Sea Water : கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் சரியான விதிமுறைகள் பின்பற்றாவிட்டால் என்னவாகும்?
Sea Water : கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் சரியான விதிமுறைகள் பின்பற்றாவிட்டால் என்னவாகும்?

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்த ஓர் அலசல்.
ஆண்டுக்கு மிகக்குறைந்த மழைப்பொழிவை பெறும் இஸ்ரேலில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவதில் வியப்பில்லை.
ஆனால் சென்னை போன்ற மழைப்பொழிவு அதிகம் உள்ள இடங்களில் பெய்யும் மழையை நீர்நிலைகளில் தேக்கி, அதை குடிநீராக பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆற்றல் அதிகம் தேவைப்படும் மற்றும் கழிவுகளால் கடல்நீர் மேலும் உப்பாகி உள்ளூர் தாவர மற்றும் மீன் வளத்தையும் பாதிக்கும் கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்து, அவற்றில் நீரைத்தேக்கி அதை குடிப்பதற்கு பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது என ஜனகராஜன் உட்பட பல நீரியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு நெம்மேலியில் 11 ஆண்டுகளாக 100 எம்எல்டி (Million Litres Daily) திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்தி வந்தாலும், தற்போது அதன் திறன் 60 – 65 எம்எல்டி ஆக குறைந்துள்ளது.
அதற்கு காரணங்கள்
பழைய உறுப்பு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது
முறையான பராமரிப்பின்மை
தொழில்நுட்பத்தை மேம்படுத்தாமல் இருத்தல் போன்றவை.
இதனால் 914.4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் இத்திட்டத்தால் மக்களுக்கு உப்புத் தண்ணீரே வழங்கப்படுகிறது.
இந்த குடிநீரில் உப்புத்தன்மை, Total Dissolved Solids (TLD) அதிகம் இருப்பதால் குடிநீர் வரும் குழாய்கள் எளிதில் துருப்பிடித்தும், உப்புத்தன்மை அதிகமிருப்பதால், தலைகீழ் சவ்வூடு பரவல் (Reverse Osmosis) சவ்வுகளை ஆண்டுகள் 2 -3 முறை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், அடையார், தரமணி, நந்தனம் போன்ற தென்சென்னைப் பகுதிகளும், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக குடிநீரைப் பெறுகின்றன.
1000 லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்ய ரூ.35 முதல் 40 செலவாகிறது.
குடிநீரில் உப்புத்தமை அதிகமிருந்தால், தலைகீழ் சவ்வூடு பரவல் சவ்வுகள் சரிவர செயல்படவில்லை என்றும், அதிக உப்பு சவ்வுகளில் படிவதால், அவற்றின் திறன் குறைந்துபோயுள்ளது என்றும், திறனை அதிகரிக்க அவை உடனே மாற்றப்பட வேண்டும் என இருந்தும் சென்னை மெட்ரோ நிறுவனம் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உப்பு அதிகம் படிந்த சவ்வுகளை மாற்றாமல் உப்பை வடிகட்ட பயன்படுத்தினால், குடிநீரில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதுடன், திறனை மேம்படுத்த ஆற்றலின் (Energy) தேவையும் அதிகமாக்க வேண்டிய சூழல் எழுவதால், ஆற்றலும் வீணாவதை தடுக்க முடியாமல் போகிறது.
வங்காள விரிகுடா நீரில் TDS, 35000 ppmக்கு அதிகம் என்ற அளவில் உள்ளது. இச்சூழலில் அறிவியல் விதிகளின் படி 3 – 5 ஆண்டுகளுக்குள் தலைகீழ் சவ்வூடு பரவல் சவ்வுகளை மாற்ற வேண்டும் என்பது விதியாக இருக்க, சென்னை மெட்ரோ நிறுவனமோ 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சவ்வுகளை மாற்றுகிறது.
சென்னை வாட்டர் போர்ட் (Water Board) பிரச்னை பூதாகரமாக மாறியவுடன், பழைய சவ்வுகளை மாற்றி புது சவ்வுகளை பொருத்தும் பணிக்கான டெண்டரை வெளியிட்டு அதை 5 ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்ற முயற்சிகளை எடுத்து வருவதாகவும், இன்னும் 3 மாதங்களில் பணி நிறைவடைந்து பழையபடி 100 எம்எல்டி திறனில் இயக்க முயற்சிகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குடிநீரில் TDSன் அளவு 300ppm க்கு கீழாக இருக்க வேண்டும்.
கட்டிடம் கட்ட திட்ட அனுமதி பெறாமலே சென்னையில் MGM மருத்துவமனை, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதை கண்டுகொள்ளாத சென்னை மாதகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) இரண்டிற்கும் தலா 5 லட்ச ரூபாய் அபராதமும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 2 லட்ச ரூபாயும், MGM மருத்துவமனைக்கு ரூ.25 லட்ச ரூபாய் அபராதமும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்ததிலிருந்து, இவ்வமைப்புகள் சென்னை மெட்ரோ நிறுவனம் போன்று அக்கறையற்று செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனியாவது திருந்தி அறிவியல் கருத்துகளை பின்பற்றுவது அவசியம்.
நன்றி – மருத்துவர் புகழேந்தி.

டாபிக்ஸ்