சோயா சங்க்ஸ் வறுவல் : தோசை, சப்பாத்தி கூட தொட்டு சாப்பிட ஏற்ற சோயா சங்க்ஸ் வறுவல்; சிக்கன் சுவையில் அசத்தலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சோயா சங்க்ஸ் வறுவல் : தோசை, சப்பாத்தி கூட தொட்டு சாப்பிட ஏற்ற சோயா சங்க்ஸ் வறுவல்; சிக்கன் சுவையில் அசத்தலாம்!

சோயா சங்க்ஸ் வறுவல் : தோசை, சப்பாத்தி கூட தொட்டு சாப்பிட ஏற்ற சோயா சங்க்ஸ் வறுவல்; சிக்கன் சுவையில் அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Updated May 12, 2025 03:49 PM IST

சோயா சங்க்ஸ் வறுவல் : இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று எண்ணுவீர்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

சோயா சங்க்ஸ் வறுவல் : தோசை, சப்பாத்தி கூட தொட்டு சாப்பிட ஏற்ற சோயா சங்க்ஸ் வறுவல்; சிக்கன் சுவையில் அசத்தலாம்!
சோயா சங்க்ஸ் வறுவல் : தோசை, சப்பாத்தி கூட தொட்டு சாப்பிட ஏற்ற சோயா சங்க்ஸ் வறுவல்; சிக்கன் சுவையில் அசத்தலாம்!

தேவையான பொருட்கள்

• சோயா சங்க்ஸ் அல்லது மீல் மேக்கர் – 100 கிராம்

(கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• சோம்பு – ஒரு ஸ்பூன்

• மிளகு – ஒரு ஸ்பூன்

• வர மல்லி – ஒரு ஸ்பூன்

• ஏலக்காய் – 1

• பட்டை – 1

• வர மிளகாய் – 6

• கல்பாசி – சிறிதளவு

(சீரகம், சோம்பு, மிளகு, வரமல்லி, வர மிளகாய், ஏலக்காய், பட்டை, கல்பாசி என அனைத்தையும் ஒரு கடாயில் அப்படியே ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். ஆறியவுடன் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• வர மிளகாய் – 4

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மல்லித் தூள் – அரை ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• இஞ்சி – பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்

• மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் சீரகம் தாளிக்கவேண்டும். அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

2. அடுத்து வர மிளகாயை கிள்ளி சேர்க்கவேண்டும். கறிவேப்பிலை மற்றும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நல்ல பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

3. அடுத்து மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

4. அடுத்து ஊறிய சோயா சங்க்ஸ்களை நன்றாக பிழிந்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.

5. அடுத்து அரைத்து வைத்துள்ள ஃபிரஷ்ஷான மசாலாப் பொடியை சேர்த்து கிளறவேண்டும். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு, மூடி வைத்து நன்றாக வேகவிடவேண்டும்.

6. தண்ணீர் சுத்தமாக வற்றி நல்ல சுக்கா வறுவல் போல் வரும்போது மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான சோயா வறுவல் தயார்.

இதை சப்பாத்தி, தோசையுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். மீல்ஸ் மற்றும் வெரைட்டி சாதங்களுடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த வறுவல் அப்படியே சிக்கன் சுவையில் அசத்தலாக இருக்கும். இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று எண்ணுவீர்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.