உறவுகள் : உங்கள் இணையர் ஏமாற்றுகிறாரா? எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பமா? இதோ வழிகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உறவுகள் : உங்கள் இணையர் ஏமாற்றுகிறாரா? எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பமா? இதோ வழிகள்!

உறவுகள் : உங்கள் இணையர் ஏமாற்றுகிறாரா? எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பமா? இதோ வழிகள்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 17, 2025 04:13 PM IST

உறவுகள் : உங்கள் இணையர் உங்களுக்கு செய்யும் துரோகத்தை அறிந்துகொள்வது எப்படி? இதோ இங்கு சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உறவுகள் : உங்கள் இணையர் ஏமாற்றுகிறாரா? எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பமா? இதோ வழிகள்!
உறவுகள் : உங்கள் இணையர் ஏமாற்றுகிறாரா? எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பமா? இதோ வழிகள்!

துரோகத்தை அறிந்துகொள்வது எப்படி இதோ வழிகள்

நடவடிக்கைகளில் மாற்றம்

இது முதலில் தோன்றும் அறிகுறி. அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இது உங்கள் உரையாடலில் மாற்றத்தை கொண்டு வரும். உங்களுக்கு மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். உங்களிடை தூரத்தை உருவாக்கும். நன்றாக பேசக்கூடிய மற்றும் திறந்த மனதுடன் செயல்படக்கூடிய இணையர் திடீரென உரையாடலை குறைத்து உங்களிடம் மழுப்புகிறார் என்றால், அதுகுறித்து நீங்கள் தீவிரமாக கவனிக்க வேண்டும்.

உணர்வு ரீதியிலான தொலைவு

உங்கள் இருவருக்கும் இடையே உணர்வு ரீதியிலான தூரம் அதிகரிக்கிறது என்றால், அதுகுறித்து நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். உணர்வு ரீதியாக விலகினாலோ அல்லது ஆர்மின்றி இருந்தாலோ அல்லது எதிர்காலம் குறித்த உரையாடல்களை தவிர்த்தாலோ அதற்கு பின் காரணங்கள் உள்ளதென்று அர்த்தம். உணர்வு ரீதியான பிரிதல் சில தொலைவுகளை ஏற்படுத்தும். தனிநபருக்கும் உணர்வு ரீதியான முழுமைக்கு வெளியில் உறவை தேடிச்செல்வார்கள்.

நெருக்கத்தில் ஏற்ற இறக்கம்

நெருக்கம் முற்றிலுமே குறைந்து காணப்படும். தீடிரென ஆர்வம் குறைவதும் துரோகத்தின் ஒரு வடிவமாக இருக்கலாம். செக்ஸ்வல் நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் அதை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. உறவுக்குள்ளே மாற்றங்கள் தோன்றும்.

ரகசியம் மற்றும் பாதுகாப்பு

முன்னர் உங்களிடம் அனைத்தையும் கூறியவர், தற்போது ரகசியங்களையும், தங்களின் நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதையும் பார்த்தால், அந்த உறவில் கவனம் அதிகம் செலுத்தவேண்டும். இது பாஸ்வேர்டை மறைப்பது முதல் திட்டங்கள் மற்றும் வராமல் இருப்பதற்கான காரணத்தை மறைப்பது வரை தொடரும்.

உரையாடலில் மாற்றம்

உரையாடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் முன் ஃபோன் பேச மாட்டேன் என்கிறார் என்றாலும், அடிக்கடி ஃபோன் வருகிறது என்றாலும், அவர்களின் உரையாடலை பாதுகாக்கிறார் என்றாலும், அங்கு துரோகம் நடக்கிறது என்று அர்த்தம். குறிப்பாக அவரது திட்டங்கள் குறித்து உங்களிடம் கூறாமல் செல்கிறார் என்றால் அதுவே சந்தேகத்தை அதிகரிப்பதாகும்.

செலவுகள்

உங்களுக்கு தெரியாமல் செலவுகள் செய்கிறார் என்றால், உங்களுக்கு தெரியாமல் உங்கள் இணையரிடம ஏதோ ரகசியம் உள்ளது என்று பொருள். எனவே பொருளாதார செலவினங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். எனவே கணக்கில் வராத செலவினங்கள் முக்கியமா என்பதை ஆராய வேண்டும்.

உள்ளுணர்வு தோன்றினால்

சில நேரங்களில் உங்களின் உள்ளுணர்வு முக்கிய பங்கு வகிக்கும். எதுகுறித்தாவது நீங்கள் கவனிக்க வேண்டும் என்று உங்கள் உள்ளுணர்வு அறிவுறுத்தினால், உடனே கவனித்துவிடவேண்டும். ஆனால் உங்கள் உள்ளுணர்வு கூறுவதால் மட்டுமே நீங்கள் ஒரு காரியத்தை செய்துவிட முடியாது. இது உங்கள் இணையருடன் திறந்த மற்றும் நேர்மையான உரையாடலை செய்வதற்கு ஒரு ஊக்கியாகவும் செயல்படும்.

புதிய உறவுகள் மற்றும் நட்புகள்

புதிய நண்பர்கள் குழுவுடன் தொடர்பில் இருப்பார்கள். சமூகத்துடன் தொடர்பில் இருக்கமாட்டார்கள். சமூக செயல்பாடுகளிலும் ஈடுபாடுகள் குறையும். இதுவும் அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றுதான். இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் குறித்து நீங்கள் அறிந்துகொண்டால், உடனடியாக திறந்த மனதுடன் அவர்களிடம் உரையாடிவிடுங்கள்.

மிகவும் உஷாராக இருந்தால்

இணையர் உங்களிடம் மழுப்பலாக பதில் கூறினால் அல்லது எதையும் அதிகம் பாதுகாத்தால், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தால், அதுகுறித்து நீங்கள் கவனிக்க வேண்டும். துரோகத்தை அவர்களின் ரகசியத்தை பாதுகாப்பது மட்டுமே உறுதிப்படுத்திவிடாது எனினும் அது உங்களுக்கு கிடைத்த ஒரு துருப்பு மட்டும்தான், அதை வைத்து நீங்கள் பிரச்னையை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.

உள்ளுணர்வு மற்றும் ஆதாரம்

நீங்கள் உள்ளுணர்வு கூறுகிறது என்று ஒரு விஷயத்தை செய்ய முடியாது. அதே நேரத்தில் அசட்டையாக இருந்துவிடவும் முடியாது. அடிப்படை ஆதாரம் இல்லாத சந்தேகம் தவறானதுதான். எனவே உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், ஆதாரம் மிகவும் அவசியம். ஆதாரம் இல்லாமல் முடிவுக்குள் சென்றாலும் சிக்கல்தான். அதுவும் உங்கள் உறவை பாதிக்கும். எனவே திறந்த மற்றும் நேர்மையான உரையாடலை உங்கள் இணையருடன் செய்து தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.