தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship: உங்கள் உறவை வெற்றிகரமான பாதையில் அழைத்துச்செல்வதற்கு இதுதான் முக்கிய காரணம்!

Relationship: உங்கள் உறவை வெற்றிகரமான பாதையில் அழைத்துச்செல்வதற்கு இதுதான் முக்கிய காரணம்!

Priyadarshini R HT Tamil
Jun 07, 2024 12:02 PM IST

Relationship: உங்கள் உறவை வெற்றிகரமான பாதையில் அழைத்துச்செல்வதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Relationship: உங்கள் உறவை வெற்றிகரமான பாதையில் அழைத்துச்செல்வதற்கு இதுதான் முக்கிய காரணம்!
Relationship: உங்கள் உறவை வெற்றிகரமான பாதையில் அழைத்துச்செல்வதற்கு இதுதான் முக்கிய காரணம்!

ட்ரெண்டிங் செய்திகள்

நாம் எங்கு சென்றாலும் அங்கு நல்ல உறவையே பேணவேண்டும் என்று எண்ணுவோம். நாம் பணியிடம் அல்லது தனிப்பட்ட முறையில் என்று எங்கு உறவில் இருந்தாலும் அது ஒரு நல்லுறவாக இருக்கவேண்டும் என்று எண்ணுவோம். 

ஆனால் நம் அனைவருக்கும் நல்ல சுற்றம் அமையுமா? உங்கள் உறவை மேம்படுத்துவது எது என்று அண்மையில் நடந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் உளவியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது.

ஆய்வு

ஆய்வில், சமூக அறிவியலாளர்கள், ஒரு உறவில் இரு நபர்களிடையே உள்ள திறன்களில் இரு வகை தனிப்பட்டவைகள், எப்படி மக்கள், தங்களின் தொடர்புகளை பாதிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள உதவுகிறது என்று குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இதில் முதல் வகை தங்களின் பார்ட்னரை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற அறிவை குறிப்பதாக உள்ளது. அவர்களின் குணம், வாழ்வில் அவர்கள் மேற்கொள்ளும் தேர்வுகள் மேலும் பல ஆகும். 

இரண்டாவது வகை எந்தளவுக்கு அவர்களின் பார்ட்னர்களின் மீது நம்பிக்கை உள்ளது அல்லது அவர்களை எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது என்பதாக அது உள்ளது.

ஒரு தனிநபராகவும், அவரின் விருப்பு, வெறுப்புக்களை புர்ந்துகொள்பவராகவும், எந்தளவுக்கு ஒருவரையொருவர் தெரிந்து வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்தது என்ன என்பதையும் அது குறிப்பிடுகிறது.

இந்த இரண்டு வகையையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இந்த ஆய்வின் மூலம் எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க விரும்பினார்கள். இவ்விரண்டில் எது அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர்கள் மதிப்பிட்டார்கள். அவர்களின் உறவில் எது அவர்களை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வைத்திருக்கிறது என்பதை கணக்கிட முடிவெடுத்தார். 

மகிழ்ச்சியான உறவுக்கு நீங்கள் உங்கள் பார்ட்னரை அதிகம் புரிந்துவைத்திருப்பது காரணமா அல்லது அவர்கள் உங்களை அதிகம் புரிந்துவைத்திருப்பது காரணமா என்பதை தெரிந்துகொள்வது ஆய்வின் நோக்கமாகும்.

முடிவு

இந்த ஆய்வின் முடிவாக, ஒருவருக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் அவர்கள் உறவில், அவர்களின் பார்ட்னர் அவர்களை நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும்போதுதான் அல்லது நம்பும்போதுதான் அவர்களின் உறவு மகிழ்ச்சியாக இருந்தது.

காரணங்கள்

அதற்கான காரணங்களாக உறவில் ஒருவர், அவரைப்பற்றி பேசுவதையும், அவரின் பேச்சை கேட்பதையும், புரிந்துகொள்வதையும் விரும்புவார்கள். அந்த உறவு வளர்வதற்கு, இரண்டு பார்ட்னர்களும், அவர்களின் முக்கியத்துவத்தை நன்றாக புரிந்துகொள்ள உதவும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த முடிவுகள் காதல் உறவில் இருக்கும் பார்ட்னர்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல, மற்ற உறவுகளில் உள்ளவர்களுக்கும் உதவுகிறது. நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என அவர்களின் உறவுகள் உள்ளது. உதாரணமாக, உங்கள் உடன் பணிபுரிபவர்களின், அவர்களின் குடும்பம் எப்படி உள்ளது மற்றம் அவர்கள் பிரச்னைகளில் உள்ள நேரங்களில் உங்களால் அவர்களுக்கு உதவமுடியும் என்று தெரிவித்தால், அது அவர்களை புரிந்துகொள்ளவும், அவர்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. இது அவர்களின் உறவை வளர்க்க உதவுகிறது.

இதற்கிடையில் தம்பதிகளுக்கு, அவர்களின் உறவை மேம்படுத்தும், ஆழ்ந்த கேள்விகளை அவர்க இருவரையும் ஒருவரையொருவர் கேட்க உற்சாகப்படுத்தவேண்டும். அந்த கேள்விகள், அவர்களின் எதிர்கால திட்டங்கள், அச்சங்கள், அவர்கள் செய்யவேண்டியவை என இருக்கலாம். இது அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள உதவும். தம்பதிகளாக இருவரும் வளர உதவும்.

WhatsApp channel

டாபிக்ஸ்