Relationship : கணவன் – மனைவி இணக்கத்தை குலைக்கும் படுக்கையறை பழக்கங்கள் குறித்து வாஸ்து கூறுவது என்ன?
Relationship : கணவன் – மனைவி இணக்கத்தை குலைக்கும் படுக்கையறை பழங்கள் குறித்து வாஸ்து கூறுவது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இணையருடன் இணக்கமான வாழ்வு வாழ வேண்டுமெனில், இதை மட்டும் பின்பற்றுங்கள்
திருமணம் என்பது மனிதர்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களுள் ஒன்று. இரு ஆன்மாக்களின் கூட்டு அது. வெற்றிகரமான திருமண வாழ்வுதான் அனைவரின் கனவு, ஆனால் அது நடப்பதில்லை.
பிரச்னைகள் புரிதலின்மையால் மட்டும் ஏற்படுவதில்லை. அவை வாஸ்துகளாலும் ஏற்படுகிறது. அழகான திருமண வாழ்க்கைக்கு இந்த வாஸ்து குறிப்புக்களை பின்பற்றுங்கள்.
உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையான வாஸ்து குறிப்புகள்
கணவன், மனைவி இடையே தனிப்பட்ட இணக்கத்தை உருவாக்குவது திருமணம். இது நிறைய ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ரோலர் கோஸ்டர் பயணத்தைப் போன்றது.
தென்மேற்குப்புறமாகத்தான் மணமான தம்பதிகள் படுத்து உறங்கவேண்டும்.
வெள்ளை, மஞ்சள், பிங்க், இளம் பச்சை அல்லது இளம் ஊதா போன்ற வெளிர் நிற வண்ணங்களை மட்டும் உங்கள் படுக்கையறைக்கு பூசவேண்டும். அது அமைதி மற்றும் நேர்மறையான சூழலைத்தரும்.
கணவன், மனைவி இருவரும் ஒரே படுக்கையில் படுக்கவேண்டும். தனித்தனியாக படுத்து உறங்குவது நல்லதல்ல.
உறவில் எதிர்மறை எண்ணங்களைப் போக்க வேண்டுமெனில் ஸ்டீல் கட்டிலை விடுத்து மரக்கட்டிலை பயன்படுத்துங்கள். அது உங்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.
போதிய நீள மற்றும் அகலம் கொண்ட, செவ்வக வடிவிலான கட்டில்களை வாங்கவேண்டும்.
படுக்கையறையில் மலர்களை வையுங்கள். அவற்றை தினமும் மாற்றுங்கள். அது படுக்கை அறைக்கு புதிய மணத்தை தரும்.
தென்புறத்தில் தலையை வைத்து வடபுறத்தில் காலை நீட்டி படுங்கள்.
படுக்கையறையில் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டுவர நல்ல படங்களை மாட்டுங்கள். அவை நேர்மறையான சிந்தனைகளை எழுப்பக்கூடிய, அழகான படங்கள், லேண்ட் ஸ்கேப்கள் அல்லது குழந்தை கிருஷ்ணர் படங்களாக இருக்கலாம்.
உங்கள் வீட்டின் கதவுகள் நேர்மறை எண்ணங்களைக் கொண்டுவருவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே கதவுகளை திறந்தால் 90 டிகிரி கோணத்தில் திறந்து வையுங்கள். பாதி திறந்திருக்கும் கதவுகள், நல்லதல்ல.
படுக்கையறையில் கண்ணாடியை எங்கு பொருத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை. நீங்கள் மாறி பொருத்திவிட்டால் அது உங்கள் வீட்டில் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
வீட்டின் வடகிழக்குப்பகுதி தூய்மையாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டர்ல உறவில் சிக்கல் ஏற்படும்.
உறவு சிறக்க நிதிநிலையும் காரணமாகிறது. எனவே பணத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கவேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி தவிர்க்க வேண்டியது என்ன?
தென் கிழக்கு அல்லது வடகிழக்கு படுக்கையறையை தவிர்க்க வேண்டும. இது திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும்.
வடகிழப்பகுதியில் சமையலறை இருக்கக்கூடாது. இது வீட்டின் இதயப்பகுதி போன்றது என்பதால், இங்கு சமையலறை இருந்தால் அது வீட்டின் நேர்மறை ஆற்றலுக்கு குந்தகம் விளைவிக்கும்.
முட்கள் மற்றும் போன்சாய் மரங்களை அறைக்குள் வைக்காதீர்கள்.
அடர் நிறங்கள் எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டுவந்து சேர்க்கும்.
மெட்டல் கட்டில்களை தவிர்த்து, மரக்கட்டில்களை பயன்படுத்துங்கள். கட்டிலுக்கு அடியில் எதுவும் வைத்தால் அது கணவன் – மனைவி உறவை பாதிக்கும்.
தென்மேற்கு திசையில் டேங்கை வைக்கக்கூடாது. இது எதிர்மறையாற்றலைக் கொண்டு வந்து சேர்க்கும். கணவன் – மனைவி இடையே எதிர்மறை மனநிலைகளை ஏற்படுத்தும்.

டாபிக்ஸ்