Relationship : ப்ரேக் அப் ஆனவர்கள் எதிர்கொள்ளும் துன்பபடிநிலைகள் என்னென்ன?
Relationship : ப்ரேக் அப் ஆனவர்கள் எதிர்கொள்ளும் படிநிலைகள் என்னென்ன?

ப்ரேக் அப்பின் படி நிலைகள்
ப்ரேக் அப் ஆழமான காயங்களை ஏற்படுத்துகிறது. அவை உணர்வுபூர்வமாகன எழுச்சிகளை உருவாக்கி, ஒருவரின் தன்னம்பிக்கையை குலைத்துவிடுகிறது. ஒருவரிடம் இருந்து பிரிந்துவிட்டால், ஏற்படும் கடின காலங்கள் என்பது நீங்கள் ஏற்க முடியாத ஒன்றாக இருக்கும். தொடர்ந்து ஒருவருக்கு அதிர்ச்சி, துக்கம் மற்றும் மறுப்பு ஆகியவை தொடர்ந் ஏற்படுவதாக உணர்வீர்கள்.
ப்ரேக் அப்பில் இருந்து விடுபடுவது என்பதற்கு பொறுமை மற்றும் நேரம் தேவை. உங்களுக்கு நெருக்கமானவர் மற்றும் அன்பானவர்களிடம் இருந்து உங்களுக்கு ஆறுதல் கிடைத்தால், அது உங்களுக்கு ப்ரேக்அப்பால் ஏற்படும் காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டதாக இருக்கும். ப்ரேக்அப்பானவர்கள் எதிர்கொள்ளும் படிநிலைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உண்மையை உணர்வது கடினமாக இருக்கும்
முதலில் திடீரென ஏற்படும் ப்ரேக் அப்பில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. மறுப்பு என்பதை நாம் கடப்பது கடினமான ஒன்று. ஒரு உறவின் முடிவு என்பது மிகவும் கடுமையான நேரத்தில் நடைபெறும். ஒருவர் உணர்வு ரீதியாக ஒரு பார்ட்னரிடம் இருந்து பிரிந்துவிட்டால், அது அவர்களை முற்று முழுதாக உடைத்துவிடும்.
உணர்ப்பூர்வமான வலி
அதிர்ச்சியில் ஒருவர் கடுமையான வலி மற்றும் பயத்தை உணர்கிறார்கள். ஒரு உறவு பிரிவதில் உள்ள வருத்தம் மற்றும் கவலை, அந்த உறவு தொடர்பான கனவுகள் குலைந்துபோன கவலைகள் ஆகியவை அதனுடன் தொடர்புகொண்டிருக்கும். ப்ரேக்அப்பால் உணர்வு ரீதியான பிரச்னைகள், இழப்பின் வலியை தனியாக கையாள்வது மிகவும் கடினமான ஒன்று.
கோவம் மற்றும் விரக்தி
கோவம், விரக்தி மற்றும் மனகசப்பு ஆகியவை ப்ரேக் அப்பின்போது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான மனவலிகள். அந்த உறவில் ஒருவருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை உற்றுநோக்க வேண்டும். வாக்குவாதங்களை பரிசீலிக்க வேண்டும். அது கோவம் மற்றும் விரக்தியில் முடியும்.
வருத்தம் மற்றும் மீள்வது
ஒரு சூழலில் சிலர் அவர்களின் முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் மீண்டும் சேர முயற்சிப்பார்கள். கடந்த கால உறவை அவர்கள் புதுப்பிக்க நினைப்பார்கள். ப்ரேக்அப் அவர்களுக்கு குற்ற உணர்வை கொடுக்கும். அmவர்கள் தங்கள் காதலன் அல்லது காதலியை தேடுவார்கள்.
சூழலை புரிந்துகொள்வது
இந்த நிலையில் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு உறவின் முடிவு என்பது வாழ்வின் முடிவல்ல என்பதை ஒருவர் முதலில் உணரவேண்டும். எனவே இதுபோல் ஏற்றுக்கொள்வது ஒருவரை பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கும், தொடர்ந்து செல்வதற்கும் உதவுகிறது. உறவை முடித்துக்கொள்ள விரும்பும் எண்ணம் கொண்டவர்கள், படிப்படியாக உணர்வு ரீதியான அழுத்தங்களில் இருந்தும் விடுபடுவார்கள். ஆனால் இது படிப்படியாக நிகழும்.
தன்னம்பிக்கையை மீட்பது
ஒரு உறவை முடித்துக்கொள்ளும்போது நமது தன்னம்பிக்கை முற்றிலும் குலைந்துவிடும். ஒருவரை அச்சமடையச் செய்யும். இந்த நிலையில் தன்னம்பிக்கை துளிர்விடத்துவங்கும். இப்போது தங்கள் மீது கவனம் செலுத்துவார்கள். தங்களுக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவார்கள்.
மன்னித்து, தொடர்ந்து செல்வது
இறுதியில், மன்னித்துவிட்டு, பழைய நினைவுகளை மறந்துவிட்டு, முன்னேறிச்செல்வார்கள். இந்த நிலையில், ஒருவர் அதிகமாக கடந்த காலம் குறித்து ஆய்வு செய்து கொண்டே இருக்கக்கூடாது. குறிப்பாக ப்ரேக் அப்பில் இது நிகழ வாய்ப்புள்ளது. இது தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்த தூண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் நல்ல பிணைப்பை ஏற்படுத்த உதவும். பிரிவில் இருந்து ஒருவர் மீண்டு வருவது, மனஅழுத்தம் மற்றும் அச்சம் ஆகியவற்றில் இருந்து முற்று முழுதாக வெளியேற அவர்கள் கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்