தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Salt Intake: நீங்கள் உபயோகிக்கும் உப்புக்கும் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் தொடர்பு என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

Salt Intake: நீங்கள் உபயோகிக்கும் உப்புக்கும் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் தொடர்பு என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

Priyadarshini R HT Tamil
Jan 09, 2024 05:32 PM IST

Salt Intake: நீங்கள் உபயோகிக்கும் உப்புக்கும் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் தொடர்பு என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

Salt Intake: நீங்கள் உபயோகிக்கும் உப்புக்கும் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் தொடர்பு என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
Salt Intake: நீங்கள் உபயோகிக்கும் உப்புக்கும் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் தொடர்பு என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

உப்புக்கும், சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

அதிகளவில் உப்பு எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்புக்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். அமெரிக்க மருத்துவ சங்க ஆராய்ச்சி இதழில் அண்மையில் வெளியான கட்டுரையில், உப்பை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதற்கும், அதனால் நீண்ட கால சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி என்ன கூறுகிறது?

டாக்டர் லுகுய் தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் 4,65,000 பேர்களுக்கு மேல் இருந்து பெறப்பட்டதகவல்களின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஆராய்ச்சி 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை நடைபெற்றது. இதில் ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 56. அவர்கள் பதிந்தபோது நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள் இல்லை.

உப்பு உட்கொள்வதற்கும், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைக்கும் உள்ள தொடர்பை அறிய நடந்த ஆய்வில், முந்தைய ஆய்வில், இருந்து பல ஆரோக்கிய பிரச்னைகள் உள்ளவர்களும் இதில் அடங்குவர். சோடியம் அதிகம் எடுத்துக்கொள்வதற்கும், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்த ஆய்வுக்காக அவ்வாறு செய்தார்.

பங்கேற்பாளர்கள் எப்போதொல்லாம் தங்கள் உணவில் உப்பு சேர்ப்பார்கள் என்று கூறவேண்டும். உணவின்போது அவர்கள் உப்பு எடுத்துக்கொண்டதற்கும், நாள்பட்ட சிறுநீர் பிரச்னைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு கண்டுபிடித்தது. சாப்பாட்டில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்பவர்களுக்கு, நாள்பட்ட சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் அதிகம் உள்ளதை ஆய்வு சுட்டிக்காட்டியது.

ட்ரெண்டிங் செய்திகள்

எப்போதும் உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 29 சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்தது. எப்போதாவது பயன்படுத்துபவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பது தெரியவந்தது.

உப்பு எடுத்துக்கொள்வதும் சிறுநீரக பிரச்னைகளும்

மேலும் வயது, பாலினம் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய் பாதித்தவர்களுக்கு அதிகம் உப்பு சேர்ப்பவர்களுக்கு நாள்பட்ட சிறுநீர் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

எப்போதாவது எடுத்துக்கொள்பவர்களுக்கு அந்த வாய்ப்பு குறைவாக உள்ளதும் ஆய்வின் கண்டுபிடிப்பு. அதிக உப்பு சேர்ப்பது உடலில் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது. மேலும் பல ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளும் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளுக்கு காரணமாக உள்ளது.

உப்பு கெடுதலா?

சோடியம், உப்பில் உள்ள முக்கிய சத்து, தசைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்புகளுக்கும் ஊட்டச்சத்தை வழங்குகிறது. அதிக உப்பு எடுத்துக்கொள்வது ஆபத்தை வளர்க்கிறது. 2,300 மில்லி கிராம் சோடியத்தை ஒருவர் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் உணவில் உப்பு சேர்ப்பதை குறைப்பது எப்படி?

உப்பை குறைப்பது என்பது உங்கள் உணவில் உப்பை முற்றிலும் தவிர்ப்பது அல்ல. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடிப்பதுடன், உப்பில் உள்ள சோடியத்தின் அளவை தெரிந்துகொள்வதும் அவசியம். தினசரி உப்பு எடுத்துக்கொள்ளும் அளவை குறைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதனால் இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படாது.