சாலட் : கர்நாடகா ஸ்பெஷல் பப்பாளிக்காய் கோசம்பரி! சூப்பர் சுவையான பருப்பு சாலட்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாலட் : கர்நாடகா ஸ்பெஷல் பப்பாளிக்காய் கோசம்பரி! சூப்பர் சுவையான பருப்பு சாலட்! இதோ ரெசிபி!

சாலட் : கர்நாடகா ஸ்பெஷல் பப்பாளிக்காய் கோசம்பரி! சூப்பர் சுவையான பருப்பு சாலட்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated May 25, 2025 12:34 PM IST

சாலட் : இதை மாலை நேரத்தில் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் மகிழ்வுடன் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கும் ஒரு முழு உணவாகும். இதில் சேர்க்கப்படும் பப்பாளி காயிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.

சாலட் : கர்நாடகா ஸ்பெஷல் பப்பாளிக்காய் கோசம்பரி! சூப்பர் சுவையான பருப்பு சாலட்! இதோ ரெசிபி!
சாலட் : கர்நாடகா ஸ்பெஷல் பப்பாளிக்காய் கோசம்பரி! சூப்பர் சுவையான பருப்பு சாலட்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• பப்பாளிக்காய் – 1 (தோல் நீக்கி, துருவியது)

• பாசிப்பருப்பு – அரை கப்

• தேங்காய் துருவல் – அரை கப்

• கேரட் – 2 (துருவியது)

• வெள்ளரி – 1 (பொடியாக நறுக்கியது அல்லது துருவியது)

• உப்பு – தேவையான அளவு

• எலுமிச்சை பழத்தின் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்

• தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

செய்முறை

1. பப்பாளிக்காயை சிறிது மொத்தமாக அல்லது மிக்ஸியில் சேர்த்து துருவிக்கொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

2. பாசிப்புபருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு பவுலில் துருவிய பப்பாளிக்காய், தேங்காய்த் துருவல், நன்றாக ஊறிய பாசிப்பருப்பு, வெள்ளிரிக்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

4. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, சீரகம், உளுந்து சேர்த்து பொரிந்தவுடன் இந்த சாலட்டில் சேர்த்துவிடவேண்டும். சூப்பர் சுவையான கர்நாடகா ஸ்பெஷல் பப்பாளிக்காய் கோசம்பரி, பருப்பு சாலட் தயார்.

இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை ஃபிரிஜில் வைத்தும் பரிமாறலாம். டயட், ஜிம் செல்பவர்களுக்கு இது மிகவும் நல்லது. ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். மாலையில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. அவர்கள் இதை சாப்பிட்டுவிட்டு, அடுத்து விளையாட்டுக்களுக்கு செல்லும்போது, அவர்களுக்கு நன்றாக இருக்கும். இந்த சாலட்டை செய்வதும் எளிது. எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.