தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Sambar Recipe Tirunelveli Special Idicha Sambar With A Delicious Taste Try This Once

Sambar Recipe: மணமணக்கும் சுவையில் திருநெல்வேலி ஸ்பெஷல் இடிச்ச சாம்பார்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 07, 2024 09:17 AM IST

நீங்கள் இப்படி ஒருமுறை திருநெல்வேலி இடிச்ச சாம்பார் செய்து பாருங்க. இதன் ருசி அருமையாக இருக்கும்.

சாம்பார் ரெசிபி
சாம்பார் ரெசிபி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு 150 கிராம்

தக்காளி 1

சின்னவெங்காயம் 100 கிராம்

முருங்கைகாய் 1

கத்தரிக்காய் 2

காரட் 1

அவரைக்காய் 5

பூசணிக்காய் - 50 கிராம்

மாங்காய்

பச்சை மிளகாய் 1

உப்பு தேவையான அளவு

மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

எண்ணெய்

மல்லிவிதை 2 ஸ்பூன்

துவரம் பருப்பு 1 ஸ்பூன்

உளுந்து 1/2 ஸ்பூன்

சீரகம்1 ஸ்பூன்

வெந்தயம் அரை ஸ்பூன்

வரமிளகாய் 8

கறிவேப்பிலை

மல்லி இலை

அரிசி

தேங்காய்

சின்ன வெங்காயம்

பூண்டு

புளி

செய்முறை

துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து கொண்டு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணிலியில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 2 டேபிள் ஸ்பூன் மல்லி விதை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். ஒரு ஸ்பூன் துவரம்பருப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அரை ஸ்பூன் அளவிற்கு உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். 

பருப்பு மல்லி லேசாக வறுபட்டு கலர் மாற ஆராம்பிக்கும் போது அதில் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து வறுக்க வேண்டும். இதில் 7 வர மிளாகாயையும் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பொருட்களை நன்றாக ஆற விட வேண்டும். ஒரு ஸ்பூன் அரிசியை தனியாக வறுத்து அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும். ஆறிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் 100 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து கொள்ள வேண்டும் . அதில் ஒரு பெரிய தக்காளியை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது அவரைக்காய், முருங்கைகாய், காரட் பச்சை மிளகாய், பூசணிக்காய், கத்தரிக்காயை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். காய்கள் நன்றாக வதங்கிய பிறகு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் நாம் ஏற்கனவே வறுத்து அரைத்த பொடியை சேர்த்து அடுப்பை ஸ்மில் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த நிலையல் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கொள்ள வேண்டும். குழம்பிற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது காய் நன்றாக வெந்த பிறகு ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து சேர்த்து கொள்ள வேண்டும். அதில் நறுக்கி வைத்த மாங்காயையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஏற்கனவே வேக வைத்து எடுத்த துவரம்பருப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சமாக தேங்காய், அரைஸ்பூன் சீரகம், 5 சின்ன வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதையும் சாம்பாருடன் சேர்க்க வேண்டும். தேங்காய் சேர்த்த பிறகு 3 முதல் 5 நிமிடத்திற்கு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். 

கால் ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம்பருப்பு, 3 வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்த பொருட்களை சாம்பாரில் சேர்த்து கடைசியாக அரைஸ்பூன் பெருங்காயப்பொடியையும் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய மல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கினால் டேஸ்ட்டான திருநெல்வேலி சாம்பார் ரெடி. சூடான சாதம், இட்லி, தோசை அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்