வெப்பநிலை உயர்வு : ‘குத்தும் எரியும் வெயில்’ கடந்த காலங்களைவிட அதிகரித்து வரும் வெப்பம்; என்ன செய்து தடுக்கலாம்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெப்பநிலை உயர்வு : ‘குத்தும் எரியும் வெயில்’ கடந்த காலங்களைவிட அதிகரித்து வரும் வெப்பம்; என்ன செய்து தடுக்கலாம்?

வெப்பநிலை உயர்வு : ‘குத்தும் எரியும் வெயில்’ கடந்த காலங்களைவிட அதிகரித்து வரும் வெப்பம்; என்ன செய்து தடுக்கலாம்?

Priyadarshini R HT Tamil
Published Apr 16, 2025 05:15 AM IST

வெப்பநிலை உயர்வு : கடந்த காலங்களைவிட அதிகரித்து வரும் வெப்ப நிலைக்கான காரணங்கள் என்ன? அதைத்தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கூறியுள்ளார்.

வெப்பநிலை உயர்வு : ‘குத்தும் எரியும் வெயில்’ கடந்த காலங்களைவிட அதிகரித்து வரும் வெப்பம்; என்ன செய்து தடுக்கலாம்?
வெப்பநிலை உயர்வு : ‘குத்தும் எரியும் வெயில்’ கடந்த காலங்களைவிட அதிகரித்து வரும் வெப்பம்; என்ன செய்து தடுக்கலாம்?

கடந்த காலங்களைவிட தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 முதல் 4 சென்டிகிரேடி வெப்பம் அதிகரித்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம். வடமேற்கு திசையில் வரும் உலர் காற்றுதான் இந்த வெப்ப நிலை உயர்வுக்கு காரணம் என்று குறிப்பிடுகிறது. உண்மையில் இது மட்டும்தான் முக்கிய காரணமா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பதை நாம் ஆய்ந்து பார்க்கவேண்டும்.

வெப்ப நிலை உயர்வுக்கான காரணங்கள்

அதற்கு வேறு காரணங்களும் உள்ளன. பருவ நிலை மாற்றம், வெப்பத்தீவு விளைவும் (கான்கிரீட் வீடுகளின் அளவு அதிகரித்து பசுமை பரப்பு குறைவதும் இதற்கான காரணமாகும்), பொதுவாக மேற்கு திசை காற்றில் ஏற்படும் மாற்றங்கள் (பாகிஸ்தானில் இருந்து வீசும் வெப்ப காற்றுகள் சென்னையை தாக்குவது), அதிகரிக்கும் ஈரப்பதம், கடல் காற்று (சென்னையை குளுமையாக்கும் கடல் காற்றை ஆந்திரா மற்றும் ராயலசிம்மா பகுதிகளில் இருந்து வரும் காற்றுகள் தடுப்பது) ஆகிய அனைத்தும் முக்கிய காரணமாகும்.

பருவ நிலை மாற்றங்களுக்கான காரணங்கள்

பருவ நிலை மாற்றங்களுக்கு காரணமாக, வீடுகளில் மின்விசிறிகளின் பயன்பாடு அதிகம் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள், ஏசி பயன்பாடு ஆகியவையும் காரணமாக உள்ளது. மேலும் சென்னையில் உள்ள சேரிப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பெரும்பாலும் (27 சதவீதம்) ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களால் வேயப்பட்டுள்ளது. இவைகள் காரணமாகின்றன.

சென்னையின் விளைவுகள்

சென்னையின் தரை வெப்ப நிலை என்பது 6.53 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. இது 2013ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு வரை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. சென்னையில் கடந்த காலங்களில் 3 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு திட்டக்குழு குறிப்பிடுகிறது. சென்னையின் பசுமை பரப்பு 1991ம் ஆண்டு 23 சதவீதம் இருந்தது. 2021ம் ஆண்டு 17 சதவீதமாகக் குறைந்துள்ளது. நீர்நிலைகளின் பரப்பு 1991ம் ஆண்டு 8 சதவீதமாக இருந்தது, 2021ம் ஆண்டு 4 சதவீதம் என பாதியளவுக்கு குறைந்துள்ளது.

இந்த பசுமை பரப்பு மற்றும் நீளப்பரப்பு, அதாவது மரங்கள் மற்றும் நீர்நிலைகள் அதிகரித்தால் மட்டும்தான் உண்மையான நீடித்த தீர்வு கிடைக்கும். அதேபோல் கான்கிரீட் வீடுகளின் பெருக்கம் 1991ம் ஆண்டில் இருந்து 2021ம் ஆண்டில் 3 மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இவையும் முக்கிய காரணங்களாக உள்ளது.

தீர்வு என்ன?

இந்த சூழலில் நிரந்த தீர்வு என்பது பசுமை பரப்பை அதிகரிப்பதும், கான்கிரீட் பரப்பை குறைப்பதும், நீர் நிலைகள் அழியாமல் தடுப்பதும் உள்ளது. தனிப்பட்ட நபரின் பசுமை பரப்பு 9.5 சதுர மீட்டர் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சென்னையில் அது 8.75 சதுர மீட்டர் என குறைந்து காணப்படுகிறது.

2024ம் ஆண்டில் 35 டிகிரி சென்டிகிரேடுக்கு மேற்பட்ட நாட்கள் 120 நாட்கள் இருந்தது. இது மேலும் அதிகரிக்கும். 2014ல் 107 நாட்கள் 26 டிகிரி சென்டி கிரேடுக்கு மேற்பட்ட வெப்பம் நிலவியுள்ளது. ஆனால் அதற்கு பின்னர் அந்த அளவு உயர்ந்து 2050ல் 150 நாட்களை கடந்து செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவற்றையெல்லாம் கணக்கில்கொள்ளவேண்டும். மரங்கள் மிகவும் முக்கியமானது. அதுதான் தீர்வு. கான்கிரீட் வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படுகிறது என்று அரசு கூறினாலும், செங்குத்து தோட்டம், மியாவாகி காடுகள் கூட பெரும் தீர்வைக் கொடுக்காது.

மாறாக நன்கு வளர்ந்த மரங்கள் பாதுகாக்கப்படவேண்டும் அவை வெட்டப்படக் கூடாது என்று தான் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு மரத்தால் ஒரு ஆண்டு 118 கிலோ ஆக்ஸிஜன் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கிக்கொள்கிறது. மரங்கள் தங்களின் சுற்றுப்புறப் பகுதிகளின் வெப்பநிலையை 40 டிகிரி சென்டிகிரேட் வரையில் குறைக்கும் தன்மைகொண்டது.

சென்னையிலே எங்கெல்லாம் பசுமைப் பரப்பு அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் பசுமைப்பரப்பு இல்லாத பகுதிகளைவிட 4 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலை மாறுபாடு உள்ளது. ரூஃப் கார்டன் அமைப்பதால் 1 முதல் 2 டிகிரி வெப்பத்தை குறைக்கலாம். ஆனால் அது முக்கிய தீர்வாக இருக்க முடியாது. பசுமை பரப்பு அதிகரிப்பதும், கான்கிரீட் பரப்பை குறைப்பது, நீர்நிலைகளை அழியாமல் தடுப்பதும், ஆக்கிரமிப்புக்களை தடுப்பதும்தான் வெப்பநிலையைக் குறைக்கக்கூடிய முக்கிய காரணிகளாக இருக்கும்.

இவ்வாறு மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.