Sambar Podi : இப்படி ஒரு சாம்பார் பொடி மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! உங்கள் சமையலை ஊரே வியக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sambar Podi : இப்படி ஒரு சாம்பார் பொடி மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! உங்கள் சமையலை ஊரே வியக்கும்!

Sambar Podi : இப்படி ஒரு சாம்பார் பொடி மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! உங்கள் சமையலை ஊரே வியக்கும்!

Priyadarshini R HT Tamil
Jul 08, 2024 03:30 PM IST

Sambar Podi : இப்படி ஒரு சாம்பார் பொடி மட்டும் வீட்டில் இருந்தால் போதும். உங்கள் சமையலை ஊரே வியக்கும் அளவுக்கு அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும்.

Sambar Podi : இப்படி ஒரு சாம்பார் பொடி மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! உங்கள் சமையலை ஊரே வியக்கும்!
Sambar Podi : இப்படி ஒரு சாம்பார் பொடி மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! உங்கள் சமையலை ஊரே வியக்கும்!

ஏனெனில் அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் சுவையைவிட அதிக சுவையில் சாம்பார் வீடு மட்டுமல்ல தெருவைத்தாண்டி ஊரையே மணக்க வைக்கும்.

தேவையான பொருட்கள்

வரமல்லி – 100 கிராம்

கடலை பருப்பு – 20 கிராம்

துவரம் பருப்பு – 20 கிராம்

உளுத்தம் பருப்பு – 20 கிராம்

வெந்தயம் – 10 கிராம்

சீரகம் – 10 கிராம்

அரிசி – 20 கிராம் (சாப்பாட்டு அரிசி)

வர மிளகாய் – 100 கிராம் (75கிராம் சாதாரண மிளகாய் 25 கிராம் கஷ்மீரி மிளகாய் எடுத்துக்கொள்ளலாம் அல்லது கஷ்மீரி மிளகாய் இல்லாவிட்டால், கஷ்மீரி மிளகாய் தூள் ஒரு முழு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்)

கறிவேப்பிலை – 3 கொத்து

பெருங்காயத்தூள் – 5 கிராம்

மஞ்சள் தூள் – 5 கிராம்

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவேண்டும். வறுக்கும்போது, அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். 

ஏனெனில் அதிக தீயில் வைத்தால் அனைத்து பொருட்களும் கருகி சுவை நன்றாக இருக்காது. அதேபோல் அனைத்து பொருட்களையும் தனித்தனியாக மட்டுமே அரைக்கவேண்டும். சேர்த்தும் அரைக்கக்கூடாது.

அனைத்தையும் வறுத்து ஒன்று சேர்த்து ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவேண்டும். 

கஷ்மீரி மிளகாயாக எடுக்கவில்லையென்றால், அந்த தூளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் மீண்டும் ஒருமுறை ஓட்டிக்கொள்ளவேண்டும்.

பெருங்காயம் தூளாக இல்லாவிட்டால் கட்டிப்பெருங்காயத்தை நன்றாக தட்டி அதையும் வறுத்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த முறையில் செய்யும் சாம்பார் பொடி சூப்பர் சுவையில் அசத்தும். இந்த சாம்பார் பொடியை நன்றாக ஆறவைத்து, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

இதை நீங்கள் எப்போதும் சாம்பார் வைக்கும்போது, இரண்டு ஸ்பூன் சேர்த்து செய்யவேண்டும்.

இந்தப்பொடியைப் பயன்படுத்தி சாம்பார் வைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

பருப்பு – கால் கப்

புளிக்கரைசல் – கால் கப்

அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடி – 2 ஸ்பூன்

முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட் – 2 கப் (பொடியாக நறுக்கியது)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 1

கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பருப்பை வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். பின்னர் காய்கறிகள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதித்த பின்னர் வேகவைத்த பருப்பை சேர்த்து போதிய அளவு தண்ணீர் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டால் சூப்பரான சாம்பார் ரெடி. மல்லித்தழை தூவி இறக்கி சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். எனவே இந்தப்பொடியை கட்டாயம் முயற்சித்து பாருங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.