Benefits of Rose Water: முகத்துக்கு தினமும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் வரும் நன்மைகள்

I Jayachandran HT Tamil
Apr 30, 2023 05:37 PM IST

முகத்துக்கு தினமும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் இன்னும் பலருக்கு ரோஸ் வாட்டரை தினமும் முகத்துக்கு பயன்படுத்தலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கிறது. சந்தேகமே வேண்டாம் நிச்சயம் பயன்படுத்தலாம். ரோஸ்வாட்டரை சீரமாகவும், டோனராகவும் தினமும் முகத்தில் பயன்படுத்தினால் பல நன்மைகளை பெறலாம்.

சருமத்தை வெண்மையாக்கும் பண்புகள் ரோஸ் வாட்டரில் இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. இது உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது..

முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும் பண்புகளும் ரோஸ் வாட்டரில் உள்ளன. ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன . இது முகப்பரு, பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. அதே போல் ரோஸ் வாட்டர் முகப்பரு பிரச்னையை குறைக்கவும் உதவுகிறது.

சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் பண்புகள் ரோஸ் வாட்டரில் உள்ளன.. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது.

தவறான வாழ்க்கை முறை காரணமாக முகம் மற்றும் கண்களுக்கு கீழே அடிக்கடி வீக்கம் ஏற்பட தொடங்குகிறது. ரோஸ் வாட்டரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தில் உள்ள வீங்கிய பகுதிகளில் தடவ வேண்டும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்களுக்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதன் மூலம் முகம் வயதானது போல் காட்சியளிப்பதை குறைக்கும். இது சுருக்கங்கள் மற்றும் முகத்தில் இருக்கும் கோடுகளை குறைக்கவும் உதவுகிறது.

சிலருக்கு வெயிலில் செல்லும் போதும் முகம் சிவந்து போய்விடும். இதை ஆங்கிலத்தில் சன் பர்ன் என அழைப்பார்கள். ரோஸ் வாட்டரில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சன் பர்ன் வருவதை தடுத்து அதை குறைக்க உதவுகிறது. தோல் நோய்களை ஏற்படுத்தும் ஃப்ரீ-ரேடிக்கல்களின் விளைவை குறைக்கவும் ரோஸ் வாட்டர் உதவுகிறது.

கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை குறைக்க ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் வைக்கவும். இப்படி செய்வதால் கருவளையங்களை குறைக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்