தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Road Trip Day : சாலை பயண தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? அன்று என்ன செய்யலாம்! மகிழ்ச்சிக்கான வழியாக்குங்கள்!

Road Trip Day : சாலை பயண தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? அன்று என்ன செய்யலாம்! மகிழ்ச்சிக்கான வழியாக்குங்கள்!

Priyadarshini R HT Tamil
May 24, 2024 05:15 PM IST

Road Trip Day : சாலை பயண தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? அன்று என்ன செய்யலாம் என்பதையும் பாருங்கள்.

Road Trip Day : சாலை பயண தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? அன்று என்ன செய்யலாம்!
Road Trip Day : சாலை பயண தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? அன்று என்ன செய்யலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

சாலைகள், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடம்பிடித்திருப்பவை. சாலைகளில்தான் நாம் தினமும் பயணிக்கவேண்டும். வீட்டிலிருந்து எங்கு செல்ல வேண்டும் என்றாலும், சாலைகளே நம்முடன் வருபவை. சாலைகளில் செல்லும்போது பலருக்கும் பல அனுபவங்களை கொடுக்கிறது. நீண்ட சாலைகள், வளைந்து செல்லும் சாலைகள், மேடுபள்ள சாலைகள் என சாலைகளுக்கும் வாழ்வுக்கும் பல தொடர்பு உண்டு.

ஒரு நீண்ட சாலையில் பயணம் செய்வதைப் போன்றதொரு கொண்டாட்டம், வேறு எதாவது இருக்கமுடியுமா? ஒரு நெடுஞ்சாலையில் ஜன்னலின் வழியே விரியும் காட்சிகள், கைகளில் மேப்புடன், இசையை ஒலிக்கவிட்டு செல்வதை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

அதுவே உங்களுக்கு எத்தனை ஆனந்தத்தைக் கொடுக்கும் ஒன்றாக இருக்கும். நீங்கள் தனியாகவோ அல்லது குழுவுடனோ நீண்ட தூர பயணமோ அல்லது குறைந்த தூர பயணமோ சாலை பயணங்கள் உங்களுக்கு அலாதி ஆனந்தத்தைக் கொடுப்பவைதான். அது ஒரு வார இறுதி பயணமாகக்கூட இருக்கலாம்.

தேசிய பயண தினம், விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் கவனத்தை ஈர்க்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சாகச உணர்வை ஏற்படுத்துகிறது. சாலைகளில் நேரம் செலவிடுவது உங்களுக்கு இதுபோன்ற பல்வேறு அனுபவங்களைக் கொடுக்கிறது.

தேசிய சாலை பயண தின வரலாறு

வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு இயக்கப்படுவது துவங்கியது முதலே, சாலை பயணங்கள் என்பது உருவானது. அவை அவற்றிற்கு நிரப்பப்படும் எரிபொருள் நிலையங்களாலும், நாடுகள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளாலும், சாலை பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைக்கொடுக்கக் கூடியவையாகவும், சுவாரஸ்யமானவையாகவும், பல நூற்றாண்டுகளாக உள்ளன.

முதல் சாலைப்பயணம் என்பது, 1903ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ முதல் நியூயார்க் வரை ஹொராடியோ நெல்சன் ஜேக்சன் என்பவர் பயணம் செய்தபோது பதிவுசெய்யப்படுகிறது. அவரின் 63வது சாலை பயணத்தின் துணையாக அவரது நாயும், மெக்கானிக்கும் இருந்தார்கள்.

1930களில் அமெரிக்காவில், ரூட் 66 திறக்கப்பட்டபோது, அடுத்த 10 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறை வளர்ந்தபோது, சாலை பயணங்கள் பரவலாக இருந்தது. ஒரு சுற்றுலாவுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைப்பது மற்றும் பாடல்கள் பாடுவது, விளையாட்டு மற்றும் பல சாகசங்கள் என சாலை பயணங்கள் அமெரிக்கர்களுக்கு பல நினைவுகளைக் கொடுக்கிறது.

இந்த நாளைக் கொண்டாடுவது எப்படி?

இந்த நாளை கொண்டாடி மகிழுங்கள். இந்த நாளைக் கொண்டாட இன்னும் புதிய யோசனைகளைக் கொடுங்கள்.

நல்ல ஒரு நினைவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்

உங்கள் குடும்பத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் சில ஸ்னாக்ஸ்களை பேக் செய்துகொள்ளுங்கள். இன்றைய உலகம் அனைத்து வகையான சவுகர்யங்களையும், வசதிகளையும் கொடுக்கிறது. எனவே இந்த சாலைப்பயணத்தை மிகவும் சிறப்பானதாக்குங்கள். நீங்கள் இதற்கு முன் சென்று இருக்காத ஒன்றாக இது இருக்கட்டும்.

உங்களின் ஸ்மார்ட் ஃபோன்களை அணைத்துவிடுங்கள், அந்த காலங்களின் ஃபேஷன்களில் உங்கள் சாலை பயணத்தை கொண்டாடுங்கள். உங்களின் ஹெட்ஃபோன்களை தூக்கியெறியுங்கள். சில விளையாட்டுகளில் திளையுங்கள். சில இடங்களில் இறங்கி விளையாடுங்கள். சில பாடல்களை கேளுங்கள். ஜன்னலை திறந்து பாருங்கள். கொஞ்ச நேரம் வெளியில் இறங்கி விளையாடுங்கள்.

சாலை பயண திரைப்படங்களை பாருங்கள்

சாலை பயண தினத்தில், நீங்கள் வெளியே செல்ல முடியவில்லையென்றால் கூட, நீங்கள் சாலை பயண தினத்தில் சாலை பயண திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள். அதற்கு சில ஹாலிவுட் திரைப்படங்களும் உள்ளன. வி ஆர் த மில்லர்ஸ், வெக்கேஷன், லிட்டில் மிஸ் சன் ஷைன் ஆகிய படங்கள் சாலை பயண திரைப்படங்கள் ஆகும். தமிழில், அன்பேசிவம், வாழி, கயல், ஓ கண்மணி, மகளிர் மட்டும், ஜப்பானில் கல்யாணராமன், இன்று நேற்று நாளை, மாநாடு, டிக்கிலோனா உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. அவற்றையும் பார்த்து மகிழலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்