தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Self Love Day Not For Anyone Our Life Is Only For Us Do You Know Why Self Love Day

Self Love Day : யாருக்கானதும் அல்ல; நமக்கானது மட்டுமே நம் வாழ்வு! சுய அன்பு தினம் ஏன் தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Feb 13, 2024 07:00 AM IST

Self Love Day : யாருக்கானதும் அல்ல; நமக்கானது மட்டுமே நம் வாழ்வு! சுய அன்பு தினம் ஏன் தெரியுமா?

Self Love Day : யாருக்கானதும் அல்ல; நமக்கானது மட்டுமே நம் வாழ்வு! சுய அன்பு தினம் ஏன் தெரியுமா?
Self Love Day : யாருக்கானதும் அல்ல; நமக்கானது மட்டுமே நம் வாழ்வு! சுய அன்பு தினம் ஏன் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

சுய அன்பு, மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இது நமக்குள் வைத்திருக்கும் ஒன்று. சுய அன்பின் ஆதரவாளர்கள், ஒருவரின் உணர்வுகளும் நேசிக்கப்படவேண்டும் என்ற உணர்வை இது பலப்படுத்தும் என்று நம்புகிறார்கள்.

இந்த நாளும் காதலர் வாரத்தில் வந்தது ஒரு தற்செயல்தான். இதனால் மக்கள் அவர்களை நன்றாக அன்பு செய்யவும் கற்பார்கள். அவர்களுக்கு ரொமாண்டிக் பார்ட்னர் இல்லாவிட்டாலும், அடுத்த நாளான காதலர் தினத்தில் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.

நீங்கள் உங்களை அதிகம் காதலிக்கிறீர்களா? சிலருக்கு அதை செய்வது எளிது. சிலருக்கு அதை ஏற்பது அச்சம் தருகிறது. சுயஅன்பு என்பது சுயநலமென சிலர் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. சுயநலம் என்பது, அடுத்தவர்கள் அதை வைத்திருக்கக்கூடாது என்பதில் இருந்து வருகிறது.

சுய அன்பு என்பது, சிறந்தது இருந்தாலும், அதைவிட சிறப்பான ஒன்றை பெற முயல்வது. சுய அன்பு உங்களை வாழ்வில் வெற்றி பெற உதவி செய்யும். சுய அன்பு புதிய ஒன்று கிடையாது. இதுகுறித்து உலகளவில், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழமையான கிரேக்கத்தில் சுய அன்பு என்பது, ஆறு வகையான அன்புகளுள் ஒன்று. இது சீக்கிய, கிறிஸ்தவ தத்துவ மேதைகளால் விவாதிக்கப்பட்ட ஒன்று.

1950களில் இது மனநலத்துடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டது. இலக்கியங்கள் மற்றும் கவிதைகள் இதுகுறித்து ஆழமாக பேசியுள்ளன. இது சிறுபான்மையினருக்கு தங்களின் தன்னம்பிக்கை வளர உதவியுள்ளது. குறிப்பாக வெள்ளைதான் அழகு என்பது முக்கியமான காலகட்டத்தில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துள்ளது.

சுயஅன்பின் சக்தியை அறிந்துகொள்வதற்கு சுயஅன்பு தினம் கொண்டாடப்படுகிறது. நமது வாழ்வில் அது கொண்டிருக்கும் நேர்மறையான பாதிப்புகளையும் நாம் உணரவைக்கும். இது நமது தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகரிக்க உதவும்.

நாம் அமைதியாக சூழல்களை புரிந்துகொள்ள உதவும். தங்களை விரும்புபவர்களைவிட அடுத்தவர்கள் என்ன எண்ணுவார்கள் என்பதற்காக வாழ்பவர்கள் வாழ்வில் நிறைய துன்பங்களை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள்.

கிரிஸ்டினே ஆரிலோ முதல் சுய அன்பு நாளை துவங்கினார். அது காதலர் தினத்துக்கு ஒரு நாள் முன்னால் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சுய அன்பின் பலத்தை உங்களுக்கு காண்பிக்க உதவுகிறது. அதன் பின் வித்யாசமான உங்களின் வெளித்தோற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

காதலர் தினத்தில் தனியாக இருப்பது குறித்து சிலர் வருந்துவார்கள். தங்களைச்சுற்றி காதல் ஜோடிகள் மகிழ்ந்திருப்பது அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும். ஆனால் அவர்கள் சுய அன்பின் சக்தியை உணர்ந்துவிட்டால், தன்னம்பிக்கையுடன் நாம் கடந்து செல்லலாம். நீங்களாக இருப்பதற்காக நீங்கள் அன்பு காட்டப்படுவீர்கள்.

இந்த நாளில் விடுமுறை எடுத்துக்கொண்டு, உங்களுக்கு மன அமைதியையும், உடல் அமைதியையும் கொடுத்துவிட்டு, அனைத்து மன உளைச்சலில் இருந்தும் வெளியேறுங்கள். உங்களுக்கு தேவையானபோது உங்களை கொஞ்சிக்கொள்வதும் சுய அன்புதான்.

தனியாக கிளம்பி எங்காவது செல்லுங்கள். ஒரு சுற்றுலா செல்லுங்கள். உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று மகிழுங்கள். மற்றவர்கள் யாருமின்றி நீங்கள் மகிழலாம். நீங்கள் தனியாக செல்லும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும். அங்கு உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.

இல்லாவிட்டால் தியானம் செய்யுங்கள். உங்கள் வாழ்வின் முக்கியத்துவம் குறித்து சிந்தியுங்கள். உங்களின் குறிக்கோள் என்னவென்று சிந்தியுங்கள். நீங்கள் உங்களைப்பற்றி தனியாக சிந்திக்கும்போது, உங்களைப்பற்றி நிறைய தெரிந்துகொள்கிறீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்