சேமிப்பு : ‘காசு, பணம், துட்டு, மணி, மணி’ சேமிப்பது மிகவும் கஷ்டம்; பணக்காரர் ஆக என்ன செய்யலாம்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சேமிப்பு : ‘காசு, பணம், துட்டு, மணி, மணி’ சேமிப்பது மிகவும் கஷ்டம்; பணக்காரர் ஆக என்ன செய்யலாம்?

சேமிப்பு : ‘காசு, பணம், துட்டு, மணி, மணி’ சேமிப்பது மிகவும் கஷ்டம்; பணக்காரர் ஆக என்ன செய்யலாம்?

Priyadarshini R HT Tamil
Published Mar 14, 2025 11:04 AM IST

சேமிப்பு : உங்களிடம் சேமிப்பு பழக்கம் இல்லை என்ற வருத்தம் உள்ளதா? எப்படி பணக்காரர் ஆகும் அளவுக்கு சேமிக்கலாம் என்று பாருங்கள்.

சேமிப்பு : ‘காசு, பணம், துட்டு, மணி, மணி’ சேமிப்பது மிகவும் கஷ்டம்; பணக்காரர் ஆக என்ன செய்யலாம்?
சேமிப்பு : ‘காசு, பணம், துட்டு, மணி, மணி’ சேமிப்பது மிகவும் கஷ்டம்; பணக்காரர் ஆக என்ன செய்யலாம்?

சிறிய சேமிப்பு

சிறிய சேமிப்புகள் குறித்து குறைத்து மதிப்பிடாதீர்கள். பணத்தை நீங்கள் சிறிய அளவில் சேமிப்பது கூட, அதிக நாட்களாகும்போது, அது பெரிய அளவாக உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.

கிரடிட் கார்ட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்

நீங்கள் ஒவ்வொரு முறை கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போதும் கவனமாக இருக்கவேண்டும். கடன் நல்ல கிடையாது என்பதை நினைவில்கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையைக் கொடுக்காது. உங்களால் கடனை வைத்துக்கொண்டு சொத்து சேர்க்க முடியாது.

எங்கு பணத்தை அதிகம் செலவழிக்கிறீர்கள் என்பதை பாருங்கள்

உங்களின் மாத வருமானத்தை நீங்கள் முதலில் கணக்கிடவேண்டும். அதில் எதற்காக நீங்கள் தெரியாமல் அதிகம் செலவிடுகிறீர்கள் என்பதை பார்க்கவேண்டும். அது நீங்கள் உணவில் வீணாக்கலாம் அல்லது நீங்கள் அணியாத உடையில் அதிகம் செலவிடலாம். அது எது என்று கண்டுபிடியுங்கள்.

பணத்தை முறையாக செலவிடுங்கள்

மற்றவர்களை கவர்வதற்கான நீங்கள் பொருட்களை வாங்கக்கூடாது. அதற்கு பதில், உங்களை சிறப்பாக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் பணத்தை செலவிடலாம். எனவே எதற்கு செலவிடவேண்டும் என்ற புரிதல் இருக்கவேண்டும்.

பேரம் பேசி பணத்தை சேமிப்பது எப்படி என்று பாருங்கள்

நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும், அந்த ரூபாயை சம்பாதித்ததற்கு சமம் என்பதை மனதில்கொள்ளுங்கள். எப்படி பேரம் பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள். சிறப்பான தேர்வுகளை தேர்ந்தெடுங்கள். குறிப்பாக பணத்தை சேமிக்கும் சிறந்த வழிகளை தேர்ந்தெடுத்து சேமியுங்கள். இந்த திறன் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்மை தரும்.

எப்படி முதலீடு செய்வது?

முதலீடு செய்வது என்பது ஒரு திறமை. ஒருவருக்கு அவரின் பணத்தை வளர்க்கும் வழி தெரிந்திருக்கவேண்டும். நீங்கள் முதலீடு செய்ய எத்தனை விரைவாகத் துவங்குகிறீர்களோ, அத்தனை செல்வத்தை நீங்கள் நாட்கள் செல்லச்செல்ல சேமிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

‘விரைவில் பணக்காரர்’ என்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

நீங்கள் ‘விரைவில் பணக்காரர்’ என்று உங்களை கவரும் விளம்பரங்கள் அத்தனையும் மோசடிதான். உங்களுக்கு விரிக்கப்பட்ட வலைதான் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மாறாக நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் அந்த திட்டங்கள் குறித்து நீங்கள் முழுவதும் தெரிந்துகொள்ளுங்கள். எதில் சேமித்தாலும், எங்கு சேமித்தாலும் பாதுகாப்பு அவசியம். எனவே திட்டங்கள் மற்றும் லாபங்கள் குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் விருப்பங்கள் மற்றும் தேவைகள்

உங்களுக்கு தேவைகள் மற்றும் விருப்பங்கள் இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க தெரியவேண்டும். இந்த திறன் உங்களை பொருளாதார ரீதியான நீண்ட நாட்களுக்கு சிறப்பாக வைத்திருக்கும்.

அவசர கால நிதி

எப்போது கையில் அவசர கால நிதியை வைத்திருங்கள். ஏனெனில் அவசர காலம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த சூழலில், உங்களுக்கு பொருளாதார நிலைத்தன்மை என்பது முக்கியம். அதுதான் உங்களை பாதுகாக்கும்.

பல வழிகளில் வருமானத்தை ஈட்ட முயலுங்கள்

உங்களின் வருமானத்துக்காக ஒரே ஒரு வழியை மட்டும் சார்ந்திருக்கக்கூடாது. நீங்கள் பல்வேறு கூடுதல் வருமான வழிகளையும் தேடவேண்டும். வாடகை, வணிகம், முதலீடுகள் என நீங்கள் உங்கள் பொருளாதார பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ளவேண்டும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.