத்த 2 முறையில் செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 14, 2024 06:23 AM IST

Sepankizhangu Varuval : சேப்பங்கிழங்கு வறுவல், வெளியே கிரிஸ்பி, உள்ளே சாஃப்ட் என சுவையில் அசத்தும் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து அசத்துங்கள்.

Sepankizhangu Varuval : சேப்பங்கிழங்கு வறுவல்; வெளியே கிரிஸ்பி, உள்ளே சாஃப்ட் என சுவையில் அசத்தும் ரெசிபி இதோ!
Sepankizhangu Varuval : சேப்பங்கிழங்கு வறுவல்; வெளியே கிரிஸ்பி, உள்ளே சாஃப்ட் என சுவையில் அசத்தும் ரெசிபி இதோ!

இந்த கிழங்கை வேகவைப்பது முதல் ஸ்டெப் அடுத்து மசாலா தயாரித்து தோல் நீக்கிய கிழங்கை அதில் சேர்த்து, மூன்றாவதாக எண்ணெயில் வறுத்து எடுக்கவேண்டும். இந்த மசாலாவுக்கு நமது வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இதை சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவை அள்ளும்.

சேப்பங்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு – அரை கிலோ

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – 3 ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

சீரகத் தூள் – 2 ஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

கடலை மாவு – 2 ஸ்பூன்

அரிசி மாவு – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இடித்த பூண்டு (விரும்பினால்)

அல்லது

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

செய்முறை -

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து, சேப்பங்கிழங்கை அதில் சேர்த்து வேகவைக்கவேண்டும். கிழங்கு வேகவைக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் கிழங்கு அதிகம் வெந்தால் குழைந்துவிடும்.

சரியான அளவு வேகவில்லையென்றால், வறுக்கும்போது நறுக்கு நறுக்கென கடிக்க நன்றாக இருக்காது. எனவே வேகும்போது, அதற்கு ஒரு கத்தியை விட்டுப்பார்க்கவேண்டும். அப்போது அது எளிதாக உள்ளே சென்றால் சரியான பதம் என்று பொருள்.

பின்னர் நன்றாக ஆறவிட்டு தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத் தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

பின்னர் சேப்பங்கிழங்கில் மசாலாவை சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து பின்னர் நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து வறுக்கவேண்டும்.

பின்னர் இடித்த பூண்டு சேர்த்து கலந்துவிட்டு சிறிது நேரம் வறுத்து எடுத்தால், சூப்பர் சுவையில் சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி. இடித்த பூண்டுக்கு பதில் இஞ்சி-பூண்டு விழுதும் சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.

மற்றொரு முறையிலும் இந்த கிழங்கை வறுக்கலாம். முதலில் கிழங்கை எண்ணெயில் சிறிய துண்டுகளாக்கி வறுத்துக்கொள்ளவேண்டும். 

பின்னர் கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். பின்னர், தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவேண்டும். 

பின்னர் மஞ்சள், மிளகாய், மல்லித்தூள்களை ஒவ்வொன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டவேண்டும். 

பின்னர் வறுத்த கிழங்கை நேரடியாக சேர்த்து வதக்கி எடுத்தால், மற்றொரு முறையில் அட்டகாசமான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி. 

இந்த கிழங்கு ஆங்கிலத்தில் டேரோ ரூட் அல்லது ஆர்பி என்று அழைக்கப்படுகிறது. கிழங்கு வகைகளில் பெரும்பாலும் கார்போஹைட்ரேட் சத்துக்கள்தான் அதிகம் இருக்கும். இந்த சேப்பங்கிழங்கில், அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது.

மாவுச்சத்தும் நிறைந்தது. ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த கிழங்கு தற்போது உலகம் முழுவதும் பரவிக்காணப்படுகிறது. இதன் தோல் வெளிர் பிரவுன் வண்ணத்திலும், உள்ளே வெள்ளை நிற சதைப்பகுதியும், இடையில் பர்பிள் வண்ணமும் இருக்கும்.

இதை சமைக்கும்போது, கொஞ்சம் இனிப்பு சுவை நிறைந்ததாக இருக்கும். உருளைக்கிழங்கு போல் தோற்றமளிக்கும். இந்த கிழங்கு செரிமானத்தை தூண்டும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவும். இதன் வறுவல் மொறுமொறு வென இருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்க எண்ணுவீர்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.