Rest Room Habits : ரெஸ்ட்ரூமில் செல்போன் உபயோகிப்பவரா? எத்தனை ஆபத்துக்கள் உள்ளது என்று பாருங்கள்!
Rest Room Habits : ரெஸ்ட்ரூமில் செல்போன் உபயோகிப்பவரா? எத்தனை ஆபத்துக்கள் உள்ளது என்று பாருங்கள்!
ஸ்மார்ட்ஃபோன்கள் காலத்தில் அனைவருமே தற்போது ஃபோன்கள் உபயோகிக்கிறார்கள். பேசுவதை தவிர பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் இப்போது மக்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். அது உங்கள் உடலுக்கு பிரச்னைகளை ஏற்படடுத்தாமல் இருக்க வேண்டும். இதை அதிகநேரம் ரெஸ்ட்ரூம் செல்லும்போது பயன்படுத்தினால், அது உங்கள் உடலுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இது சரியான நிலையில் நீங்கள் அமராமல் இருக்கச்செய்யும், இதனால் மஸ்க்லோஸ்கெலிடல் பிரச்னைகள் ஏற்படும்
ரெஸ்ட்ரூமில் அதிகநேரம் நீங்கள் செல்போன் பயன்படுத்தினால், அது உங்களை சரியான நிலையில் அமர்ந்திருப்பதை உறுதிப்படுத்தாது. போனையே பார்த்துக்கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனிக்காத நபராக இருந்தால், அது நீங்கள் சரியான நிலையில் அமராததால், மஸ்குலோஸ்கெலிடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால் கழுத்து மற்றும் பின்புறத்தில் வலி ஏற்படும். தண்டுவடம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் நீண்டகால அசௌகர்யங்கள் நாள்பட்ட பிரச்னைகளை பின்னாளில் ஏற்படுத்திவிடும்.
மூலநோய் ஆபத்தை ஏற்படுத்தும்
ரெஸ்ட்ரூமில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் அது மூலநோய் அபாயத்தை ஏற்படுத்தும். குடல் இயக்கத்தின்போது வயிற்றுப்பகுதிக்கு சிரமம் ஏற்படுவது மூலநோயின் பொதுவான விளைவு. ரெஸ்ட்ரூமில் ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்திருக்கும்போது ரெக்டல் நரம்புகளுக்கு அதிக அழுத்தம் செலுத்தப்படுகிறது. நீண்ட நேரம் அமர்ந்துகொண்டு செல்போன் உபயோகிப்பது, வலி நிறைந்த மற்றும் அசௌகர்யமான இந்த சூழலை உருவாக்கும்.
ரத்த ஓட்டத்தை பாதிக்கும்
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ரத்த ஓட்டத்தை பாதிக்கும். குறிப்பாக கால்களுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இது ஆழ்ந்த நரம்பு ரத்தஉறைவு ஏற்பட வாய்ப்பாக அமையும். ரத்த ஓட்டத்தில் ஏற்கனவே பிரச்னைகள் இருந்தால், அதை சரிசெய்யும். டாய்லெட்டில் ஃபோன்களை உபயோகிப்பதால், நீண்ட நேரம் அங்கு அமர்ந்திருக்கும் நிலை ஏற்படும். அது ரத்த ஓட்டம், வாஸ்குலர் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
கிருமி தாக்கத்தை அதிகரிக்கும்
பாத்ரூம்களில் அதிகளவில் பாக்டீரியாக்களும், கிருமிகளும் உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் தங்கும் இடமாக இந்த பாத்ரூம்கள் இருக்கும். செல்போன்களை டாய்லெட்களில் பயன்டுத்தும்போது, அது கைகளில் இருந்து போனுக்கு சென்றுவிடும். இதனால் தொற்றுகள் ஏற்படும். எனவே ரெஸ்ட்ரூம்களில் நீங்கள் செல்போன்கள் பயன்படுத்துபவராக இருந்தால், அவற்றை முறையான சுத்தம் செய்ய வேண்டும். இந்த ஆபத்துக்களை தவிர்க்க கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.
கண்களுக்கு பாதிப்பு
செல்போன்களில் இருந்து வெளியாகும் ஊதா நிற லைட்கள், கண்களை பாதிக்கிறது. குறிப்பாக அதிக நேரம் உபயோகிக்கும்போது அது கண்களில் கூடுதல் அழுத்ததை ஏற்படுத்துகிறது. அதிலும் ரெஸ்ட்ரூம்களில் குறைவான வெளிச்சத்தில் அவற்றை பயன்படுத்தும்போது, அது கண்களுக்கு கேடு விளைவிக்கிறது.
கூடுதலாக, மொபைல் ஃபோன்களை படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் பயன்படுத்தக்கூடாது. அது மெலோட்டினின் உற்பத்தியை தடுத்து உறக்கத்துத்து இடையூறு ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் நீண்ட நேரம் ரெஸ்ட்ரூமில் போன் உபயோகிப்பது உறக்க பிரச்னைகளையும், ஒட்டுமொத்த உறக்கத்தின் தரத்தையுமே சீர்குலைக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்