தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Save Wetland What Can Be Done To Save Wetlands While Celebrating World Wetlands Day

Save Wetland : உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடும் வேளையில் ஈர நிலங்களை காக்க என்ன செய்ய வேண்டும்?

Priyadarshini R HT Tamil
Feb 03, 2024 11:50 AM IST

Save Wetland : உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடும் வேளையில் ஈர நிலங்களை காக்க என்ன செய்ய வேண்டும்?

Save Wetland : உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடும் வேளையில் ஈர நிலங்களை காக்க என்ன செய்ய வேண்டும்?
Save Wetland : உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடும் வேளையில் ஈர நிலங்களை காக்க என்ன செய்ய வேண்டும்?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தாண்டு (2024) ஈரநிலங்களை காக்க "ஈரநிலங்களும், மனித நலன்களும்" என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஈரநிலங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரநிலங்களால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

நீரை தூய்மைப்படுத்துதல்

நீரை உள்வாங்கி வெள்ள அபாயத்தை குறைத்தல்

புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்த கார்பன் சேமிப்பு கிடங்காக பணிசெய்தல் (1 ஏக்கர் ஈரநிலம், 81-216 மெட்ரிக் டன் கார்பனை உள்வாங்கும் தன்மை கொண்டது)

ஈரநிலங்கள் பாழ்பட முக்கிய காரணங்கள்

விவசாய நிலங்களில் இருந்து ஈரநிலத்தில் கலக்கும் கழிவுகள் (இதில் செயற்கை பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது)

ஆலைக் கழிவுகள் ஈரநிலத்தில் கலப்பது.

குப்பைகள் கொட்டப்படுதல்,

ஆக்கிரமிப்புகள்

போன்றவை ஈரநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழக அரசு தற்போது இந்தியாவிலேயே அதிக ராம்சார் குறியீடு பெற்ற இடங்கள் (16) இருப்பது குறித்து பெருமை பேசிக்கொண்டாலும், 3 முக்கிய செய்திகள் கவலை அளிப்பதாகவே உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் குறியீடுபெற்ற பின்னரும், ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்டுதல் அங்கு தொடரத்தான் செய்கிறது.

இதில் ELCOT, NIOT போன்ற அரசு நிறுவனங்களே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. பெருங்குடி குப்பை கொட்டும் இடமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ளது.

இந்த நாளை ஒட்டியாவது, நீதிமன்ற, பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஈரநிலமான பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்புகள் விரைவாக அகற்றப்பட வேண்டும்.

சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து காக்க பள்ளிக்கரணை சதுப்புநிலம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை அரசும், மக்களும் உணர்ந்து, அதை மீட்டெடுக்க விரைந்து கள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பரந்தூர் விமானநிலையம் அமைக்க திட்டமிட்ட இடத்தில் 2682.62 ஏக்கர் நிலங்கள் ஈரநிலங்கள் என்பதை உணர்ந்து, அதை காக்க வேறு இடத்தில் விமானநிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

விமான நிலைய இடத்தை மாற்றாமல், பரந்தூர் பகுதியில் ஈரநிலங்கள் கண்டறியப்பட்டு அவை காக்கப்படும் என்பது சாத்தியமற்ற ஒன்று. எண்ணூர் ஈரநிலங்களை காக்க அரசு 40 கோடிகளை ஒதுக்கியும், ஆக்கிரமிப்புகள் (650 ஏக்கருக்கு மேல்) அங்குள்ள குழு தொழிற் நிறுவனங்களால் (Industrial Clusters) ஏற்டும் பாதிப்புகளை, எண்ணெய் கசிவு, அம்மோனியா கசிவை அரசால் தடுக்க முடியவில்லை.

இதனால் ஈரநிலங்களுக்கு பாதிப்பு நிச்சயம் இருக்கும்.

அலையாத்தி காடுகளை காப்பது முக்கியம் என்று அரசு கூறிவந்தாலும், எண்ணூர் எண்ணெய் கசிவால் அலையாத்தி காடுகள் (Mangroves) பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்தாண்டு Wetlands-Human Wellbeing- theme ஐ கருத்தில்கொண்டாவது தமிழக அரசு ஈரநிலங்களை காக்க முன்வர வேண்டும்.

2.2.24 அன்று சென்னை உயர்நீதிமன்றம், Indian Statistical Institute நிறுவனத்திற்கு "கழுவேலி" என இருந்த நிலத்தை (ஈரநிலம்) புஞ்ஜை தரிசு புறம்போக்கு என சட்டவிரோதமாக மாற்றி, பின்னர் அதை கட்டிடப்பகுதியாக தமிழக வருவாய்துறை அறிவித்தது (3.23.80ஹெக்டேர் நிலம் - காரப்பாக்கம் கிராமம், சோலிங்கநல்லூர் தாலுகா) செல்லாது என தீர்ப்பளித்தது ஈரநிலங்களின் பயன்பாட்டை வருவாய்துறையினரே (அரசே) உணராமல், சென்னை வெள்ளத்திற்கு வித்திடும் (கழுவேலி நீர் பள்ளிக்கரணைக்கு சென்று பின்னர் அதிகப்படியான நீர் பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது) போக்கை கண்டித்து, அந்நிறுவனம் 5 கோடி செலவழித்து ஆக்கிரமித்த பகுதியை முற்றிலும் நீக்க வேண்டும் என உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.

தீர்ப்பில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் ஈரநிலங்களை பாதுகாக்க பல உத்தரவுகள் பிறப்பித்தும், அதை துளியும் மதிக்காத அரசு அதிகாரிகளின் போக்கை உயர்நீதிமன்றம் வன்மையாக சாடியுள்ளது. எனவே அரசு உடனடியாக ஈரநிலங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி - மருத்துவர் புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்