Relationship : காதல் உறவில் பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்காதாம்! லவ்வர் பாயாக தெரிய என்ன செய்யவேண்டும்?
Relationship : காதல் உறவில் பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்காதாம்! லவ்வர் பாயாக தெரிய என்ன செய்யவேண்டும்?
நீங்கள் எந்த மாதிரி பெண்
பெண்களை சரியாக நடத்தாது முதல் சரியான உரையாடல் இல்லாதது வரை ஒரு குடும்ப உறவில் பெண்களால் ஏற்க முடியாத விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அவர்களுக்கு உண்மை அன்பு ஒன்றுதான் வேண்டும். அதைத்தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்பது நன்றாகவே அவர்களுக்கு தெரியும்.
குறைந்த சுய அக்கறை
ஒரு பெண் அவர்களை மட்டும் எப்போதும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள மாட்டாள். சுய அக்கறை இல்லாத ஆண்களை அவர்களுக்கு பிடிக்காது. வெளித்தோற்றம் மட்டுமல்ல அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளும் எப்படி உள்ளது என்று அவர்கள் சிந்திப்பார்கள்.
ஒரு ஆண் அவனையும் கவனித்துக்கொள்ள வேண்டும். தன் மனைவி, குடும்பம் என அனைவர் மீதும் அக்கறை காட்ட வேண்டும் என்று அவள் விரும்புவாள்.
ஒழுங்கற்ற உரையாடல்
ஒரு உறவில் டேட்டிங் துவங்கிவிட்டது என்றால், பெண்கள் ஆண்களை துரத்திக்கொண்டே இருக்க மாட்டார்கள். உரையாடல் குறைந்தாலோ அல்லது உரையாடல் இல்லையென்றாலோ அவர்கள் தங்களுக்காக அந்த உறவில் பேச விரும்புவார்கள். இது தொடர்ந்தால், அவர்களின் இணையரை அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவர்கள் எப்போது விலகலாம் என்பதும்.
கஞ்சத்தனம்
ஒரு பெண் எப்போதும் தனது பார்ட்னர் தாராளமாக செலவு செய்ய வேண்டும் என்று விரும்புவாள். அது அன்பால் இருக்க வேண்டும். அது கடமையாக இருக்கக்கூடாது எனவும் அவள் விரும்புவாள். தாராள மனப்பான்மை பணத்தில் மட்டுமல்ல, அவர்கள் உங்களை எப்படி நடத்துவார்கள் என்பதிலும் உள்ளது.
கடின காலங்களில் விலகிச்செல்லும் பார்ட்னர்
ஒரு ஆரோக்கியமான உறவுக்கு தெளிவான மற்றும் திறந்த மனதுடனான உரையாடல்தான் சாவியாகும். அதை பெண்கள் தங்கள் பார்ட்னர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். ஒரு வாக்குவாதத்தில் அல்லது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும்போது, பெண்கள் அதை ஏற்பமாட்டார்கள்.
தனிமை மற்றும் தனிப்பட்ட இலக்குகளை மதிக்கவில்லையென்றால்,
ஒரு உறவை கடந்தும், அதாவது ஒரு பார்ட்னரை கடந்தும் பெண்களுக்கு வாழ்க்கை உள்ளது. அவர்களுக்கென்று தனியாக திட்டங்கள் மற்றும் இலக்குகள் உள்ளன. வாழ்க்கையில் அவற்றை அவர்கள் அடைய வேண்டும்.
அதையே அவரது பார்ட்னரிடமும் எதிர்பார்கிறார் மேலும் அவரது திட்டங்களை அவரது பார்ட்னரும் மதிக்க வேண்டும் என்று அவர் விரும்பிறார். அதை மதிக்காத ஆண்களை பெண்களும் மதிப்பதில்லை.
இடைவெளி குறைவது
இருவரும் ஒரு நல்ல தரமான நேரம் செலவிடவேண்டும். ஒரு உறவில் இருவரும் சேர்ந்து தனிமையில் நேரம் செலவிடுவது மிகவும் அவசியம். ஆனால் இருவருக்குமான தனிப்பட்ட நேரம் என்று ஒன்று உள்ளது.
பெண்கள் தங்களுக்கான இடமும் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கான இடத்தை கொடுக்காத பார்ட்னரை அவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக அவர்களின் தேவைகளை புரிந்துகொள்ளாத ஆண்களை பெண்கள் சுத்தமாகவே வெறுக்கிறார்கள். அதையும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
அவமரியாதை
எந்த ஒரு நெருக்கமான உறவிலும் காதல் மிகவும் முக்கியம். ஆனால் அது மட்டும் போதாது. நம்பிக்கை மற்றும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைப்பதும் ஒரு ஆரோக்கியமான உறவுக்கான அடித்தளம். எனவே அவமதிக்கும் பார்ட்னரை பெண்கள் விரும்பமாட்டார்கள். எனவே பெண்களுக்கு மரியாதை கொடுப்பது உறவில் முக்கியம்.
விசுவாசமின்மை
காதல் மற்றும் விஸ்வாசம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்வதாகும். ஒரு பெண் எப்போதும் ஏமாறுவதை விரும்பமாட்டாள். குறிப்பாக தங்களின் பார்ட்னர் ஏமாற்றுபவராக இருந்தால் அவள் கட்டாயம் விரும்பவே மாட்டாள். எனவே பெண்களிடம் அன்பு, காதல், விஸ்வாசத்துடன் நடந்துகொள்வது அவசியம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்