Rice Water : அரிசி களைந்த மற்றும் வடித்த தண்ணீரில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது பாருங்கள்! இதோ குறிப்புகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rice Water : அரிசி களைந்த மற்றும் வடித்த தண்ணீரில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது பாருங்கள்! இதோ குறிப்புகள்!

Rice Water : அரிசி களைந்த மற்றும் வடித்த தண்ணீரில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது பாருங்கள்! இதோ குறிப்புகள்!

Priyadarshini R HT Tamil
Feb 04, 2025 06:00 AM IST

Rice Water : அரிசி களைந்த மற்றும் வடித்த தண்ணீரில் உள்ள நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக நாம் கீழே விடும் இவற்றில் என்ன உள்ளது பாருங்கள்.

Rice Water : அரிசி களைந்த மற்றும் வடித்த தண்ணீரில் உள்ள நன்மைகளும், பக்கவிளைகளையும் பாருங்கள்!
Rice Water : அரிசி களைந்த மற்றும் வடித்த தண்ணீரில் உள்ள நன்மைகளும், பக்கவிளைகளையும் பாருங்கள்!

அரிசி தண்ணீரில் உள்ள நன்மைகள்

சருமம் பளபளக்க

இதில் உள்ள இயற்கை எண்சைம்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் பொலிவிழந்த சருமத்தை பொலிவாக்குகிறது. அது கரும்புள்ளிகளைப் போக்குகிறது. உங்கள் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது என்று அழகுக்கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வயோதிகத்தை ஏற்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது வயோதிகத்துக்கு எதிரான ஒரு பொருளாக உள்ளது. சரும பராமரிப்பு பொருட்களின் மூலமாக உள்ளது.

சரும எரிச்சலைப் போக்குகிறது

இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், முகத்தில் சிவத்தல் மற்றும் சரும எரிச்சல் ஆகியவற்றைப் போக்குகிறது. இது உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்யும் எக்சைமா போன்ற சரும நிலைகளுக்கு நல்லது என் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சருமத்தின் அழகை அதிகரிக்கிறது

இதில் உள்ள இயற்கை ஸ்டார்ச் என்ற உட்பொருள் சருமத்தில் உள்ள குழிகளைப் போக்குகிறது. சருமத்தை மிருதுவாக்குகிறது. இதனால் உங்களுக்கு மிருதுவான சருமம் கிடைக்கிறது.

சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது

உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுத்து, சருமத்தின் நீர்ச்சத்தை தக்கவைக்கிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது வறண்ட சருமத்துக்கு ஏற்றது. அரிசியில் டிரிசின், பீட்டைன் மற்றும் ஸ்குவாலின் என்ற வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் சருமத்தை வெள்ளையாக்கி, சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது.

முகப்பருக்களைத் தடுக்கிறது

இது சருமத்தில் உள்ள எண்ணெயைக் கட்டுப்படுத்தி முகப்பருக்கள் ஏற்படாமல் காக்கிறது.

பக்கவிளைவுகள்

வறட்சி

அரிசி தண்ணீர் உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுத்தாலும், அதை நீங்கள் அதிகம் உபயோகித்தால் சருமத்தை வறண்டுபோகச் செய்யும். குறிப்பாக ஏற்கனவே வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றதல்ல. அதிகம் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள இயற்கையை எண்ணெயின் அளவைக் குறைத்துவிடும். இதன் அமில அளவு 6க்குள் இருக்கும். எனவே அதிகம் உபயோகித்தால் சருமத்தின் அமில அளவை பாதிக்கும்.

அலர்ஜி

வீட்டில் செய்யப்படும் இதுபோன்ற இயற்கை நிவாரணங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் இதை செய்யும் முன் பரிசோத்துவிட்டு உபயோகிப்பது நல்லது. பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாது. ஆனாலும் கவனம் தேவை.

முகப்பருக்கள்

இது முகப்பருக்களை அடித்து விரட்டினாலும், நொதிக்கவைக்கப்பட்ட அல்லது சரியான அலசாத தண்ணீரில் உள்ள உட்பொருட்கள் முகப்பருக்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சரியான முறையில் நீர்க்கச் செய்து சருமத்திற்கு பயன்படுத்தவேண்டும்.

சீரற்ற சருமம்

இதை நீங்கள் நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் அது உங்களின் சருமத்தின் டோன்களை பாதிக்கிறது. உங்கள் சருமத்தின் குணத்துக்கு ஏற்ப அவ்வப்போது மட்டும் பயன்படுத்துங்கள்.

சூரிய ஒளிக்கு ஏற்றதல்ல

இது சூரிய ஒளியைக்கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டாலும் 2016ம் ஆண்டு காஸ்மெடிக் சயின்ஸில் வெளியான ஆய்வுகள் கூறுகையில், அதை மற்ற தாவரங்களுடன் கலந்து பயன்படுத்தும்போதுதான் ஆற்றல் தருகிறது என்கின்றன. எனவே நேரடியாக நாம் இந்த தண்ணீரை பயன்படுத்தினால், அது உங்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. முறையாக சருமத்தை கழுவாவிட்டால், இது உங்கள் சருமத்தை புறஊதாக்கதிர்களின் தாக்கத்துக்கு ஆளாக்குகிறது.

இறந்த செல்களை நீக்குவது

இந்த தண்ணீரில் இயற்கை குணங்கள் உள்ளது. அது இறந்த செல்களை நீக்குகிறது. இதை நீங்கள் உங்கள் முகத்தில் நீண்ட நேரம் பூசினால் அது உங்களுக்கு அதிக இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதனால் சருமத்தின் இயற்கை குணங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே இதை வாரத்தில் ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்துங்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எப்படி பயன்படுத்துவது?

பருத்தி துணியில் நனைத்து, முகத்தை சுத்தம் செய்யலாம். கற்றாழை ஜெல் போன்றவற்றுடன் கலந்து மாஸ்க் போட்டுக்கொள்ளலாம். அதை 15 நிமிடத்தில் கழுவிவிடவேண்டும். தண்ணீர் கலந்து முகத்தை கழுவலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.