Relationship from Sania Mirza : சோயப் மாலிக்-சானியா மிர்சா விவாகரத்தில் இருந்து நாம் பெறும் உறவு பாடங்கள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship From Sania Mirza : சோயப் மாலிக்-சானியா மிர்சா விவாகரத்தில் இருந்து நாம் பெறும் உறவு பாடங்கள் என்ன?

Relationship from Sania Mirza : சோயப் மாலிக்-சானியா மிர்சா விவாகரத்தில் இருந்து நாம் பெறும் உறவு பாடங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Published Jan 28, 2024 03:59 PM IST

Relationship : சோயப் மாலிக்-சானியா மிர்சா விவாரத்தில் இருந்து நாம் பெறும் உறவு பாடங்கள் என்ன?

Relationship : சோயப் மாலிக்-சானியா மிர்சா விவாரத்தில் இருந்து நாம் பெறும் உறவு பாடங்கள் என்ன?
Relationship : சோயப் மாலிக்-சானியா மிர்சா விவாரத்தில் இருந்து நாம் பெறும் உறவு பாடங்கள் என்ன?

இந்நிலையில் இவர்களின் விவாகரத்து இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற வதந்திகளுக்கு மத்தியில் அதிர்ச்சியான தகவலாக வெளியானபோது இரண்டு பேரின் ரசிகர்களும் அதிர்ந்தனர். சோயிப் மாலிக்கின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் வெளியாகி அவர்களின் விவாகரத்தை உறுதிப்படுத்தியது.

எனினும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்குள் முழுவதும் நாம் உள்ளே செல்லக்கூடாது. எனினும் அவர்களின் விவகாரத்து மூலம் நாம் கற்கவேண்டிய பாடங்கள் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

அவர்களின் திருமண உறவை பலப்படுத்தவே விரும்பினார்கள்

சில ஆண்டுகளாகவே அவர்களின் பிரிவு குறித்த வதந்திகள் உலா வந்த நிலையில் அவர்கள் தங்கள் திருமண வாழ்வில் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சிகளை செய்தனர். 

கடந்தாண்டு அவர்கள் மிர்சா மாலின் ஷோ நடத்தி அந்த வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனாலும் அது அவர்கள் திருமண உறவை கட்டிப்போடவில்லை.

ஏற்றுக்கொள்வது முதல் வருந்துவது மற்றும் கடந்து செல்வது வரை

அவர்களின் 14 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு வாழ்க்கைக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்களுக்கு மத்தியில் ஒத்துவரவில்லை என்பதை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டனர். 

இதையடுத்து சானியா மிர்சா இஸ்லாம் வழக்கப்படி ஒருதலையாக சோயப்புக்கு குலா கொடுத்து பிரிந்துவிட்டார் என செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

கருணை கொள்ளுங்கள்

இந்த விவகாரத்து குறித்த செய்தி பொதுவில் தெரியும் வரை சானியா மிர்சா அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவில் பேசவில்லை. 

மாறாக அவர் அமைதியை கடைபிடித்தார். அவரது குடும்பத்தினர் பகிர்ந்த செய்தியில் கூட அவர் நல்லெண்ணத்துடன் சோயபின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வாழ்க்கையில் தொடர்ந்து செல்லுங்கள்

சோயப் மாலிக்கும் அவரது திருமண முறிவு குறித்த நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டார். அதை கடந்து தனது வாழ்க்கையில் சென்றுவிட்டார். இவர் பாகிஸ்தான் டி.வி. நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துகொண்டார்.

எல்லாவற்றிற்கும் மேல் குழந்தைக்கு முக்கியத்துவம்

சானியாவும், சோயப்பும் சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனினும் அவர்கள் இருவரும் அவர்களின் மகள் இஷானின் பிறந்த நாளில் ஒன்றாக இருந்தார்கள். அவரது பிறந்த நாள் அண்மையில் துபாயில் கொண்டாடப்பட்டது. 

இது அவர்களின் குழந்தை மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பாசத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. அனைத்தையும் கடந்து அவர்கள் குழந்தைக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை காட்டுகிறது.

யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை

சனா ஜாவத்துடன் சோயப் மாலிக் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவியபோதும், சானியா மிர்சாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ அதுகுறித்து எதுவும் பேசவில்லை. 

அவர்களின் நெருக்கம்தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என வதந்திகள் பரவியபோதும், அவர்கள் யாரும் அதுகுறித்து வாய்திறக்கிவில்லை. சானியா மற்றும் சோயப்பும் தங்களின் விவகாரத்து குறித்து பொதுவெளியில் பேசிக்கொள்ளவேயில்லை.

உங்கள் கண்ணியத்தை காக்க வேண்டும்

சானியா மிர்சாவின் குடும்பத்தினரும் இந்த தம்பதிகள் பிரிந்தது குறித்து எதுவும் கூறவில்லை. ஒரு பொது அறிக்கைக்கு என்ன தேவையோ அந்த அளவு மட்டுமே கூறினர். இது அவர்களின் கண்ணியத்தை குறிக்கிறது.

என்ன தவறு என்பதை சிந்தியுங்கள்

இவரது விவகாரத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், சானியா தனது முதல் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தார். அதில் சானியா தன்னை கண்ணாடியில் பார்ப்பது போன்ற படம் இருந்தது. அதில் ரிஃப்ளக்ட் அதாவது பிரதிபலி என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.