தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Renault Has Given Special Discounts On Cars Under A Scheme Called Freedom Carnival

Renault Freedom Carnival: சிறப்புத் தள்ளுபடியில் ரெனால்ட் கார்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 15, 2022 05:05 PM IST

ரெனால்ட் நிறுவனம் ஃப்ரீடம் கார்னிவல் (Freedom carnival) என்ற திட்டத்தின் கீழ் கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி சலுகைகளைக் கொடுத்துள்ளது.

ரெனால்ட் ஃப்ரீடம் கார்னிவல்
ரெனால்ட் ஃப்ரீடம் கார்னிவல்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் பிரபல கார் நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஃப்ரீடம் கார்னிவல் (Freedom carnival) என்ற திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் மாத சலுகையாக 60 ஆயிரம் ரூபாய் வரை அவர்களது கார்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

ரெனால்ட் நிறுவனம் அவர்களது மூன்று கார்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஆனது நாளை (ஆகஸ்ட் 16) வரை கொடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த கார்கள் என இப்பதிவில் காணலாம்.

ரெனால்ட் ட்ரைபர்

இந்த கார் 5.91 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இது ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூபி கார் ஆகும். இந்த காருக்கு 60 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கேரளா, குஜராத், கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொடுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ரூபாய் 55 ஆயிரம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. பத்தாயிரம் ரூபாய் எக்சேஞ்ச் ஆஃபராக ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படுகிறது. 5,000 ரூபாய் வரை ஆக்சஸரீஸ்களுக்கும், 45,000 ரூபாய் வரை ரொக்க தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ரெனால்ட் கிகர்

இந்த கிகர் கார் ரெனால்ட் நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்யூவி காராகும். இது 5.99 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இந்த காருக்கு அனைத்து மாநிலங்களிலும் 25,000 வரை ஃப்ரீடம் கார்னிவல் (Freedom Carnival) திட்டத்தின் கீழ் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. சிறப்புத் தள்ளுபடியாகக் கிராமப்புற மக்களுக்கு ரூபாய் 10,000 வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. 5000 ரூபாய் மதிப்புள்ள ஆக்சஸரீஸ்கள் வழங்கப்படுகின்றன. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது.

ரெனால்ட் க்விட்

இந்த கார் 4.46 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. குறிப்பாகக் கோவா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 50,000 ரூபாய் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் 45,000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த காருக்கு ஐந்தாயிரம் மதிப்புள்ள ஆக்சஸரீஸ்கள் வழங்கப்படுகிறது. பத்தாயிரம் ரூபாய் வரை ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் எக்ஸ்சேஞ்ச் ஆபர் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்