சத்துமாவு கஞ்சி; தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் துள்ளி குதிப்பீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சத்துமாவு கஞ்சி; தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் துள்ளி குதிப்பீர்கள்!

சத்துமாவு கஞ்சி; தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் துள்ளி குதிப்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 06, 2024 02:22 PM IST

சத்துமாவு கஞ்சி; தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் துள்ளி குதிப்பீர்கள்!

சத்துமாவு கஞ்சி; தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் துள்ளி குதிப்பீர்கள்!
சத்துமாவு கஞ்சி; தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் துள்ளி குதிப்பீர்கள்!

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் என அனைத்தும் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதில் உள்ள கால்சியச்த்துக்கள் சத்துமாவை எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவ வைக்கிறது. ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. சத்துமாவில் உள்ள கார்போஹைட்ரேட்கள், நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். உடல் எடை குறைக்க உதவுகிறது. இந்த சத்து மாவை மோருடன் சேர்த்து பருகினால், உடல் எடையை குறைக்க அது உதவுகிறது. சரும ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. சத்துமாவு சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. சத்துமாவு கஞ்சி உடல் முழுவதும் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அது உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த சத்துமாவு கஞ்சியை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

முந்திரி – 2 ஸ்பூன்

பாதாம் – 2 ஸ்பூன்

சிவப்பு அரிசி – 25 கிராம்

பார்லி – 25 கிராம்

ஜவ்வரிசி – 25 கிராம்

பச்சை பயறு – 25 கிராம்

மக்காச்சோளம் – 100 கிராம்

கேழ்வரகு – 100 கிராம்

கம்பு – 100 கிராம்

வெள்ளைச் சோளம் – 100 கிராம்

கோதுமை – 25 கிராம்

தினை – 25 கிராம்

பட்டாணி – 25 கிராம்

பொட்டுக்கடலை – 25 கிராம்

வேர்க்கடலை – 25 கிராம்

ஏலக்காய் – ஒரு ஸ்பூன்

கருப்பு அரிசி – 25 கிராம்

செய்முறை

ஒரு கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் குறைவான தீயில் வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் ஆறவைத்துக்கொள்ளவேண்டும். இதை மில்லில் கொடுத்து அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் இரண்டு மணி நேரம் ஆறவைத்து மூடி போட்டு காற்றுபுகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

கஞ்சி செய்யும் முறை

தேவையான பொருட்கள்

சத்து மாவு கஞ்சி – ஒரு ஸ்பூன்

பால் – ஒரு டம்ளர்

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சத்துமாவை கரைக்க வேண்டும். நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். காய்ச்சும்போது இடைவிடாமல் கிளறவேண்டும். பின்னர் அதில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பின்னர் வெல்லம் சேர்த்து பருகவேண்டும்.

இதில் நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி சேர்த்தும் பருகலாம். ஏலக்காய், சுக்குப்பொடி என அனைத்தும் தூவி பருகலாம். இதை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும். தினமும் காலையில் ஒருமுறையும், மாலையில் ஒருமுறையும் இதை பருகி வந்தால் உடலில் எந்த நோய்களும் வராது.

இதுபோன்ற ரெசிபிக்கள், தகவல்களை அன்றாடம் தொகுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்கு வழங்கி வருகிறது. எனவே அவற்றை படித்து பயன்பெற எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.