தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Relationship These Are The Important Questions To Ask Your Partner Before Marriage

Relationship : திருமணத்திற்கு முன் உங்கள் இணையராகப் போகிறவரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் இவைதானாம்!

Priyadarshini R HT Tamil
Jan 06, 2024 03:10 PM IST

Relationship : திருமணத்திற்கு முன் உங்கள் இணையராகப்போகிறவரிடம் ஏன் பேச வேண்டும்?

Relatioship : திருமணத்திற்கு முன் உங்கள் இணையராகப் போகிறவரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் இவைதானாம்!
Relatioship : திருமணத்திற்கு முன் உங்கள் இணையராகப் போகிறவரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் இவைதானாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இங்கே உங்களுக்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஒருவருடன் நீண்ட கால உறவில் இருப்பதற்கு முன் அவரிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? அந்த கேள்விகளை தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தைகள் குறித்த உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம்

ஒரு குடும்பத்தை துவங்குவதற்கு முன் உங்களின் எதிர்பார்ப்புகள் என்ன? ஆசைகள் என்ன என்பது குறித்து நீங்கள் கட்டாயம் உங்கள் இணையருடன் பேச வேண்டும். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் வேண்டும் என்பது குறித்து இருவரும் பேசவேண்டும். நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்களிடம் பேசிவிடவேண்டும்.

பிரச்னைகளை எப்படி தீர்ப்பீர்கள்

ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எப்படி தீர்ப்பீர்கள் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இது ஆரேக்கியமான உறவுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. உங்களின் உரையாடல் ஸ்டைல்கள் குறித்து பேசுங்கள், நீங்கள் கருத்து வேறுபாடுகளை எவ்வாறு கையாள்வீர்கள்? எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், நீங்கள அதை எவ்வாறு தீர்ப்பீர்கள் என்பது குறித்து பேசவேண்டியது கட்டாயம்.

கடந்த கால வாழ்க்கை

உங்கள் இருவரின் கடந்த காலங்களை புரிந்துகொள்வது மிகவும் அவசியம். கடந்த கால உறவுகள், பிரிவுகள், குடும்பங்கள், தனிப்பட்ட அனுபவங்கள் என அனைத்தையும் பகிர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். இது உங்களிடையே மேலும் திறந்த உரையாடல் மற்றும் ஆதரவான சூழலை உருவாக்கி உங்கள் உறவை அர்த்தமுள்ளதாக்கும்.

உங்களின் நீண்ட நாள் இலக்குகள், ஆசைகள், விருப்பங்களை தெரிவிக்க வேண்டியமு அவசியம்

உங்கள் இருவரின் எதிர்கால திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வது, உங்கள் இருவரின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கவும், உங்கள் வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும். உங்கள் வாழ்க்கை முறை, குடும்ப திட்டங்கள் மற்றும் உங்களின் தேவைகளை தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வதில் உங்கள் பார்வை என்ன?

உங்கள் வீட்டு வேலைகள், குடும்பா பொறுப்புகள், சுமைகள் என இரண்டிலும் இருவரும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உங்கள் இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். எனவே இதுகுறித்த ஒரு தெளிவான புரிதல் உங்களுக்கு வேண்டும். ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும், வீட்டை நிர்வாகம் செய்வதில் இருவரிடையே ஏற்படும் பிரச்னைகளை சரிசெய் யஉதவும்.

பொருளாதாரத்தை எப்படி கையாள்வீர்கள்? பொருளாதார திட்டங்கள் என்ன?

இதை நீங்கள் உங்கள் இணையரிடம் கட்டாயம் பேசவேண்டும். ஏனெனில் வீட்டில் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாவது இந்த பொருளாதாரம். பொருளாதார பற்றாக்குறை இருந்தாலே அந்த வீட்டில் சண்டைகள் அதிகம் ஏற்படும். பணம் குறித்தான உங்களின் பார்வை, பணத்தை செலவிடும் பழக்க வழக்கங்கள், உங்களின் பொருளாதார பார்வைகள் என்ன என்பது குறித்து இருவரும் திறந்த ஒரு வெளிப்படையான உரையாடலை செய்ய வேண்டும்.

கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள்

உங்களுக்கு கடவும் மற்றும் மத நம்பிக்கைகள் எப்படி உள்ளது. இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களா அல்லது வேறு மதத்தை சேர்ந்தவர்களா என்பதில் இருந்து, இவை எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து நீங்கள் உரையாடியே தீரவேண்டும். குறிப்பாக ஒருவரின் எந்த நம்பிக்கையும் மற்றவரை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் உங்கள் மனதை திறந்துவைத்துக்கொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்