Relationship Health: உறவுகளில் முறிவு ஏற்பட்டால் சரிசெய்வது எப்படி?: அதனைக் கையாளும் வழிகள்!
Relationship Health: சண்டையை ஒப்புக்கொள்வது முதல் பார்ட்னருடன் மீண்டும் இணைவது வரை, உறவுகளில் உள்ள மோதல்களை நாம் எவ்வாறு திறம்பட நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி அறியலாம்.

Relationship Health: ஒரு உறவில், மோதல்கள் இயற்கையானவை. முரண்பாடுகளை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதற்கு மாறாக, அவை உண்மையில் ஆரோக்கியமானவை. ஏனெனில், அவை நம் வாழ்க்கைத் துணையின் நிலைமையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
ஒரு நபரை நன்கு புரிந்துகொள்ளவும் உதவுகிறது. எவ்வாறாயினும், முரண்பாடுகள் ஆரோக்கியமான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.
தீர்க்கப்படாத மோதல்கள், நீண்ட காலமாக சரியாகாமல் உறவில் விரக்தி மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும். "ஒரு உறவில் இருக்கும் சிக்கல்களை சரிசெய்து மோதல்களைத் தீர்ப்பது, தவறான புரிதல்களை நிவர்த்தி செய்வது மற்றும் கருத்து வேறுபாடு அல்லது புண்படுத்தும் நிகழ்வுக்குப் பிறகு நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது முக்கியமானது. ரிலேஷன்ஷிப்பில் மோதல் தவிர்க்க முடியாதது. எனவே, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் கற்றுக்கொள்வது மிக முக்கியமானது" என்று உளவியல் நிபுணர் லூசில் ஷேக்கல்டன் எழுதியுள்ளார்.