HT Love Education: ரிலேஷன்ஷிப் பிரச்சினை; வாட்ஸ் ஆப்-ல் பிளாக் செய்வது சரியா?; பார்ட்னர பேச வைக்க என்ன செய்யணும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ht Love Education: ரிலேஷன்ஷிப் பிரச்சினை; வாட்ஸ் ஆப்-ல் பிளாக் செய்வது சரியா?; பார்ட்னர பேச வைக்க என்ன செய்யணும்?

HT Love Education: ரிலேஷன்ஷிப் பிரச்சினை; வாட்ஸ் ஆப்-ல் பிளாக் செய்வது சரியா?; பார்ட்னர பேச வைக்க என்ன செய்யணும்?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 10, 2024 05:07 AM IST

ரியாக்‌ஷன் அப்படின்னா அப்படியே வெடிச்சு பேசுறது. ரெஸ்பாண்ட் அப்படின்னா… ஆமா, என் மேலதான் தப்பு… எனக்கு தெரியும் நீ கோபத்துல இருப்ப அப்படின்னு.... 2, 3 நாட்கள் டைம் எடுத்துக்கோ... அதுக்கப்புறமா பேசிக்கலாம்… இந்த மாதிரியான தொனியில பேசுறது..

ரிலேஷன்ஷிப்பில் பிரச்சினை என்றால் பேசாமல் இருப்பது சரியா?
ரிலேஷன்ஷிப்பில் பிரச்சினை என்றால் பேசாமல் இருப்பது சரியா?

இந்த பிரிவு மாதங்களை கடக்கும் போது, பார்ட்னரிடம் பேச வேண்டும் என்று தோன்றினால் கூட, அவர்களுக்குள் இருக்கும் ஈகோ, அவர்களை அப்படியே தொடர்பு கொள்ளாமலேயே வைத்திருக்கிறது. 

இது போன்ற நேரங்களில் இவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த வரிசையில், அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரு ஸ்டேட்டஸ் பரவலான கவனத்தை பெற்று இருக்கிறது.

அது, காதலில் பிரிவு வரும் சமயத்திலும், ஒருவருக்கொருவர் ஒருவர் சரிவர புரிந்து கொள்ளாத சமயத்திலும், அவர்களை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்காமல், தன்னுடைய உணர்ச்சிகளை சரிவர கடத்தாமல், பார்ட்னரை அப்படியே விட்டு விட வேண்டும். நீங்கள் அவருக்கு வேண்டுமென்றால் அவர் தானாக வருவார்கள் என்பது. 

இது உண்மையில் நடைமுறையில் சாத்தியமா? என்பதை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உளவியல் நிபுணராக பணியாற்றி வரும் மருத்துவர் பார்கவ் ஸ்ரீவேலுவை தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் பேசும் போது, “ ரிலேஷன்ஷிப்ல பிரச்சினை வந்து, இரண்டு பேரும் பிரிஞ்சிருக்குற மாதிரியான சூழ்நிலை வந்திடுச்சு அப்படின்னா, அத சரி செய்ய ஒரு டெக்னிக் இருக்கு. அந்த மாதிரி சமயத்துல பேசணும்னு நினைக்கிற நபர், ரியாக்ட் பண்ணாம.. ரெஸ்பாண்ட் பண்ணனும். 

ரியாக்‌ஷன் அப்படின்னா, அப்படியே வெடிச்சு பேசுறது. ரெஸ்பாண்ட் அப்படின்னா… ஆமா, என் மேலதான் தப்பு… எனக்கு தெரியும் நீ கோபத்துல இருப்ப அப்படின்னு.... 2, 3 நாட்கள் டைம் எடுத்துக்கோ... அதுக்கப்புறமா பேசிக்கலாம்… இந்த மாதிரியான தொனியில பேசுறது.. 

அந்த பேச்சு எப்படி இருக்கணும்னு அப்படின்னா, தவற ஏத்துக்குற மாதிரியும், நம்பிக்கைய கொடுக்குற மாதிரியும் இருக்கணும். நீங்க அப்படியே பேசாமலேயே இருந்தீங்க அப்படின்னா, அவங்க உங்கள பத்தி என்ன நினைக்கிறாங்களோ.. அதுதான் சரின்னு நினைச்சுப்பாங்க.. 

அதனால ரெண்டு பேரும் ஒரு செளகரியாமான சூழ்நிலைக்கு வந்ததுக்கு அப்புறமா, கண்டிப்பா உட்கார்ந்து பேசணும்.. அப்படி உட்கார்ந்து பேசும் போதுதான், உங்க பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். 

ஒரு வேளை நீங்க வருஷ கணக்கா பேசாமலே இருக்குறீங்கன்னு வச்சுக்குவோமே... இறுதியில கேட்டா, நீயும் பேசல... நானும் பேசலன்னு சொல்லிடுவாங்க.

அதனால ரிலேஷன்ஷிப்ல பிரச்சினை வந்தா, பார்ட்னருடன் பேசமலே இருந்து, அவங்க திரும்பி வரும் வர வெயிட் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு சொல்றதெல்லாம் புரிதல் இல்லாத வார்த்தைகள். இதுல எவ்வளவு காலம் கழிச்சு பார்ட்னருடம் பேச முயற்சி செய்யணும் அப்படிங்கிற கேள்வி வரலாம். அது நபருக்கு நபர் மாறுபடும்.

ரிலேஷன்ஷிப்ல காதலும், மரியாதையும் ரொம்ப முக்கியம். வெறும் காதல் மட்டும் இருந்துச்சு அப்படின்னா… அது டாக்சிக்கா மாறிடும்.. எ.கா பார்ட்னர் தினமும் இரவு லேட்டா வர்றாரு அப்படின்னா... நான் உன்ன எவ்வளவு லவ் பண்றேன்.. அப்படி இருக்கும் போது, நீ எப்படி இப்படி வரலாம்... என்னோட லவ்க்கு அவ்வளவுதான் மரியாதையா? இப்படி கேக்குறது லவ். 

உனக்கு பார்ட்டி இருக்கு... கண்டிப்பா அங்க நீ போகணும்னு எனக்கு தெரியும்... ஆனா தினமும் அங்க போயிட்டு இப்படி லேட்டா வராத ப்ளீஸ்… இப்படி பேசுறது மரியாதை.. இந்த மாதிரியான அணுகுமுறை நல்ல பலனை கொடுக்கும். 

இன்னொரு விஷயம் ரிலேஷன்ஷிப் பிரச்சினையில யார் முதல்ல வந்து பேசுறது அப்படிங்கிறதுல தயக்கம் இருக்கு. அந்த மாதிரி நேரத்துல வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லலாம் அல்லது ஒரு பேப்பர்ல உங்களுக்கு தோன்றத எழுதி அவங்க கண்ணுல படுற மாதிரி வைக்கலாம் அந்த மாதிரியான நேரங்கள்ல நீங்க இந்த மாதிரியான கம்யூனிகேஷனை கையில எடுக்கலாம். ” என்று பேசினார். 

மருத்துவர் விபரம்: 

Dr.Bhargav Sirivelu

Consultant psychiatrist

Veeras hospital and Apollo hospital

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.