மார்டன் லுக்கைத் தரும் சமஸ்கிருதப் பெயர்கள்; உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மார்டன் லுக்கைத் தரும் சமஸ்கிருதப் பெயர்கள்; உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது!

மார்டன் லுக்கைத் தரும் சமஸ்கிருதப் பெயர்கள்; உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Dec 22, 2024 12:27 PM IST

உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற அழகிய சமஸ்கிருதப் பெயர்கள்.

மார்டன் லுக்கைத் தரும் சமஸ்கிருதப் பெயர்கள்; உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது!
மார்டன் லுக்கைத் தரும் சமஸ்கிருதப் பெயர்கள்; உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது!

ஆரவ்

ஆரவ் என்றால் அமைதியான என்ற பொருள். தனிமையான, ரம்மியமான போன்ற எண்ணற்ற அர்த்தங்களைத்தரும் பெயராகும். இந்த பெயரைக்கொண்டவர்கள் எப்போதும் அமைதியை கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். இந்தப்பெயர் மார்டனாகவும் இருக்கும். அதே நேரத்தில் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட தேர்வுகளுள் ஒன்றான பெயராகவும் இருக்கும்.

இவான்

இவன் என்றால் அரசனுக்கு உரிய தன்மைகளை கொண்ட நபர் என்பது அர்த்தமாகும். இந்தப்பெயருக்கு வலுவான மற்றும் நவீனமான, அர்த்தமுள்ள பெயர். உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சூட்ட அவர்களின் எதிர்காலம் வளமாகும். கருணை, புகழ் மற்றும் யதார்த்தமான பெயராகும்.

வேதாந்த்

வேதங்களின் அறிவைப் பெற்றவர் என்பது இந்தப் பெயரின் அர்த்தமாகும். இவருக்கு ஞானம் அதிகம். இது ஆன்மீன புரிதலைக் கொண்டவர் என்பதைக் குறிக்கிறது. இந்த பெயரை உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சூட்டினால், அது அவர்களுக்கு அர்த்தமுள்ள மார்டன் பெயராகும். இதை உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சூட்டி, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.

துருவ்

துருவ் என்றால், நிலையான, நிலைத்தன்மை மற்றும் அசையாத என்று பொருள். துருவ நட்சத்திரம் என்பதையும் குறிக்கும். இந்தப்பெயர் வலுவான, அனைத்து காலத்துக்கும் ஏற்ற பெயராகும். இதற்கு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. இது உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது.

அனாய்

அனாய் என்றால் பலம் மற்றும் தெய்வீக குணம் என்று பொருள். இந்தப்பெயர் கடவுள் விஷ்ணுவுடன் தொடர்புகொண்ட பெயராகும். இது சக்திவாய்ந்த மற்றும் அர்த்தமுள்ள பெயராகும். உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயரும் ஆகும்.

கியான்

கியான் என்றால், கடவுளின் கருணை என்று பொருள், இது தெய்வீக சக்தி என்பதையும் குறிக்கும். பண்டைய கால ஞானத்தின் தெய்வீக குணத்தை எடுத்துக்காட்டும் பெயராகும். இதவும் அர்த்தமுள்ள மற்றும் நவீன என்று பொருள். இது உங்கள் ஆண் குழந்தைக்கு ஏற்ற பெயராகும்.

ரேயான்

ரேயான் என்றால், பிரபலமான, கருணை மற்றும் பெருந்தன்மையான குணம் கொண்ட நபர் என்பதைக் குறிக்கிறது. இது அரச குடும்பத்தினர் என்பதை குறிக்கும் பெயராகும். இது சிறப்பான மற்றும் எல்லா காலத்துக்கும் ஏற்ற ஆண் குழந்தையின் பெயராகும்.

விவான்

விவான் என்றால் ஆற்றல் மற்றும் உயிர் சக்தி என்று பொருள். இது சூரியனின் கதிர்கள் மற்றும் பிரகாசமானவர் ஆகிய அர்த்தங்களைக் கொடுக்கிறது. இந்தப்பெயர் நவீனமான பெயராகவும், நல்ல தேர்வாகவும் உள்ள பெயர்.

இஷான்

இஷான் என்றால், செல்வம், பக்தி என்ற பொருள். இந்தப்பெயர், இறைவன் சிவனின் பெயராகவும் உள்ளது. இந்தப்பெயருக்கு சூரியனின் ஆற்றல், அறிவு என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இந்தப்பெயருக்கு அதிகப்படியான செல்வம் என்ற அர்த்தமும் உள்ளது. இந்தப்பெயரும் மார்டனான பெயர். இதையும் எல்லா காலத்தக்கும் ஏற்றது.

அத்வே

அத்வே என்றால், தனித்தன்மையான நபர் மற்றும் அதிகளவு தனித்தன்மையான என்ற அர்த்தங்களைக் தரும் பெயராகும். குறிப்பாக, இதற்கு தனித்தன்மையான என்ற அர்த்தம் உள்ளது. இந்தப்பெயர் நவீனமான பெயர் மற்றும் அர்த்தமுள்ள ஆண் குழந்தைகளின் பெயர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.