தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : உங்கள் உறவு அபாயகட்டத்தில் உள்ளது என உணர்த்தும் சிவப்புக்கொடி நடத்தைகள் என்ன?

Relationship : உங்கள் உறவு அபாயகட்டத்தில் உள்ளது என உணர்த்தும் சிவப்புக்கொடி நடத்தைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Jun 14, 2024 12:31 PM IST

Relationship : உங்கள் உறவு அபாயகட்டத்தில் உள்ளது என உணர்த்தும் சிவப்புக்கொடி நடத்தைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Relationship : உங்கள் உறவு அபாயகட்டத்தில் உள்ளது என உணர்த்தும் சிவப்புக்கொடி நடத்தைகள் என்ன?
Relationship : உங்கள் உறவு அபாயகட்டத்தில் உள்ளது என உணர்த்தும் சிவப்புக்கொடி நடத்தைகள் என்ன?

ஆண், பெண் உறவு அல்லது என்று எதிலும் சமத்துவம் என்பது கட்டாயம் இருக்கவேண்டும். குறிப்பாக காதல் உறவில் யாரும் யாரையும் அடக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது. அவ்வாறு செய்யும் உறவு கட்டாயம் நல்ல உறவு கிடையாது.

நச்சு உறவு என்று ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் முறித்துக்கொள்வது நல்லது. அந்த உறவு தொடர்ந்தாலும் வெற்றிகரமாக அமையாது. எனவே உங்கள் உறவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான சிறிய வழிகாட்டி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் உறவு ஆபத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

டேட்டிங் சிவப்புக்கொடி

டேட்டிங்கில் சிவப்புக்கொடி என்றால் என்ன?

டேட்டிங்கில் சிவப்புக்கொடி என்பது எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது உங்கள் பார்ட்னரிடம் இருந்து வெளிப்படும் நடத்தைகள் ஆகும். அது உறவில் பிரச்னைகள் அல்லது அக்கறைகளை சுட்டிக்காட்டுவதாகும்.

தொடர்ச்சியில்லாத நடத்தை

தொடர்புகொள்வது அல்லது செயல்பாடுகள், ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை உள்ளதா என்பதை பாருங்கள். அந்த உறவில் நேர்மையான ஆர்வம் இருக்காது மற்றும் நம்பிக்கை இருக்காது.

ட்ரெண்டிங் செய்திகள்

எல்லைகளை மதிக்காமல் இருப்பது

உங்களின் எல்லைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறதா என்று பாருங்கள். அது உங்கள் சுதந்திரம், தனித்தன்மை ஆகியவற்றில், மரியாதை குறைவதையும், அசவுகர்யத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

கட்டுப்படுத்தும் குணம்

உங்களின் பார்ட்னர் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கொண்டுள்ளார்களா என்று பாருங்கள். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் குற்றம், குறை கூறிக்கொண்டு இருக்கிறார்களா என பாருங்கள். உங்களை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து பிரிக்கிறார்களா என்று பாருங்கள்.

அதிக பொறாமை

உங்கள் பார்ட்னர் குறித்து எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் அதிகப்படியான பொறாமை அல்லது தன்னுடடையாக்குவது அதிகம் இருக்கிறதா என்று பாருங்கள். இதுவும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளின் அறிகுறியாகும்.

நேர்மையின்மை அல்லது ரகசியம்

நேர்மையின்மையின்மையாக உங்கள் பார்ட்னர் நடந்திருந்தால், அதுகுறித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் ஏதாவது ரகசியத்தை கடைபிடிக்கிறார்களா என்பதையும் பாருங்கள். ஒரு ஆரோக்கியமான உறவில் நம்பிக்கை மிகவும் அவசியம். உறவை பொய்கள் நாளாக நாளாக தகர்த்துவிடும்.

உரையாடல் குறைபாடு

உங்கள் பார்ட்னர் உங்களிடம் திறந்த மனதுடனும், நன்றாகவும் உரையாடவில்லையா? அதுகுறித்து அறிந்துகொள்ளுங்கள். இதுவும் உங்கள் உறவில் புரிதலின்மை மற்றும் தீர்க்கப்படாத பிரச்னைகளையும் உருவாக்கும்.

மற்றவர்களை அவமதிப்பது

மற்றவர்கள் உங்கள் பார்ட்னரை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். மரியாதையுடன் நடத்துகிறார்களா அல்லது அவமரியாதைப்படுத்துகிறார்களா என்று பாருங்கள். இதேபோல்தான் அவர்கள் உங்களை எதிர்காலத்திலும் நடத்துவார்கள் என்பதற்கான சிவப்புக்கொடியாகும்.

துன்புறுத்தும் நடத்தை வரலாறு

உங்கள் பார்ட்னர் இதற்கு முன்னர் யாரையாவது துன்புறுத்தியுள்ளாரா என்பதை பாருங்கள். அந்த துன்புறுத்தல் அவர்களின் தொடர் நடவடிக்கையாக உள்ளதா என்பதையும் கண்ணுறுங்கள். 

அதை மீண்டும் அவர்கள் செய்யத்தயங்கமாட்டார்கள். அதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படவில்லையென்றால், காலம் செல்லச்செல்ல அது அதிகமாகி உங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

எனவே இவற்றையெல்லாம் பின்பற்றி, உங்கள் பார்ட்னர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதில் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உள்ளதா என்று பாருங்கள். அப்படி இந்த அறிகுறிகள் தோன்றினால் இது நச்சு உறவு என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதிலிருந்து விலகுவதுதான் நல்லது.