தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Relationship: Unsettled By The Affair? How To Cope With Strength? Here's The Guide!

Relationship : விவகாரத்தால் மன அமைதியின்மையா? பலத்துடன் எதிர்கொள்வது எப்படி? இதோ வழிகாட்டி!

Priyadarshini R HT Tamil
Jan 30, 2024 02:52 PM IST

Relationship : விவகாரத்தால் மன அமைதியின்மையா? பலத்துடன் எதிர்கொள்வது எப்படி? இதோ வழிகாட்டி!

Relationship : விவகாரத்தால் மன அமைதியின்மையா? பலத்துடன் எதிர்கொள்வது எப்படி? இதோ வழிகாட்டி!
Relationship : விவகாரத்தால் மன அமைதியின்மையா? பலத்துடன் எதிர்கொள்வது எப்படி? இதோ வழிகாட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

அது உங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. விவகாரத்துக்கு மத்தியில் பலத்தை தேடுவதற்கு எதிர்த்தெழும் மனநிலையை உங்களுக்குள் உருவாக்கி, உங்களை பரிவுடன் நடத்துங்கள். ஒரு விவகாரத்தை எப்படி பலமுடன் எதிர்கொள்வது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் வெளியேறுவதற்கான நேரம் கொடுங்கள்

கடந்த கால அனுபவங்களில் இருந்து, வெளியேறுவதற்கும், காயங்கள் ஆறுவதற்கும் உங்களுக்கு தேவையான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இணையரை பிரிந்தவுடன் உங்களுக்கு அனைத்திலிருந்தும் வெளியேறுவதற்கு சிறிது காலம் தேவைப்படும். உங்கள் கவனித்துக்கொள்ளுங்கள். இந்த சமூகம் உங்கள் விவகாரத்து குறித்து பேசும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு பிடிக்காத ஒரு திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது. அது உங்களுக்கு நல்லதுதான். உங்களின் திருமண உறவு முறிந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ முடியாது என்பது இல்லை. உங்களின் மகிழ்ச்சி உங்களிடம்தான் உள்ளது.

கடுமையான உணர்வுகளே உங்களை வலுப்படுத்தும் ஆயுதங்கள்

சோகம், கோவம் உள்ளிட்ட கடுமையான எந்த உணர்வையுமே நீங்கள் கட்டுப்படுத்த நினைக்காதீர்கள். விவகாரத்தின்போது சக்தி கிடைப்பதற்கு உங்கள் மனதில் உருண்டோடும் இந்த உணர்வுகளே உங்களை தேற்றும் ஆயுதமாக மாறும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து நீங்கள் அன்பை பெறுவதும் உங்களை பலப்படுத்தும் வழிகளுள் ஒன்று.

தனியாக இதை கடக்க நினைக்காதீர்கள்

விவகாரத்துக்கு முன்னர் குழப்பமான மனநிலை இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதை நீங்கள் தனியாக எதிர்கொள்தீர்கள். உங்கள் குடும்பம் அல்லது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து உதவியை பெற்றுக்கொள்ளுங்கள்.

உங்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தங்களே உங்களை இதிலிருந்து மீட்கும் வழியாகும். நீங்கள் இந்த பிரிவுத்துயரில் இருந்து மீள்வதற்கு அவர்கள் வழிகாட்டியாக அமைவார்கள்.

உங்களின் தனிமையை நீங்கள் கொண்டாடுங்கள்

விவகாரத்து பெற்றபின் உங்கள் வாழ்க்கை அப்படியே நின்றுவிடாது. இன்னும் நிறைய அனுபவங்களை நீங்கள் பெறவேண்டியுள்ளது. நிறைய விஷயங்களை நீங்கள் கற்று ஆராய வேண்டியுள்ளது. இது மாற்றத்தின் காலம். உங்களுக்கு இங்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களை மீண்டும் உருவாக்கிக்கொள்ள சுதந்திரம் கிடைத்துள்ளது.

ஏதோ ஒரு பிடிக்காத ஒன்றுதான் உங்களை விவகாரத்தை நோக்கி தள்ளியிருக்கிறது. எனவே இப்போது எந்த தடையும் இன்றி நீங்கள் உங்கள் கனவுகளை நோக்கி செல்லலாம். விவகாரத்துக்குப்பின் உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை குறித்த நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள்

விவகாரத்து மற்றும் பிரிவு, உங்களுடன் சில காலங்கள் பயணித்தவரை விட்டுவிலகுவது கட்டாயம் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து மீண்டு வருவது புத்துணர்ச்சியையும், மனக்காயங்களுக்கான ஆறுதலையும் கொடுக்கிறது. எனவே நீங்கள் மீள்வீர்கள் என்ற நம்பிக்கை மற்றும் சுயபரிவு உங்களின் கடுமையான சூழல்களையும் நீங்கள் கடப்பதற்கு உதவுகிறது.

நீங்கள் எதை செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள்

விவகாரத்துக்குபின் வாழ்வில் உங்களுக்கு ஒரு பிடிமானம் இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும். உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். எனவே உங்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். மேலும் உங்கள் காயங்களை ஆற்றும் செயல்களிலும், ஈடுபடுங்கள்.

உங்கள் ஆசைகளை பட்டியலிடுங்கள். அவற்றை நிறைவேற்ற பாடுபடுங்கள். விவகாரத்துக்கு பின்னர் உங்களின் தனித்தன்மையை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். வாழ்வில் நிறைய மகிழ்ச்சிகள் வந்துகொண்டிருக்கின்றன மற்றும் சாதிப்பதற்கு நிறைய உள்ளது என்று நம்புங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்