Relationship Tips: ரிலேஷன்ஷிப்பில் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!
Relationship Tips: வெற்றிகரமான உறவுக்கு ஒவ்வொரு ஜோடியும் ரிலேஷன்ஷிப்பில் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
Relationship Tips: உறவுகள் எப்போதும் ஒரே பாதையில் இருந்தால் அவை சலிப்பை ஏற்படுத்தும். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள், ஒரே உணவுகள், ஒரே உரையாடல்கள் மற்றும் பலவற்றை எதிர்பார்க்கும்போது, அவை கூட உறவில் சலிப்பை உண்டு செய்யலாம்.
எனவே, ஒரு உறவை வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதற்கு, நீங்கள் இருவரும் ஒருவரைப் பற்றி, ஒருவர் தெரிந்துகொண்டு விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் நெருக்கமான, காதல் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேட்பது பிணைப்புக்கு வலுசேர்க்கும்.
உளவியலாளர் டோட் பராட்ஸ், தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், ஒவ்வொரு ஜோடியும் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு விஷயங்களை பரிந்துரைக்கிறார்.
இணையின் குழந்தை கால வரலாறு:
ஆரம்பகால திருமண அல்லது காதல் வாழ்க்கையில்,நம் இல்லறத்துணை நாம் யார் என்பதை தேடிக்கொண்டே இருப்பார்கள்.
உண்மையில், ரிலேஷன்ஷிப்பில் பார்ட்னரைப் பற்றி, ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றனர்.
ஒருவருக்கொருவர் தங்களது பழைய வாழ்க்கை முறைப் பற்றி, எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் பிரச்னை வராமல் வாழ்வதிலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதிலும், உறவினர்கள் மூலம் வரும் பிரச்னைகளை பகுத்தறிந்து சமாளிக்கவும் உதவும்.
உறவு வரலாறு:
தம்பதிகள் ஒருவருக்கொருவர் உறவு வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதில் சமூகம் சார்ந்த அவரது செயல்பாடு, காதல் சார்ந்த செயல்பாடு ஆகியவையும் அடங்கும். கடந்த கால சவால்கள் முதல் கற்றுக்கொண்ட பாடங்கள் வரை ஒருவருக்கொருவர் ரிலேஷன்ஷிப்பில் கடந்த காலத்தை அறிந்து கொள்வது, ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும்.
காதல் குறிப்புகள்:
ஒவ்வொருவருக்கும் அன்பை எவ்வாறு கொடுக்கவும் பெறவும் விரும்புகிறார்கள் என்பதற்குப் பல்வேறு விருப்பங்கள் உள்ளன. மேலும் காதல் மொழி ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட ரசனை கொண்டது. உங்கள் நெருக்கமான விருப்பங்களை, நீங்கள் விரும்பும் சொற்களை, செயல்களை மற்றும் அனுபவங்களை வெளிப்படையாகக் கூறுங்கள். சூழல், நாளின் நேரம் மற்றும் பலவற்றைப் பொறுத்து இந்த விருப்பத்தேர்வுகள் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தகவல்கள்தான் தேவைகளை எதிர்பார்ப்பது மற்றும் கவனிப்பை வழங்குவது என்பதற்கு உதவும்.
பகுத்தறிவு சவால்கள்:
புறச்சூழல்களில் சிலர் உங்கள் துணையைப் பற்றி தவறாக தூண்டிவிடும்போதும், பணியில் கிடைக்கும் ஏமாற்றத்தின்போதும், வெறுப்பின்போதும் அதை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் காட்டி சண்டைபோடாதீர்கள். சமாதானம் ஆகப்போகுங்கள். பிரச்னைகள் எழுவதற்கு முன்பு, அதனை பல கோணங்களில் ஆராய்ந்து இல்லறத்துணையிடம் நம்பிக்கையை உருவாக்குங்கள். சிந்திக்க நேரம் கொடுங்கள். பிரச்னைகள் வருவது இயல்பானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பாலியல் ஆசைகள் மற்றும் சிற்றின்பம்:
நல்ல பாலியல் தொடர்புகள் இருபாலாராலும் விரும்பப் படுகின்றன. செக்ஸில் நீங்கள் ஒன்றை விரும்பினால், அதை உங்கள் இணையிடம் தெரியப் படுத்துங்கள். தொடுதல், கற்பனைகள், உடலுறவு, சிற்றின்பம் ஆகியவற்றில் உங்கள் பார்ட்னரின் விருப்பத்தினை மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேசி தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த உரையாடலுக்கு ஒவ்வொரு பார்ட்னரும் உண்மையில் காது கொடுத்து கேட்கின்றனர்.
அக உலகம்:
நம் அனைவருக்கும் சிக்கலான மற்றும் கிளர்ச்சியூட்டும் அக மனது உள்ளது. நமது அன்றாட அனுபவத்தின் சீரற்ற எண்ணங்கள் குறித்து நாம் அறிவோம். உங்கள் உள் எண்ணங்களையும் உணர்வுகளையும் இல்லறத்துணையிடம் பகிர்ந்து கொள்வதன்மூலம், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
கனவுகளும் எதிர்காலத் திட்டங்களும்:
ஒருவரது கனவுகள் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் முதல் நாளில் இருந்தே இல்லறத் துணையிடம் நிறுத்தாமல் பகிரத் தொடங்க வேண்டியது முக்கியம். உறங்கும் போது கனவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொழில்முறை வெற்றிக்கான உயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான கனவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் 5, 10, 15 மற்றும் 20 ஆண்டு திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்