Rice Water For Weight Loss: கலோரிகள் குறைவு, செரிமானத்துக்கு நன்மை..! அரிசி தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ
உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான எளிய டிப்ஸ் ஆக அரிசி தண்ணீர் பானத்தை குடிப்பது உள்ளது. இதில் கலோரிகள் குறைவு, செரிமானத்துக்கு நன்மை தரும் தன்மை இருப்பதால் சிறந்த சாய்ஸாக இருக்கிறது. அரிசி தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் பானமாக அரிசி தண்ணீர் உள்ளது. இதை பருகுவதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதுடன், குறைவான கலோரி காரணமாக விரைவான ரிசல்டை கண்முன்னே காணலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
அத்துடன் அரிசி தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, நச்சு நீக்கம் மற்றும் சுவாசத்துக்கு நன்மை என பல்வேறு விதமான நன்மைகளையும் தருகிறது. அரிசி தண்ணீர் உங்களது சருமம், தலை முடி ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கிறது.
அரிசி தண்ணீர் என்றால் என்ன?
அரிசியை கொதிக்க வைக்கும் போது பாத்திரத்தில் எஞ்சியிருக்கும் வெள்ளை மாவுச்சத்து தான் அரிசி நீர். இதை வடித்த கஞ்சி என்று கூறுவதுண்டு. இந்த நீரை வடிகட்டி பருகலாம். இதில் மாவுச்சத்து மட்டுமின்றி, நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ, மெக்னீசியம், நார்ச்சத்து, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றுடன் ஆரோக்கியம் நிறைந்த கார்ப்போஹைட்ரேட்கள் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.
