Sabudana Vada : கிரிஸ்பி; சாப்ஃட்னஸ் இரண்டையும் மாற்றி மாற்றி உணர முடியும்! சாபுதானா வடை ருசித்து பாருங்களேன்!-sabudana vadai crispy softness can be felt both interchangeably savour the sabudana vadai - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sabudana Vada : கிரிஸ்பி; சாப்ஃட்னஸ் இரண்டையும் மாற்றி மாற்றி உணர முடியும்! சாபுதானா வடை ருசித்து பாருங்களேன்!

Sabudana Vada : கிரிஸ்பி; சாப்ஃட்னஸ் இரண்டையும் மாற்றி மாற்றி உணர முடியும்! சாபுதானா வடை ருசித்து பாருங்களேன்!

Priyadarshini R HT Tamil
Sep 27, 2024 03:56 PM IST

Sabudana Vada : கிரிஸ்பி, சாப்ஃட்னஸ் இரண்டையும் மாற்றி மாற்றி உணர முடியும். சாபுதானா வடை ருசித்து பாருங்களேன். அருமையான சுவைகொண்டதாக இருக்கும்.

Sabudana Vada : கிரிஸ்பி; சாப்ஃட்னஸ் இரண்டையும் மாற்றி மாற்றி உணர முடியும்! சாபுதானா வடை ருசித்து பாருங்களேன்!
Sabudana Vada : கிரிஸ்பி; சாப்ஃட்னஸ் இரண்டையும் மாற்றி மாற்றி உணர முடியும்! சாபுதானா வடை ருசித்து பாருங்களேன்!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஜவ்வரசி இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் பாயாசம் செய்வார்கள். குழந்தைகளுக்கான சத்து மாவில் சேர்ப்பார்கள். 

இதில் கிச்சடி, கேசடி, வடை, அடை என பல்வேறு உணவுகளும் சமைக்கப்படுகிறது. ஜவ்வரிசியில் வடை செய்வது எப்படி எனப்பாருங்கள். பொதுவாக விசேஷ நாட்களில் ஜவ்வரிசியில் பாயாசம்தான் செய்வார்கள். அதில் வடையும் செய்ய முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – ஒரு கப்

(ஓரிரவு ஊறவைக்கவேண்டும். உடனடியாக செய்ய வேண்டுமெனில், 4 மணிநேரம் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும்)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – கால் இன்ச் (பொடியாக நறுக்கியது)

வறுத்த வேர்க்கடலை – கால் கப் (பொடித்தது)

பிரட் துண்டுகள் – 3 (பொடியாக நறுக்கியது அல்லது மிக்ஸிஜாரில் அடித்தது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

ஊறிய ஜவ்வரிசியில் தண்ணீரை வடிகட்டிவிட்டு, எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், வறுத்த வேர்க்கடலை, பிரட் துண்டுகள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும். தண்ணீர் தேவையில்லை அதில் உள்ள ஈரப்பதமே போதும்.

கடாயில் எண்ணெயை தாராளமாக சேர்த்து பின்னர் சூடானவுடன், வடை மாவு பதத்துக்கு பிசைந்த மாவில் சிறு உருண்டைகளாக உருட்டி, அதை தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும். வடைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டமாலும், அதே நேரத்தில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை திருப்பிடிவிட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதை நீங்கள் சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது இதை பாயாசத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் அடித்துக்கொள்ள முடியாத ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகும். இந்த வடை கிரிஸ்பியாகவும் இருக்கும் சாஃப்ட்டாகவும் இருக்கும்.

எனவே இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

இதில் உருளைகிழங்கு சேர்த்தும் செய்யலாம். பிரட் துண்டுகளுக்கு பதில் ரஸ்க் தூள் சேர்த்தும் அல்லது பிரட் கிரம்ஸ்களுடனும் செய்யலாம். சூப்பர் சுவையையும், வித்யாசமான சுவையையும் தரும். சுடச்சுட ஒரு டி அல்லது காபியுடன் மாலை நேரத்தில் பரிமாற ஆகா என இருக்கும் இதன் சுவை.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.