தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Samsung Galaxy Z Fold 4 And Samsung Galaxy Z Flip 4 Prices In India Revealed

ராயல் என்பீல்டு பைக்குகளை விட அதிக விலையில் சாம்சங் புதிய ஜெனரேஷன் ஸ்மார்ட்போன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2022 05:45 PM IST

Samsung Galaxy Z Fold 4 மற்றும் Samsung Galaxy Z Flip 4 ஆகிய இரண்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாடல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டும் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேற்கூறிய போன்களின் விலையும், அதன் ப்ரீ புக்கிங் ஆஃபர்கள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

சாம்சங் Fold மற்றும் Flip மாடல்களின் விலையை அறிவிப்பு
சாம்சங் Fold மற்றும் Flip மாடல்களின் விலையை அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து Samsung Galaxy Z Fold 4 மற்றும் Samsung Galaxy Z Flip 4 ஆகிய மாடல் போன்கள் அறிமுகப்படுத்தப்போதிலும் விலை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது இந்தியாவில் இந்த போன்கள் விற்கப்படும் விலைகளை சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி Fold மாடல் போன்கள் ரூ. 1, 54,999, Flip மாடல் ரூ. 89, 999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ப்ரீ புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது எனவும், இன்று முதல் தொடங்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில்,Fold மாடல் போன்களின் விலையானது ராயல் என்பீல்டு பேசிக் மாடல் பைக்குகளை விட அதிகமாகவே அமைந்துள்ளது.

இந்த போன்களை முன்னரே ப்ரீ புக் செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் மேற்கொண்டு ஆர்வத்தை கிளப்பியுள்ளனர்.

Samsung Fold மற்றும் Flip போன்களின் ப்ரீ புக்கிங் சலுகைகள்

இந்த போன்களில் Fold மாடலை ப்ரீ புக் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 34, 999 மதிப்புள்ள Galaxy watch 4 classsic 46 mmஐ வெறும் ரூ. 2, 999 செலுத்தி வாங்கிகொள்ளலாம். கூடுதலாக எச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்துவோர் ரூ. 8000 கேஷ்பேக் பெறலாம்.

அதேபோல் Flip மாடல் போன்களை புக் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 31, 999 மதிப்பு Galaxy watch 4 classsic 42 mmஐ ரூ. 2, 999 மட்டும் செலுத்தி வாங்கிகொள்ளலாம். கூடுதலாக எச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்துவோர் ரூ. 7000 கேஷ்பேக் பெறலாம். இந்தஇரண்டு போன்களுக்கும் வழங்கப்படும் கேஷ் பேக்குகளை அப்க்ரேட் போனஸாகவும் பயன்படுத்தலாம்.

ப்ரீ புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 11, 999 மதிப்புள்ள ஓர் ஆண்டுகளுக்கான சாம்சங் கேர் ப்ளஸ் சேவையை ரூ. 6.000க்கு பெறலாம். மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ மூலம் 24 மாதங்கள் தேர்வு செய்தும் பணத்தை செலுத்தலாம்.

WhatsApp channel