தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Restaurant Channa Masala Restaurant Style Channa Masala Amazing Taste That Makes You Want To Taste It Again And Again

Restaurant Channa Masala : ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா குருமா! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் ஆளை அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Apr 01, 2024 06:50 AM IST

Restaurant Style Channa Masala : இதை வெள்ளை கொண்டைக்கடலையில் செய்தால் கூடுதல் சுவை கிடைக்கும். பிரவுன் நிற கொண்டைக்கடலையிலும் செய்யலாம். இரண்டும் உடலுக்கு நன்மை கொடுக்கக்கூடியவைதான்.

Restaurant Channa Masala : ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா குருமா! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் ஆளை அசத்தும்!
Restaurant Channa Masala : ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா குருமா! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் ஆளை அசத்தும்!

ட்ரெண்டிங் செய்திகள்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

மிளகுத் தூள் – அரை ஸ்பூன்

உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்

பால் – கால் கப்

பிரியாணி இலை – 1

பட்டை – 2

கிராம்பு – 3

கொத்தமல்லித் தழை – கைப்பிடியளவு

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய்த்துருவல் – அரை கப்

முந்திரி – 10

சோம்பு – 2 ஸ்பூன்

செய்முறை

கொண்டைக்கடலையை இரண்டு முறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் மீண்டும் ஒருமுறை கழுவி பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவேண்டும். உங்களுக்கு தேவையான அளவு விசில்கள் விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவேண்டும்.

தேங்காய், சோம்பு மற்றும் முந்திரியை சிறிது தண்ணீர்விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

கனமான கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியவுடன், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவேண்டும்.

பின் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவேண்டும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.

பின் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

கொண்டைக்கடலை மசாலாவோடு நன்றாக கலந்து வந்த பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவேண்டும்.

குருமா கொதிக்க ஆரம்பித்தவுடன், கரம் மசாலா தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

குருமாவின் மேலே எண்ணெய் பிரிந்து வந்ததும் உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கலந்து லேசாக ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவேண்டும்.

கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவேண்டும். சூப்பர் சுவையில் சன்னா மசாலா தயார்.

இதை சப்பாத்தி, பூரி, நாண், பராத்தா என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று என்றாலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.

இதை வெள்ளை கொண்டைக்கடலையில் செய்தால் கூடுதல் சுவை கிடைக்கும். பிரவுன் நிற கொண்டைக்கடலையிலும் செய்யலாம். இரண்டும் உடலுக்கு நன்மை கொடுக்கக்கூடியவைதான்.

மசாலாவுடன் கசகசா சேர்த்தும் அரைக்கலாம். கசகசா வயிற்றுக்கும் நல்லது. மசாலாவையும் கெட்டியாக்கும். இந்த சன்னா குருமாவை ஒருமுறை செய்தால் அடிக்கடி சாப்பிட தூண்டும் அளவுக்கு சுவை நிறைந்ததாக இருக்கும். 

நன்றி - விருந்தோம்பல். 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்