Ridge Gourd Paal Curry : கோடைக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும்! பீர்க்கங்காய் பால்கறி செய்வது எப்படி?
Ridge Gourd Paal Curry : கண் பார்வையை கூறாக்கும். கோடைக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். பீர்க்கங்காய் பால்கறி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கோடைக் காலத்தில் நாம் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளைத்தான் அதிகம் பயன்படுத்தவேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை ஒரே மாதிரி சமைப்பது உங்களுக்கு போர் அடிக்கும். அதற்காக பீர்க்கங்காயை வைத்து பால்கறி எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இஞ்சி – ஒரு இன்ச்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பீர்க்கங்காய் பால் கறி செய்ய
பீர்க்கங்காய் – 3
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 10 பல் (தட்டியது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மல்லித்தழை – சிறிது
குறிப்புகள்
இதற்கு தேங்காய்ப்பால் எடுத்துதான் செய்யவேண்டும். காய்ச்சிய பால் சேர்த்து செய்வது, தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதைப் போன்ற சுவையை தராது.
இந்த பீர்க்கங்காய் பால்கறி கார குழம்புக்கு ஏற்ற சைட்டிஷ் ஆகும்.
செய்முறை
பீர்க்கங்காய்களின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம் சேர்த்து மிக்ஸி ஜாரில் அதைத்து, பால் பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் தாளித்து, பொரிந்தவுடன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
அடுத்து வெங்காயம், பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் பீர்க்கங்காயை சேர்த்து தண்ணீர் லேசாக தெளித்து அனைத்தும் வதங்கியவுடன், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள தேங்காய்ப்பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான பீர்க்கங்காய் பால்கறி தயார்.
இது காரம் குறைந்தது என்பதால், இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பீர்க்கங்காயின் நன்மைகள்
வீக்கத்தை குறைக்க உதவுகிறது
பீர்க்கங்காயின் இலைகள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. பீர்க்க இலைகளை வீக்கம் உள்ள இடத்தில் அரைத்து தடவினால் பலன்தரும். உள்ளுக்குள் இருக்கும் வீக்கத்தையும் குறைக்கும். மேலும், இருமலைப்போக்கி, சுவாச மண்டலத்தில் உள்ள வீக்கங்களையும் சரிசெய்யும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்
பீர்க்கங்காய் கலோரிகள் குறைந்த ஒன்றாகும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. பீர்க்கங்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. இதன் ஹைப்போகிளைசெமின் திறன்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
கண்பார்வையை கூராக்க உதவுகிறது
பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வயோதிகத்திலும் கண் பார்வைத்திறனை நன்றாக வைத்திருக்கச் செய்கிறது. கண்ணில் வேறு குறைபாடுகள், மங்கலான பார்வை ஆகிய அனைத்தையும் குணப்படுத்துகிறது.
மலச்சிக்கலைப் போக்குகிறது
பீர்க்கங்காயில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் செல்லுலோஸ் அதிகம் உள்ளது. அது இயற்கையான நார்ச்சத்துக்கள் ஆகும். இதனால், பீர்க்கங்காயை சாப்பிடும்போது மலச்சிக்கல் நீங்குகிறது. இது உங்கள் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை முறைப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்துக்களால் உங்கள் உடல் இதை உறிஞ்சுவதற்கு தாமதம் ஆகிறது. இதனால், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதில் கலோரிகளும் குறைவு. மேலும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த தேர்வாகவும் உள்ளது. பொதுவாகவே நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் உங்களுக்கு உடல் எடையை குறைப்பதில் உதவுகிறது.

டாபிக்ஸ்