‘ஓடுங்க, ஓடுங்க’ வாழ்வின் எல்லை வரை இல்லங்க; ஆரோக்கியம் பெறும் மட்டும்; 9 நன்மைகள் உறுதி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘ஓடுங்க, ஓடுங்க’ வாழ்வின் எல்லை வரை இல்லங்க; ஆரோக்கியம் பெறும் மட்டும்; 9 நன்மைகள் உறுதி!

‘ஓடுங்க, ஓடுங்க’ வாழ்வின் எல்லை வரை இல்லங்க; ஆரோக்கியம் பெறும் மட்டும்; 9 நன்மைகள் உறுதி!

Priyadarshini R HT Tamil
Jan 03, 2025 04:50 PM IST

ஓட்டப்பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

‘ஓடுங்க, ஓடுங்க’ வாழ்வின் எல்லை வரை இல்லங்க; ஆரோக்கியம் பெறும் மட்டும்; 9 நன்மைகள் உறுதி!
‘ஓடுங்க, ஓடுங்க’ வாழ்வின் எல்லை வரை இல்லங்க; ஆரோக்கியம் பெறும் மட்டும்; 9 நன்மைகள் உறுதி!

கொழுப்பை எரிக்கிறது

நீங்கள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஓடும்போது, அது உங்கள் உடலில் உள்ள அதிக கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலுக்கு ஆற்றல் தருவதற்கான கொழுப்பை வேகமாக எரித்து ஆற்றலாக்கி உங்கள் உடலுக்கு கொடுக்கிறது.

இன்சுலின் சென்சிட்டிவிட்டி

இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. உங்கள் உடல் ரத்த சர்க்கரையை முறையாக கையாளவும் செய்கிறது.

உடலின் திறனை அதிகரிக்கிறது

நீங்கள் காலையில் எழுந்து தினமும் ஓடுவதை வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்களின் உடலின் திறனை அதிகரிக்கிறது. உங்கள் உடல் கொழுப்பை நல்ல முறையில் உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றிக்கொள்கிறது. மேலும் நீண்ட நேரம் கிளைக்கோஜெனை சேமிக்க உதவுகிறது.

கொழுப்பை எரிக்க உதவுகிறது

நீங்கள் வேகமாக ஓடும்போது, அது கொழுப்பு ஆக்ஸிடேசனை அதிகரிக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

மனத்தெளிவை அதிகரிக்கிறது

நீங்கள் காலையில் எழுந்து ஓடும்போது, அது உங்கள் உடலுக்கு தேவையான சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு மனத்தெளிவையும், நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தையும் கொடுக்கிறது. இது உங்கள் உடலில் எண்டோர்ஃபின்களை வெளியிட்டு, அட்ரெனலைன்களை ஊக்கப்படுத்துகிறது.

ஹார்மோன் உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

நீங்கள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஓடும்போது, அது உங்கள் உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரப்பதை தூண்டுகிறது. மேலும் இது உங்கள் தசைகள் வளர்வதற்கும், கொழுப்பு கரைவதற்கும் ஏற்றது.

வளர்சிதையை அதிகரிக்கிறது

நீங்கள் வேகமாக ஓடும்போது, உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு உடல் எடையைக் குறைக்கவும் முறையாகப் பராமரிக்கவும் உதவுகிறது.

செரிமான கோளாறுகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது

நீங்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஓடினால், அது உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இது உங்களுக்கு சோர்வு, வலி மற்றும் செரிமான அசவுகர்யங்களைப் போக்குகிறது. இது காலையில் உணவு உட்கொண்ட பின்னர் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறது, அவற்றையெல்லாம் சரிசெய்கிறது.

மன வலிமையை அதிகரிக்கிறது

நீங்கள் வெறும் வயிற்றில் ஓடினால், அது உங்களின் மனதில் தைரியத்தையும் விதைக்கிறது. இது உங்களுக்கு பசி மற்றும் சோர்வைப் போக்குகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.