ரோஸ் மில்க் : கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்; செயற்கை கலப்படமில்லாமல் வீட்டிலே செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரோஸ் மில்க் : கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்; செயற்கை கலப்படமில்லாமல் வீட்டிலே செய்யலாம்!

ரோஸ் மில்க் : கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்; செயற்கை கலப்படமில்லாமல் வீட்டிலே செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 22, 2025 11:48 AM IST

ரோஸ் மில்க் : கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்கை செய்வது எப்படி என்று பாருங்கள். இது இயற்கை முறையில் செயற்கை பொருட்கள் எதுவும் கலக்காமல் செய்யப்படுவதாகும். ரோஸ் மில்க் பிரியர்களுக்கு குஷிதான். இதோ ரெசிபி பாருங்கள்.

ரோஸ் மில்க் : கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்; செயற்கை கலப்படமில்லாமல் வீட்டிலே செய்யலாம்!
ரோஸ் மில்க் : கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்; செயற்கை கலப்படமில்லாமல் வீட்டிலே செய்யலாம்!

மேலும் கடைகளில் நீங்கள் சென்று ரோஸ்மில்க் பருகினால் அந்த வண்ணத்தை நீங்கள் கைகளில் தொட்டுப்பார்த்தால், அது கைகளிலே ஒட்டிக்கொண்டு வரும். அந்த அளவுக்கு கடைகளில் உள்ள பானங்களில் செயற்கை வண்ணங்கள் கலந்திருக்கும். நீங்கள் விட்டிலேயே இயற்கையான முறையில் இந்த ரோஸ் மில்கை செய்ய முடியும். அதிலும் இனிப்புக்கு சர்க்கரை கூட கலக்காமல் செய்யலாம். அது எப்படி என்று பாருங்கள். பால் மற்றும் தேங்காய்ப் பால் கலந்து என இரண்டு முறைகளில் நீங்கள் இந்த ரோஸ் மில்க்கை வீட்டிலே தயாரிக்கலாம். இரண்டு முறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து ரோஸ் மில்க் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

• பன்னீர் ரோஜாப் பூ – 1

• பேரிட்சை பழம் – 2

• தேங்காய்த் துருவல் – கால் கப்

• பீட்ரூட் – ஒரு சிறிய துண்டு

• பாதாம் – 6

• முந்திரி – 6

• பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்

செய்முறை

1. பன்னீர் ரோஜாவின் இதழ்களைப் பிரித்து தண்ணீரில் அலசிக்கொள்ளவேண்டும். அதை எடுத்து அதனுடன் தேங்காய்த் துருவல், பீட்ரூட் மற்றும் பேரிட்சை பழம் சேர்த்து தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. சிறிய மிக்ஸி ஜாரில் முந்திரி, பாதாம், பனங்கற்கண்டு சேர்த்து அடித்து பொடியாக்கி வடிகட்டி வைத்துள்ள சாறில் கலந்துவிடவேண்டும். சூப்பர் சுவையான ரோஸ் மில்க் தயார். இதை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து பரிமாற சுவை அள்ளும்.

3. மற்றொரு முறையில் செய்ய வேண்டுமெனில் ரோஜா இதழ்கள், பேரிட்சை பழம், பீட்ரூட் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து, வடிகட்டிக்கொள்ளவேண்டும். அதனுடன் பொடித்த நட்ஸ்கள் சேர்துது கலந்துவிட்டால் பால் சேர்த்து தயாரிக்கப்படும் ரோஸ் மில்க் தயார்.

பனங்கற்கண்டுகளுக்கு பதில் தேன் கலந்து சாப்பிட சுவை அள்ளும். எனவே கோடை காலத்திற்கு தேவையான குளுமையான ரெசிபிக்களை வீட்டிலேயே செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

குளிர் பானம் மற்றும் ரோஸ் மில்க் பிரியர்களின் ஆரோக்கியம் கெடாமல் இருக்கும். இந்த ரோஸ் மில்க்கை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகுவார்கள். ஒருமுறை ருசித்தால் கோடைக்காலம் முழுவதும் நீங்கள் சாப்பிட நினைப்பீர்கள்.