பலாஃபல் எனும் கொண்டைக்கடலை கோலா உருண்டை செய்வது எப்படி என்று பாருங்க; இதோ ரெசிபி!
கொண்டைக்கடலை கோலா உருண்டை செய்வது எப்படி?
பலாஃபல் எனும் கொண்டைக்கடலை கோலா உருண்டை. இது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இதை ஸ்னாக்ஸாக சாப்பிடுவார்கள் அல்லது சைட் டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். குறிப்பாக விருந்துகளில் இதை பரிமாறினால், விருந்தினர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது என்ன உணவு என்று உங்களிடம் ரெசிபி கேட்பார்கள். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
கொண்டைக்கடலையில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
ஒரு கப் கொண்டைகடலையில் 269 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 14.5 கிராம், கொழுப்பு 4 கிராம், கார்போஹைட்ரேட் 45 கிராம், நார்ச்சத்துக்கள் 12.5 கிராம், மாங்கனீசு 74 சதவீதம், ஃபோலேட் 71 சதவீதம், காப்பர் 64 சதவீதம், இரும்புச்சத்து 26 சதவீதம், சிங்க் சத்து 23 சதவீதம், பாஸ்பரஸ் 22 சதவீதம், மெக்னீசியம் 19 சதவீதம், தியாமைன் 16 சதவீதம், வைட்டமின் பி6 13 சதவீதம், செலினியம் 11 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 10 சதவீதம் நிறைந்துள்ளது.
வயிறு நிறைந்த உணர்வை தரும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுக்குள் வைக்கிறது. கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இறைச்சி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த உணவு. புரதச்சத்து எடை மேலாண்மை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசையை வலுப்படுத்த உதவுகிறது. கொண்டைக்கடலையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களில் உள்ள புரதத்தைவிட சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் என்பதால், இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை – ஒரு கப் (8 மணி நேரம் ஊறவைத்தது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 பல்
எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – கைப்பிடியளவு
எண்ணெய் – பொரித்து எடுத்து தாராளமாக
செய்முறை
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அதை வடிகட்டி அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, எலுமிச்சை சாறு, சீரகம், மல்லித்தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
அதில் மல்லித்தழை மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும். இதை அரைக்கும்போது அதிகம் தண்ணீர் தெளித்துவிடக்கூடாது. கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும் உருண்டைகளை அப்போதுதான் பிடிக்க வேண்டும்.
ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து, அது நன்றாக சூடாகும் வரை காத்திருக்கவேண்டும். சூடானவுடன் உருண்டைகளை சேர்த்து, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை தொட்டுக்கொண்டு சாப்பிடும் சைட்டிஷ்ஷாகவும் சாப்பிடலாம் அல்லது ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம்.
மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தீர்கள் என்றால், அவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். அவர்கள் இதை சாப்பிட்டு மகிழ்வார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும். பிடிக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். அத்தனை சுவையானதாக இருக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்