தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ro Water Are You An Ro Water Drinker Alas Be Aware Of The Dangers Involved The Shock Of Research

RO Water : நீங்கள் ஆர்.ஓ தண்ணீர் பருகுபவரா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்துக்களை தெரிஞ்சுக்கங்க! – ஆய்வு தரும் அதிர்ச்சி!

Priyadarshini R HT Tamil
Mar 18, 2024 02:50 PM IST

RO Water : பிளாஸ்டிக் குடுவைகளில், சூரிய வெளிச்சம் அதிக நேரம் நேரடியாக பட்டால், சிறுபிளாஸ்டிக் (Microplastics) துகள்களும் குடிநீரில் கலந்து சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்!

RO Water : நீங்கள் ஆர்.ஓ தண்ணீர் பருகுபவரா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்துக்களை தெரிஞ்சுக்கங்க! – ஆய்வு தரும் அதிர்ச்சி!
RO Water : நீங்கள் ஆர்.ஓ தண்ணீர் பருகுபவரா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்துக்களை தெரிஞ்சுக்கங்க! – ஆய்வு தரும் அதிர்ச்சி!

ட்ரெண்டிங் செய்திகள்

சுத்தப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் குடுவைகளில் உள்ள நீரை நாம் தொடர்ந்து பருகினால், நன்மைக்கு பதில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் எனும் அதிர்ச்சி தகவல் ஆதாரங்களுடன் சென்னை அண்ணா பல்கலைக் கழகம், IIT சென்னை, செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Bureau of Indian Standards (BIS) குடிநீரில் கால்சியம், மெக்னீசியம், குளோரைடு, புளூரைடு, சோடியம், சல்பேட், பைகார்பனேட் போன்றவை எந்த அளவில் இருந்தால் உடம்பிற்கு பாதிப்பு அதிகம் வராது என வரையறுத்தாலும், (மினரல் குறைந்த அளவிலே இருந்தும்) மினரல் நீர் என சென்னை, தமிழகத்தின் பிறஇடங்களில் பிளாஸ்டிக் குடுவைகளில் அடைத்து விற்கப்படும் 30 பிரபல மினரல் நீரை ஆய்வு செய்ததில், தூய்மைப்படுத்துவதாக சொல்லி, நீரை பலமுறை வடிகட்டியும் (Multiple Filtration), மறு சவ்வூடுபரவல் (Reverse Osmosis) மூலமும் "தூய்மைப் படுத்துவதால்" ,குடிநீரில் உள்ள உடம்பிற்குத் தேவையான சத்துப் பொருட்கள் (Minerals) நீக்கப்பட்டு, அவை சத்தற்றுப் போய், அதை தொடர்ந்து குடிப்பவர்கள் மத்தியில் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

BIS அளவுகோலின் படி குடிநீரில் உள்ள கரைந்திருக்கும் மொத்த உப்பின் அளவு (Total Dissolved Salts - TDS) லிட்டருக்கு 2,000 மில்லி கிராம் வரை இருக்கலாம் என இருந்தாலும், சராசரியாக பிளாஸ்டிக் குடுவைகளில் அடைக்கப்பட்டுள்ள குடிநீரில், அதன் அளவு லிட்டருக்கு 56 மில்லிகிராம் எனக் குறைந்து காணப்படுகிறது.

Journal of Food Composition and Analysis என்ற ஆய்வு பத்திரிக்கையில் வெளியான இது தொடர்பான கட்டுரையில், பிளாஸ்டிக் குடுவைகளில் குடிநீரை அடைத்து விற்பனை செய்யும் தொழிற்நிறுவனங்கள், BIS நிர்ணயித்த அதிகபட்ச உப்பின் அளவை கடைபிடித்தாலும்,1989-National Counsil of Research, உடம்பிற்கு தினமும் தேவைப்படும் உப்பு சத்துகள் வரையறுத்த அளவைக் காட்டிலும் 91 சதவீம் குறைவாக குடிநீரில் இருப்பது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது

பிளாஸ்டிக் குடிநீர் குடுவைகளில் உள்ள குடிநீரில் சராசரியாக லிட்டருக்கு 3.5 மில்லிகிராம் கால்சியம் மட்டுமே உள்ளது. ஆனால் தினம், கால்சியத்தின் தேவையோ - 188 மில்லிகிராம்/லிட்டர் என உள்ளது.

BIS நிர்ணயித்த அதிகபட்ச அளவு 200 மில்லிகிராம்/லிட்டர் என உள்ளது.

உணவின் மூலமும் உப்புச்சத்துகளை ஒருவர் பெற முடியும் என இருந்தாலும், ஃப்ளூரைடு போன்ற தேவையான உப்புச்சத்து நீரின் மூலம் மட்டுமே பெறப்படுவதால், ஃப்ளூரைடு குடிநீரில் சரியான அளவில் இருப்பதே நன்மை பயக்கும். குடிநீரில் புளூரைடு குறைவாக இருந்தால், பற்சிதைவு ஏற்படும். ஃப்ளூரைடு அதிகமாக இருந்தால், பற்களின் நிறத்தில் மாறுதல் ஏற்படும். எலும்புகளும் பாதிப்பு அடையும்.

பிளாஸ்டிக் குடுவை குடிநீரில் சராசரியாக 0.08 மில்லிகிராம்/லிட்டர் என்ற அளவில் ஃப்ளூரைடு குறைவாக உள்ளது. ஆனால் அதன் தினசரி தேவையோ, 0.6 மில்லிகிராம்/லிட்டர் என்ற அளவில் உள்ளது. BIS நிர்ணயித்த அதிகபட்ச அளவு-1.5 மில்லிகிராம்/லிட்டர் என்ற அளவில் உள்ளது.

ரயில்வே நிலையங்களில், குப்பிகளில் மீண்டும் நீரை நிரப்பிக்கொள்வது நல்லதாக உள்ளது. ஏனெனில் அதில் TDSன் அளவு 300 மில்லிகிராம்/லிட்டர் என உள்ளது. பலமுறை வடிகட்டுதல் இல்லாமல் இருப்பதால் TDSன் அளவு 300 மில்லிகிராம்/லிட்டர் என சற்று அதிகமாக உள்ளது. (குடிநீர் பலமுறை வடிகட்டப்படுவதால், தேவையான உப்புச்சத்துகள் நீக்கப்படுகின்றன)

2,000 மில்லிகிராம்/லிட்டர்-TDS அளவு குடிப்பதற்கு உகந்ததே. அதிகமாக TDS இருந்தால், குடிநீரை காய்ச்சி, வடிகட்டி குடிக்கலாம். மிகவும் அதிகமாக இருந்தால் மட்டும், மறுசவ்வூடுபரவல் மூலம் அதை நீக்கலாம்.

ஆகாரமில்லாமல் ஒருவர் 7 நாட்கள் வரை வரை குடிநீர் மட்டுமே குடித்து உயிர் வாழலாம். ஆனால் சத்தற்ற, பிளாஸ்டிக் குடுவைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை தொடர்ந்து ஒருவர் பருகினால், பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு ஆளாக நேரிடும்.

பிளாஸ்டிக் குடுவைகளில் உள்ள குடிநீரை தொடர்ந்து குடித்தால், உப்புச்சத்துகள் குறைவால் ஏற்படும் பாதிப்புகளை பின்வரும் அட்டவணை மூலம் அறியலாம்.

உப்பு மற்றும் தேவையான அளவு, மில்லிகிராம்/லிட்டர் - பிளாஸ்டிக் குடுவை குடிநீரில் உள்ள சராசரி அளவு-மில்லிகிராம்/லிட்டர்-சத்துக்குறைவால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்

 

உப்பு தேவையான அளவு ஆர்ஓ தண்ணீரில் உள்ள அளவு மில்லிகிராம்/லிட்டர்உபாதைகள்
சோடியம் 7814 (Electrolyte imbalance), வயிற்றுப்போக்கு, மூளை பாதிப்பு (Hyponatremia), அட்ரினல் சுரப்பி பிரச்சனைகள், தசை பாதிப்பு, இதய துடிப்பில் பிரச்னைகள் 
கால்சியம்1883.5 பற்சிதைவு, எலும்புகள் பலவீனமாதல் 
மெக்னீசியம்63 சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்புகள் 
குளோரைட் 11711.7 நீர்சத்துக்குறைவு (Dehydration), மூச்சு விடுதலில் சிரமம், உடம்பிலிருந்து நீர்சத்து வெளியேறுதல்
ஃப்ளுரைட் 0.60.08பல் சொத்தை மற்றும் பற்சிதைவு 
சல்ஃபேட் 78 2மலச்சிக்கல் 
பைகார்பனேட்7815மூளை பாதிப்பு (Stroke), இதயப் பிரச்னைகள்
மொத்தம்602.656மினரல் குறைபாடு

மேற்சொல்லப்பட்ட பட்டியலில் இருந்து பிளாஸ்டிக் குடுவை குடிநீரை தொடர்ந்து பருகுவதால் பல சுகாதார சீர்கேடுகளை மனிதர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால்"தூய்மை செய்யப்பட்ட" குடிநீரைப் பருகுவது நல்லதல்ல.

BIS அதிகபட்ச உப்பை குடிநீரில், நிர்ணயிப்பதை போல், குறைந்தபட்சம் உப்புகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் வரையறுக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

பிளாஸ்டிக் குடுவைகளில், சூரிய வெளிச்சம் அதிக நேரம் நேரடியாக பட்டால், சிறுபிளாஸ்டிக் (Microplastics) துகள்களும் குடிநீரில் கலந்து சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்!

சுருக்கமாக, மண்பாண்டத்தில் நீரை நிரப்பி அதை குளிர்ச்சியாக பருகுவதே சிறந்தது.

நன்றி – மருத்துவர். புகழேந்தி

WhatsApp channel

டாபிக்ஸ்