Respect Your Parents Day : உங்கள் பெற்றோருக்கு மதிப்பளிக்க வேண்டிய நாளில் நீங்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா?
Respect Your Parents Day : உங்கள் பெற்றோருக்கு மதிப்பளிக்க வேண்டிய நாளில் நீங்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா? அதை தெரிந்துகொண்டு செய்தால் அவர்கள் மனம் மகிழ்வார்கள்.

நமது பெற்றோரின் கடின உழைப்பு மட்டும் இல்லையென்றால், நாம் நிச்சயமாக இன்று ஒரு நல்ல நிலையில் இருந்திருக்க முடியாது என்பது நமக்கு தெரியுமல்லவா? நாம் நன்றாக இருப்பதற்காக தங்களை வருத்திக்கொண்டவர்கள் என்றால் அது நம் பெற்றோர்கள் தான். எனவே நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அவர்களை நாம் கவுரவித்துவிடவேண்டும்.
1994ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டனால் பெற்றோர் தினம் தோற்றுவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 1ம் தேதி மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நாம் நமது பெற்றோருக்கு மரியாதை செலுத்தவேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக உங்கள் பெற்றோர் செய்ததற்கு நீங்கள் இந்த நாளில் கட்டாயம் மரியாதை செய்துவிடவேண்டும்.
அவர்களை கவனித்துக்கொள்வது
உங்களின் நேரத்தை அவர்களுக்காக செலவிடுவது, உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிய காரியம் ஆகும். நீங்கள் அவர்களுடன் வசித்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ அவர்களிடம் இன்றைய நாளில் கட்டாயம் பேசுங்கள். உங்களின் கடுமையான பணிகளுக்கு நடுவில் அவர்களிடம் கட்டாயம் இந்த நாளில் அன்பு காட்டுங்கள்.
பரிசு
இன்றைய நாளில் முடிந்தால் அவர்களுக்கு பரிசு கொடுங்கள் அல்லது அவர்களை எங்காவது இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
அவர்களுக்கு திருப்பிக்கொடுங்கள்
இந்த வாழ்வு உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்தது என்பதை மறவாமல், இந்த நாளில் அவர்களுக்கு திருப்பிக்கொடுங்கள். உங்களுக்காக அவர்கள் வாழ்வின் பாதி நாட்களை இழந்தவர்கள் என்பதால் அந்த நன்றியுணர்வு உங்களுக்கு கட்டாயம் இருக்கவேண்டும்.
பாசம் காட்டுங்கள்
பெற்றோரிடம் உள்ள பணத்துக்காக அல்ல அவர்களின் பாசத்துக்காக அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களை நன்றாக கவனித்துக்கொண்டு உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். ஏனெனில் வயோதிக காலத்தில் அன்பு ஒன்றுக்கு மட்டுமே அனைவரும் ஏங்குவர் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் மீதான அன்பு, பாசம், நன்றியைக் காட்ட நீங்கள் அவர்களை அணைத்துக்கொள்வதோ அல்லது முத்தமிடுவதோ உதவும் என்பதால், அவர்களை இந்த நாளில் அணைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்
வார்த்தைகள் வலிமையானவை, நீங்கள் எப்போது என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் பெற்றோர் என்று வருகையில், அவர்களிடம் நீங்கள் பேசுவதில் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் எப்போது பேசிவிடவேண்டாம். குடும்ப விவகாரங்களால் உங்களுக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால், உங்கள் பெற்றோரின் மனதை புண்படுத்திவிடாதீர்கள்.
அவர்களின் கோணத்தை மதியுங்கள்
அவர்களுக்கு பிடித்த மற்றும் சவுகர்யமான வாழ்க்கை வாழும்போது நாம் அதற்கு மதிப்பு கொடுக்கவேண்டும். நமது சொந்த பாதையை தேர்ந்தெடுப்பதில் வாழ்வு உள்ளது. உங்கள் பெற்றோர் அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டுவர எண்ணினால், அவர்களுக்கு அதை செய்ய உதவுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு உறுதுணையாக எப்போதும் இருங்கள்.
அவர்களுக்கு தொழில்நுட்பம் கற்றுக்கொடுங்கள்
உங்கள் பெற்றோரால் தொழில்நுட்பத்தை எளிதாக கற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அது பழக்கமானதாக இருக்காது. எனவே அவர்களுக்கு புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுங்கள்.
எனவே நீங்கள் இணையதளங்களில் ஏதேனும் ஒன்றை புதிதாக பார்த்தால், அவை குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவ்வாறு நீங்கள் அவர்களுடன் பேசும்போது, உங்கள் உரையாடலில் அது சுவாரஸ்யத்தை அதிகரிக்கும்.
அவர்களின் கனவுகளுக்கு துணை நில்லுங்கள்
அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். வயதானால் வாழ்க்கை முடிந்துவிடாது. எனவே வயோதிகத்திலும் கனவு காணுங்கள். உங்கள் பெற்றோருக்கு என்ன கனவுகள் இருந்தாலும், அதை நனவாக்க துணை நில்லுங்கள். அவர்கள் மேலும் கற்கலாம் அல்லது வியாபாரம் செய்யலாம், வெளிநாட்டில் பணிபுரிய விரும்பலாம். எதுவாக இருந்தாலும் அவர்களின் கனவுகளுக்கு துணையிருங்கள்.
நம்மை வளர்க்க தங்கள் வாழ்நாளில் முழுவதையும் தியாகம் செய்தவர்கள். அதற்காக நாம் அவர்களுக்கு திருப்பிக்கொடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான் அல்லது என்ன கொடுத்தாலும் அது குறைவானதுதான். எனவே அவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்துவிடுங்கள். நமது பெற்றோருக்கு இன்னும் சிறப்பாகவே செய்யலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்