ரவை அடை; பட்டுன்னு செஞ்சு சாப்பிட நச்சுன்னு ஒரு டிஃபன்! இதோ ரெசிபி! வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்!
அடை செய்ய மாவு அரைக்க தேவையில்லை. ரவை இருந்தாலே போதும்.
தேவையான பொருட்கள்
ரவை – ஒரு கப்
கோதுமை மாவு – அரை கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – கால் இன்ச்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (துருவியது)
சீரகம் – அரை ஸ்பூன்
தயிர் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை – சிறிது (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் கோதுமை மாவை தண்ணீர் மற்றும் தயிர் ஊற்றி உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய கேரட், சீரகம் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும்.
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து இதை சிறிய அடைகளாக வார்த்து எடுக்கவேண்டும். ஒரங்களில் எண்ணெய் ஊற்றி நல்ல முறுவலாக எடுத்தால், சூப்பர் சுவையான ரவை அடை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், புதினா சட்னி, மல்லிச் சட்னி, குருமா, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு என அனைத்தும் நன்றாக இருக்கும்.
இந்த ரவை அடையை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் சுவையானதாக இருக்கும். இதை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள்.
நீங்கள் இட்லி அல்லது தோசைக்கு மாவு அரைக்கவில்லையென்றால் கூட கவலைப்படவேண்டாம். இந்த ரவை அடையை செய்து டிபஃனுக்கு செய்து சமாளித்துவிடலாம். மேலும் ஒரே மாதிரி டிபஃன் போரடிக்கும்போது, இது உங்களுக்கு வித்யாசமாக சுவை நிறைந்ததாக இருக்கும்.
மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்
கோவைக்காய் சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
கடலை – ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கோவக்காய் – கால் கிலோ
வடித்த சாதம் – 2 கப்
புளிக்கரைசல் – கால் கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கடலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்கவேண்டும்.
அடுத்து பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்து பொரிந்தவுடன், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து புளிக்கரைசலை சேர்த்து நன்றாக அது வற்றியவுடன், வடித்து, ஆறிய சாதத்தை சேர்த்துக் கிளறவேண்டும்.
கிளறி இறக்கினால் சூப்பர் சுவையான கோவக்காய் சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள ஒன்றுமே கூட வேண்டாம். அப்பளம், ஊறுகாயே போதுமானது. ஏனெனில் சாதத்திலே காயும் உள்ளது. கோவக்காயை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்