Relationship : ஒரு நல்ல உறவை இழக்கச்செய்யும் செயல்கள் இவைதான்! கவனம் தேவை காதலர்களே!
Relationship : ஒரு நல்ல உறவை இழக்கச்செய்யும் செயல்கள் இவைதான்! கவனம் தேவை காதலர்களே!
உறவுக்கு இருக்கும் அச்சங்கள்
உறவின் மிகப்பெரிய மிகப்பெரிய அச்சம், இருவரும் முயற்சி எடுப்பதை நிறுத்துவது. ஒரு உன்னதமான உறவில் நீங்கள் நுழையும்போது, அது உங்களுக்கு பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது உங்கள் உறவின் புதிய கட்டம். நீங்கள் இருவரும் நீங்களாகவே இருப்பது குறித்து நீங்கள் மகிழ்ச்சியடைந்தால், உங்கள் உறவு மேம்படும்.
ஆனால் அந்த உறவு உங்களை எளிதாக எடுத்துக்கொள்ளும் ஒரு உறவாக இருப்பது குறித்து கவனமாக இருங்கள். இது உங்கள் உறவை பாதிக்கும், அது உங்களால் ஏற்க முடியாததாகவும் இருக்கும்.
உங்கள் பார்ட்னரை ஒரு பொருட்டாக மதியுங்கள்
தம்பதிகளின் முக்கியத்துவங்கள் குறிப்பிட்ட காலங்களுக்குப்பின்னர் மாறிவிடும். சில நேரங்களில் அவர்கள் ஒருவரையும் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. நீங்கள் காதலில் விழுவதற்கான காரணங்கள் நல்ல குவாலிட்டகளாக உங்களுக்கு அப்போது தெரிந்தது.
இப்போது உங்களுக்கு பிடிக்காது அல்லது மாறிவிடும். மகிழ்ச்சியான உறவுக்கு, நீங்கள் உங்கள் அன்பை இருவரும் மாறிமாறி வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொருவரையொருவர் பாராட்ட வேண்டும்.
உரையாடலை தவிர்த்தல்
நல்ல உரையாடல் ஆரோக்கியமான உறவுக்கான திறவுகோல் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த உரையாடல் நேர்மையானதாக இருக்க வேண்டும். சில அசௌகர்யமான உரையாடல்கள் மகிழ்ச்சியில்லாத உணர்வுகளை கொண்டுவருகின்றன.
அதுகுறித்து பேச தேவையில்லை. ஏனென்றால் அது தீர்வல்ல. பிரச்னைகள் தொடரும். மனக்கசப்பு உருவாகும். எனவே நல்ல உரையாடலை வலுவாக்கும் வேலைகளை செய்யுங்கள்.
மன்னிப்பு கோராமை
சில நேரங்களில் உங்களின் செயல்களே உங்களை அசிங்கப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அதற்கு வருந்தி மன்னிப்பு கேட்க தயங்கக்கூடாது. ஒருவருக்கொருவர் தேவையானபோது மன்னிப்பு கேட்டுக்கொள்ளாதவர்கள் ஆரோக்கியமான தம்பதிகளே கிடையாது.
எனவே உங்கள் தவறுகளுக்காக வருந்தி, மன்னிப்பு கேட்பது ஆரோக்கியமான ஒன்று. அது உங்களை தம்பதிகளாக வளரச்செய்கிறது.
அனுதாபம் கொள்ளாமை
இது சவாலான ஒன்று. ஏனெனில், உங்கள் உறவின் அனுபவத்திலே இதில் நீங்கள் எளிதாக மாட்டிக்கொள்வீர்கள். எனவே ஒரு அடி பின்னே சென்று, உங்கள் கோணத்தில் இருந்து பாருங்கள். அப்போது அவர்களின் கோணம் உங்களுக்கு தெரியாது.
அவர்களின கோணம் உங்களுக்கு தெரியவில்லையென்றால், அவர்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென்றால், அவர்கள் தங்களின் குரலை நீங்கள் மதிக்கவில்லை என்று நினைப்பார்கள். இதனால் உங்களுக்கு இடையில் விரிசல் ஏற்படும். இது உங்கள் உரையாடலை போக்கும். அது உங்கள் உரையாடலில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தும்.
இடம் இல்லை
அவர்கள் தம்பதிகள் என்பதை கடந்த அவர்கள் இருவரும் தனித்தனியானவர்கள் என்பதை இருவரும் உணரவேண்டும. உறவுக்கு வெளியே நீங்கள் வாழ்க்கையை தவிர்க்கும்போது, ஒருவரையொருவர் அதிகம் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
இடைவெளிக்கு இங்கு இடமே இல்லை. ஆனால் ஒருவரை ஒருவர் அதிகம் சார்ந்திருப்பதும் நீண்டகால உறவில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
வெறுப்பை வைத்திருப்பது
நீங்கள் வெறுக்கும் ஒரு நபருடன் சேர்ந்து நீங்கள் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியாது. மன்னித்தல் நீண்ட கால உறவுக்கு முக்கியம்.
உங்கள் பார்ட்னரின் தேவைகளை தவிருங்கள்
வெற்றிகரமான உறவுக்கு கூட்டாக இருத்தல் மற்றும் சமரசம் செய்தலை அடிப்படையாகக்கொண்டது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் பார்ட்னரின் தேவைகளை அறிந்துகொள்வது அவசியம். அவர்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்,
ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்காமை
உங்கள் பார்ட்னருடன் போதிய நேரம் ஒதுக்காமல் இருப்பது, வேறுபாடுகளை உருவாக்கும். பரபரப்பான வாழ்வில் உங்கள் பார்ட்னருடன் நேரம் செலவிடுவது சவாலான ஒன்றுதான். ஆனால் நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். உங்களுக்கென்று சிறப்பாக திட்டமிடுங்கள். வெளியே செல்வது, ரொமான்டிக்கான உறவை ஏற்படுத்துவது என திட்டமிட்டு கொண்டாடுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்