Second Born Syndrome : இந்த குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் இருக்கிறதாம்’ ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!
Second Born Syndrome : இடையில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை மாற்றிக்கூறும் திறன் மற்றும் திரித்துக்கூறும் தன்மையை தவிர்ப்பார்கள். அவர்களுக்கு செல்வம் மற்றும் ஆடம்பரத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்காது. சமூக அந்தஸ்துக்காக என்று அவர்கள் எதையும் செய்துகொள்ளமாட்டார்கள்.

மூத்தப்பிள்ளைக்கும், கடைசி குழந்தைக்கும் இடையில் பிறக்கும் இரண்டாவது குழந்தை மிகவும் நேர்மையானவர்களாகவும், அடக்கமானவர்களாகவும், உடன் பிறந்தவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று கன்னட ஆராய்ச்சியாளர்கள் தற்போதைய ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். ஹெக்ஸகோ பர்ஸ்னாலிட்டி இன்வென்டரி என்ற ஆய்வு முறையைப் பின்பற்றி அவர்கள் இதை கண்டுபிடித்துள்ளார்கள். அந்த ஆய்வு இரண்டாவது பிறந்த அதாவது முதல் குழந்தைக்கும், மூன்றாவது குழந்தைக்கும் இடையில் பிறந்த குழந்தைகள் நற்பண்புகளான நேர்மை, பணிவு மற்றும் ஏற்கும் மனப்பக்குவம் ஆகியவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பிறந்த வரிசையும், ஒருவரின் தனிப்பட்ட குணங்களும்
நீங்கள் பிறந்த வரிசை என்பது உங்களின் தனிப்பட்ட ஆளுமையை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் அதாவது முதல் மற்றும் கடைசி குழந்தைக்கும் இடையில் பிறந்த இரண்டாவது குழந்தைகளுக்கு சில பிரச்னைகள் இருக்கும். அவர்கள் கூறுவதை யாரும் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு பெற்றோர்களிடம் இருந்து போதிய கவனம் கிடைக்காது. மற்றவர்களும் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் பிறந்த குழந்தைகளாக இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் புறக்கணிப்பை உணர்வீர்கள். ஆனால் இந்த குழந்தைகளுக்கு ஏற்படும சிண்ட்ரோமை தீர்க்க இந்த ஆய்வு உதவுகிறது.
இரண்டு குழந்தைகளுக்கு இடையில் பிறந்த குழந்தையின் ஆளுமைத்திறனை ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. அவர்கள் அதிக நேர்மையானவர்களாகவும், பணிவு கொண்டவர்களாகவும், அவர்களுக்கு மூத்த மற்றும் இளைய குழந்தைகள் இருவரையுடம் விட அனைவரிடமும் ஒருங்கிணைந்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆராய்ச்சியை கனட ஆராய்ச்சியாளர்கள் மைக்கேல் ஆஷ்டான் மற்றும் கிபியோம் லீ என்பவர்கள் செய்துள்ளனர்.
ஆய்வு முறை
இந்த ஆய்வுக்கு அவர்கள் ஹெக்ஸாகோ பர்ஸினாலிட்டி என்ற நேர்மை, பணிவு மற்றும் ஏற்கும் திறன், உணர்வுத்திறன் மற்றும் திறந்த மனது ஆகிய பண்புகளை அளக்கும் முறையை கையாண்டுள்ளார்கள். அதன் முடிவுகளில் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் பிறந்த குழந்தைகள் நேர்மை, பணிவு மற்றும் ஏற்கும் திறன் ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். அவர்கள் மற்றவர்களை அதிகம் மன்னிக்கிறார்கள். அதிகம் சமாதானப்படுத்துகிறார்கள், அதிகம் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அவர்களின் கோவத்தை சிறப்பாக கையாள்கிறார்கள்.
இடையில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை மாற்றிக்கூறும் திறன் மற்றும் திரித்துக்கூறும் தன்மையை தவிர்ப்பார்கள். அவர்களுக்கு செல்வம் மற்றும் ஆடம்பரத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்காது. சமூக அந்தஸ்துக்காக என்று அவர்கள் எதையும் செய்துகொள்ளமாட்டார்கள். இந்த பண்புகள் கடைசிக்குழந்தைக்கும் உள்ளது. ஆனால் மூத்தக்குழந்தைகள் இந்தப்பண்புகளில் பிந்துவதாக ஆய்வு கூறுகிறது.
ஆய்வுக்கான முன்னெடுப்பு
பிறப்பு வரிசை ஒருவரின் குணத்தை நிர்ணயிக்கும் என்பது குறித்த ஆய்வுகளை ஆஸ்திரியாவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஆல்ஃபிரட் அட்லெர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்து வைத்தார். அது முதல் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. மூத்த குழந்தைகள்தான் பொறுப்பானவர்களாக இருப்பார்கள், கடைசிக் குழந்தைகள் ஈடுபாட்டுடன் இருப்பார்கள், இரண்டாவது குழந்தைகள் அதிகம் எதையும் கண்டுகொள்ளமாட்டார்க என்ற கருத்து சமுதாயத்தில் நிலவி வந்தது. ஆனால் இந்த ஆய்வுகள் அதற்கு புதிய கோணம் கொடுக்கின்றன.
மற்றொரு ஆய்வு பிறப்பு வரிசைக்கும், ஆளுமைக்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிடுகிறது. எனினும் இந்த ஆய்வின் அடிப்படையில் நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் பிறந்த குழந்தைகளாக இருந்தால் மார்தட்டிக்கொள்ளலாம். அரசியல் அறிஞர் மார்டின் லூதர் கிங், அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க தொழிலதிபர் வாரன் பஃபட் என அனைவரும் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் பிறந்தவர்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்