சேனைக்கிழங்கு 65 : சேனைக்கிழங்கு 65; செய்து வைத்தவுடன் பாத்திரமே காலியாகிவிடும்! இதோ சுவையான ரெசிபி!
சேனைக்கிழங்கு 65 : இதை ஸ்னாக்ஸ்போல் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். எனவே நீங்கள் இந்த ரெசிபியை செய்யும்போது கவனமாகவும், அதிகமான அளவும் செய்துகொள்ளுங்கள். ஏனெனில் அபார சுவையான இதை செய்தவுடனே வீட்டில் உள்ளவர்கள் காலி செய்துவிடுவார்கள்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சேனைக்கிழங்கு 65ஐ நீங்கள் செய்யவேண்டுமெனில், அதை எப்படி செய்வது என்று கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் சைட்டிஷ் என்று செய்தால், செய்தவுடனே காலியாகிவிடும். இதை ஸ்னாக்ஸ்போல் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். எனவே நீங்கள் இந்த ரெசிபியை செய்யும்போது கவனமாகவும், அதிகமான அளவும் செய்துகொள்ளுங்கள். ஏனெனில் அபார சுவையான இதை செய்தவுடனே வீட்டில் உள்ளவர்கள் காலி செய்துவிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
• சேனைக்கிழங்கு – கால் கிலோ
• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• மிளகாய்த் தூள் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
• கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• கார்ன் ஃப்ளார் – 2 டேபிள் ஸ்பூன்
• எண்ணெய் – தாராளமாக பொரிக்க தேவையான அளவு
மேலும் வாசிக்க - வெங்காய மசாலா சேர்த்த வித்யாசமான வெண்டைக்காய் காரக்குழம்பு; அசத்தும் ருசியில் செய்வது எப்படி?
செய்முறை
1. சேனைக்கிழங்கை க்யூப்களாக வெட்டிக்கொள்ளவேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கல் உப்பு போட்டு, நன்றாக சேர்த்து கழுவவேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை கழுவவேண்டும். அப்போதுதான் அதன் அரிக்கும் தன்மை குறையும். இல்லாவிட்டால் கிழங்கு சாப்பிடும்போது நாவில் அரிப்பை ஏற்படுத்தும்.
2. ஒரு பாத்திர்த்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும். டூத் பிக் வைத்து குத்தினால் அது உள்ளே செல்லும் அளவுக்கு வெந்து வரவேண்டும்.
3. அடுத்து வெந்த சேனைக்கிழங்கில், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கஷ்மீரி மிளகாய்த் தூள், உப்பு மற்றும் கார்ன் ஃப்ளார் மாவு கலந்து நன்றாகப் பிரட்டிவிடவேண்டும். இதை நன்றாக கலந்துவிட்டு அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் சேர்த்து பொரித்து எடுத்தால் சேனைக்கிழங்கு 65 தயார்.
இதை சாம்பார், ரசம், மோர் சாதத்துட்ன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதை விருந்துகளிலும் பரிமாறலாம்.

டாபிக்ஸ்